ஐதராபாத் ஸ்டேட் வங்கி

ஐதராபாத் ஸ்டேட் வங்கி அல்லது ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் என்பது இந்தியாவில் செயல்பட்டுவரும் 27 பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இவ்வங்கி 1941 ஆம் ஆண்டில், ஐதராபாத்தின் அப்போதைய அரசரான மிர் உஸ்மான் அலி கான் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக 1948 ஆவது ஆண்டில் மேற்கோள்ளப்பட்ட போலோ நடவடிக்கையின் மூலம் ஐதராபாத் மாநிலம் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பகுதி ஆனது. 1950ஆம் ஆண்டு சுமார் 50 கிளைகளுடன் ஐதராபாத்தில் மட்டும் செயல்பட்ட இவ்வங்கி, படிப்படியாக மற்ற மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு முதல் பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கியாகச் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தலைமை ஐதராபாதில் உள்ளது. இந்திய முழுவதும் 1700 கிளைகளும் 12800 ஊழியர்களும் பணி புரிகின்றனர். தெலுங்கனா மாநிலத்தின் (650 கிளைகள்) தலைமை வங்கியாளராக இந்த வங்கி திகழ்கின்றது.

ஐதராபாத் ஸ்டேட் வங்கி
STATE BANK OF HYDERABAD
வகைபொது நிறுவனம் (மும்பை பங்குச் சந்தை) & (இந்திய தேசிய பங்கு சந்தை)
நிலை2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்கப்பட்டது.
நிறுவுகைஅரசர் மிர் உஸ்மான் அலி கான், ஐதராபாத் ஸ்டேட் வங்கி ஐதராபாத், 8 ஆகஸ்டு 1941
தலைமையகம்தலைமை அலுவலகம்,
Gunfoundry,
ஐதராபாத் இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா முழுவதும்.
முதன்மை நபர்கள்அருந்ததி பட்டாச்சார்யா (தலைவர்),
சாந்தனு முகர்ஜி (நிர்வாக இயக்குநர்)
தொழில்துறைவங்கியியல்
ஆயுள் காப்பீடு
முதலீட்டுச் சந்தை மற்றும் தொடர்புடைய தொழில்கள்
உற்பத்திகள்வைப்பு நிதிகள், தனியர் வங்கித் திட்டங்கள், சிறு மற்றும் நடு தொழில்நிறுவன வங்கித் திட்டங்கள் (SME Banking Schemes)
வருமானம்-
நிகர வருமானம்-
மொத்தச் சொத்துகள்767 பில்லியன்
உரிமையாளர்கள்இந்திய அரசு
தாய் நிறுவனம்பாரத ஸ்டேட் வங்கி (அதிக விழுக்காடு பங்குகளை வைத்திருப்பவர்)
இணையத்தளம்www.sbhyd.com

சேவைகள் தொகு

இவ்வங்கி சேமிப்பு கணக்குகள் மட்டுமின்றி, இணைய வழி பரிவர்த்தனைகளும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது[1]

ஒன்றிணைப்பு தொகு

2016 ஆம் ஆண்டில், ஐதராபாத் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை வங்கிகளான பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி, ஐதராபாத் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகள், பாரத ஸ்டேட் வங்கியுடன் ஒன்றிணைக்க திட்டமிடப்பட்டது, இதற்கு இந்திய அரசு 2017 பிப்ரவரி 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இறுதியாக 2017 மார்ச் 31 அன்று பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-12-06. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20.
  2. ந. வினோத் குமார் (7 ஆகத்து 2017). "வங்கிகளை இணைக்கலாமா?". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 7 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராபாத்_ஸ்டேட்_வங்கி&oldid=3576799" இலிருந்து மீள்விக்கப்பட்டது