பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி

பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் என்பது இந்தியாவில் செயல்பட்டுவரும் 26 பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். மேலும் இவ்வங்கி பாரத ஸ்டேட் வங்கியின் 6 துணை வங்கிகளில் ஒன்றாகும். 2014 ஆவது ஆண்டு நிலவரப்படி இவ்வங்கி 1,140 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இக்கிளைகளில் பெரும்பாலானவை ராஜஸ்தான் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.[1][2][3][4] 2016 ஆம் ஆண்டில், பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளான பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டது, இதற்கு இந்திய அரசு 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இறுதியாக 2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன.[5]

பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி
வகைபொதுத்துறை வங்கி
நிலை2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்கப்பட்டது.
நிறுவுகைஜெய்ப்பூர், 1963
தலைமையகம்தலைமையிடம்
திலக் மார்க்,
ஜெய்ப்பூர் 302 005  இந்தியா
முதன்மை நபர்கள்அருந்ததி பட்டாச்சார்யா (தலைவர்), ஜோதி கோஷ் (மேலாண்மை இயக்குநர்)
தொழில்துறைவங்கியியல்
ஆயுள் காப்பீடு
முதலீட்டுச் சந்தை மற்றும் தொடர்புள்ள தொழில்கள்
உற்பத்திகள்கடன்கள், சேமிப்புகள், மூதலீடுகள், மேலும் பல.
நிகர வருமானம் Rs. 730.24 கோடி (மார்ச் 2013)
இணையத்தளம்www.sbbjbank.com


மேற்கோள்கள்

தொகு
  1. http://info.shine.com/Company/State-Bank-of-Bikaner-and-Jaipur/373.aspx பரணிடப்பட்டது 2010-05-25 at the வந்தவழி இயந்திரம் Company Overview: State Bank of Bikaner and Jaipur
  2. http://sbbjbank.com/About-Us/history.htm பரணிடப்பட்டது 2010-07-20 at the வந்தவழி இயந்திரம் SBBJ History
  3. "State Bank of Bikaner & Jaipur capitalises on robust earnings". Capital Market Publishers India. 24 ஏப்ரல் 2009 இம் மூலத்தில் இருந்து 2015-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923200350/http://www.capitalmarket.com/CMEdit/story2-0.asp?SNo=309201. 
  4. "State Bank of Bikaner and Jaipur 2009 profit up at Rs 403.45 crore". Equity Bulls. 4 ஏப்ரல் 2009. http://www.equitybulls.com/admin/news2006/news_det.asp?id=50353. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. ந. வினோத் குமார் (7 ஆகத்து 2017). "வங்கிகளை இணைக்கலாமா?". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2017.

வெளியிணைப்புகள்

தொகு