உயரம்
உயரம் (ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது ஒரு பொருளின் (மேசை, கட்டடம், மலை, மரம், கொடிக்கம்பம்) பரும அளவில் நிலப்பரப்புக்கு (செங்குத்தான) நிலைக்குத்துத் திசையில் அளக்கப்படும் தொலைவு ஆகும். முத்திரட்சி (முப்பரிமானம்) கொண்ட ஒரு பொருளின் பரும அளவை கிடைமட்டத் (தரையில் படுக்கை வாட்டில்) தளத்தில் இருக்கும் நீட்சியை (அல்லது அகற்சியை) நீளம் என்றும் அகலம் என்றும் குறிப்பிடப்படும். இவையும் கிடைமட்டத்தில் (படுக்கை வாட்டில்) ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருப்பவைதான். ஆனால் உயரம் என்பது கிடை மட்டத்தளத்தில் இருந்து செங்குத்தாக எழும் திசையில் உள்ள தொலைவு ("உயர்ச்சி") ஆகும். நீளம் என்னும் சொல் எத்திசையிலும் உள்ள தொலைவக் குறிக்கப் பொதுச்சொல்லாகவும் பயன்படுகின்றது என்பதை xstggzrtttgsgtcgf πουτανάκιαநினைவில் கொள்ளல் வேண்டும். இணைத்துள்ள படத்தில் நீளம், அகலம் உயரம் ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன.
விண்வெளியில் நிலப்பரப்பு என்று ஏதும் இல்லாததால், முத்திரட்சி கொண்ட ஒரு பொருளுக்கு ஒன்றுக்கொன்று செங்குத்தான முத்திசை நீட்சிகள் இருந்த போதிலும், உயரம் என்று சிறப்பித்துக் கூற எதுவும் இல்லை. மூன்று செங்குத்தான திசைகளில் நீளங்கள் குறிப்பிடலாம். நிலப்பரப்பில் புவி ஈர்ப்பு திசைக்கு நேர் எதிரான திசையில் விரியும் நீட்சியை உயரம் என்றழைக்கப்படும்.