திருவாங்கூர் ஸ்டேட் வங்கி
திருவாங்கூர் ஸ்டேட் வங்கி (SBT) கேரளாவில் நிறுவப்பட்ட ஸ்டேட் வங்கி குழுமத்தைச் சேர்ந்த வங்கியாகும். இந்த வங்கிக்கு கேரள மாநிலத்தில் உள்ள கிளைகள் மற்றும் இந்தியாவின் பிற 16 மாநிலங்களில் உள்ள கிளைகள் உட்பட மொத்தம் 1013 கிளைகள் உள்ளன.
வகை | பொது |
---|---|
நிலை | 2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்கப்பட்டது. |
நிறுவுகை | திருவனந்தபுரம், 1945 |
தலைமையகம் | குழும மையம், பூஜப்புரா, திருவனந்தபுரம் கேரளா இந்தியா |
முதன்மை நபர்கள் | ப. நந்தகுமாரன், மேலாண்மை இயக்குநர் |
தொழில்துறை | வங்கி காப்பீடு மூலதன சந்தைகள் மற்றும் தொடர்புடைய தொழில்கள் |
உற்பத்திகள் | கடன்கள் கடனட்டைகள், சேமிப்பு முதலீட்டு சாதனங்கள் ஆயுள் காப்பீடு முதலியன. |
இணையத்தளம் | திருவாங்கூர் ஸ்டேட் வங்கி |
தமிழ்நாடு மாநிலத்தில் மேலும் கிளைகள் தொடங்கி வங்கிச் சேவையை விரிவாக்கம் செய்யவிருக்கும் திருவாங்கூர் ஸ்டேட் வங்கி அதன் மண்டல அலுவலகத்தை மதுரையில் திறக்கவிருக்கிறது. தமிழ்நாடு மாநிலத்தில் நடைபெறவிருக்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்கென்றே புதிதாக பொது மேலாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றிணைப்பு
தொகு2016 ஆம் ஆண்டில், திருவாங்கூர் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளான பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவிதாங்கூர், மைசூர் ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டது, இதற்கு இந்திய அரசு 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இறுதியாக 2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ ந. வினோத் குமார் (7 ஆகத்து 2017). "வங்கிகளை இணைக்கலாமா?". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2017.