திருவாங்கூர் கொச்சி
திருவாங்கூர்-கொச்சி (Travancore-Cochin) அல்லது திரு-கொச்சி (மலையாளம்: തിരു-കൊച്ചി, திரு-கொச்சி) என்பது இந்தியவாவில் குறைந்த காலம் (1949–1956) இருந்த ஒரு மாநிலமாகும். இந்த மாநிலத்தின் இயற்பெயர் திருவாங்கூர் மற்றும் கொச்சி ஐக்கிய மாகாணம் (United State of Travancore and Cochin) என்பதாகும் இது 1949 சூலை 1 அன்று, இரண்டு மன்னர் அரசுகளான, திருவாங்கூர் மற்றும் கொச்சி ஆகியவற்றை இணைத்து திருவனந்தபுரத்தை தலைநகராக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இதன் பெயர் 1950 சனவரியில் இல் திருவாங்கூர்-கொச்சி மாநிலம் என பெயர் மாற்றப்பட்டது.
திருவாங்கூர் கொச்சி ஐக்கிய மாகாணம் (1949–1950) திருவாங்கூர்-கொச்சி மாநிலம் (1950–1956) തിരു-കൊച്ചി | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1949–1956 | |||||||||||||
கொடி | |||||||||||||
![]() இந்தியாவில் திருவாங்கூர்-கொச்சி, 1951 | |||||||||||||
தலைநகரம் | திருவனந்தபுரம் | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | மலையாளம், தமிழ், ஆங்கிலம் | ||||||||||||
அரசாங்கம் | மாநிலம் | ||||||||||||
மன்னர் | |||||||||||||
• 1949–1956 | சித்திரைத் திருநாள் பலராம வர்மன் | ||||||||||||
முதலமைச்சர் | |||||||||||||
• 1949–1951 | பட்டம் டி. கே. நாராயணப் பிள்ளை | ||||||||||||
• 1951–1952 | சி. கேசவன் | ||||||||||||
• 1952–1954 | ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில் | ||||||||||||
• 1954–1955 | பட்டம் ஏ. தாணு பிள்ளை | ||||||||||||
• 1955–1956 | பன்னம்பிள்ளே கோவிந்த மேன்ன் | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 1949 | ||||||||||||
• முடிவு | 1956 | ||||||||||||
நாணயம் | இந்திய ரூபாய் | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | ![]() |
வரலாறு தொகு
திருவாங்கூரின் காங்கிரஸ் பிரதமராக இருந்த பட்டம் டி.கே. நாராயணப் பிள்ளை, திருவாங்கூர்-கொச்சியின் முதலமைச்சராக ஆனார். முதல் தேர்தல் 1951 நடந்தது அதில் காங்கிரஸ் வெற்றிபெற்று, ஏ. ஜே. ஜோன் அன்னபரம்பள்ளி முதலமைச்சராக ஆனார், இவர் 1954 வரை ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்.[1]
திருவாங்கூர் ஆட்சியாளரே திருவாங்கூர்-கொச்சியின் ஆளுநராக (ராஜபிரமுகர் என அழைக்கப்பட்டார்) நியமிக்கப்பட்டார். கொச்சி மகாராஜவுக்கு துணை உபராஜபிரமுகர் பதவி கொடுக்க முன்வந்தபொது, ஆட்சி அதிகாரத்தை தந்தபிறகு எந்த பட்டத்தையும் ஏற்க மறுத்துவிட்டார். கொச்சி மகாராஜா அரச குடும்பத்தின் மூத்த வலிய தம்புரானை அழைத்து மக்களின் நன்மைக்காக நிபந்தனையின்றி அரச அதிகாரங்களை கைவிட்ட வேண்டும் என்று கூறினார்.[2] 1954 இல் பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் பட்டம் ஏ. தாணுபிள்ளை முதலமைச்சராக இருந்தபோது, திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் மதராஸ் மாநிலத்துடன் அதன் அண்டை பகுதியான தென் திருவிதாங்கூரின் தமிழ் பேசும் பகுதிகளை இணைக்கக்கோரி பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டத்தை வன்முறையால் அடக்க உள்ளூர் போலீசார் முயன்று அதனால் பொதுமக்கள் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் மார்தாண்டம், புதுக்கடை ஆகிய இடங்களில் கொல்லப்பட்டு, திருவாங்கூர்-கொச்சியின் இந்த இணைப்பால் தமிழ் மக்கள் ஈடு செய்ய முடியாத அளவுக்கு அந்நியப்பட்டுப்போயினர்.
1956 ஆம் ஆண்டு, மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், திருவாங்கூரின் நான்கு தெற்கு வட்டங்களான, தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டையின் ஒரு பகுதி சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 திருவிதாங்கூர்-கொச்சியுடன் மதராஸ் மாநிலத்தின் மலபார் மாவட்டம் புதியதாக கேரள மாநிலத்தை உருவாக்க ஏதுவாக, அதனுடன் இணைக்கப்பட்டது. ராஜபிரமுகருக்கு பதிலாக இந்திய ஜனாதிபதியால் மாநிலத் தலைவராக ஆளுநர் நியமிக்கப்பட்டார்.
முதலமைச்சர்கள் தொகு
முதலமைச்சர் | பொறுப்பு ஏற்பு | பொறுப்பு முடிவு | தடவை | கட்சி | தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி | |
---|---|---|---|---|---|---|
1 | பட்டம் டி. கே. நாராயணப் பிள்ளை | 1949 சூலை 1 | 1951 சனவரி | 1 | இந்திய தேசிய காங்கிரசு | திருவாங்கூர் |
2 | சி. கேசவன் | 1951 சனவரி | 1952 மார்ச் 12 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | திருவாங்கூர் |
3 | ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில் | 1952 மார்ச் 12 | 1954 மார்ச் 16 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | திருவாங்கூர் |
4 | பட்டம் ஏ. தாணு பிள்ளை | 1954 மார்ச் 16 | 1955 பெப்ரவரி 10 | 1 | பிரஜா சோசலிஸ்ட் கட்சி | திருவாங்கூர் |
5 | பன்னம்பிளே கோவிந்த மேனன் | 1955 பெப்ரவரி 10 | 1956 மார்ச் 23 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | கொச்சி |
6 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 1956 மார்ச் 23 | 1957 ஏப்ரல் 5 |
துணைப்பிரிவுகள் தொகு
மாநிலம் 4 மாவட்டங்களாகவும் 36 வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.[3] மாவட்டம்
வட்டம் | |
---|---|
திருவனந்தபுரம் | தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றங்கரை, திருவனந்தபுரம், நெடுமாங்காடு, சிரையங்கீழு |
கொல்லம் | கொல்லம், கொட்டாரக்கரை, பத்தனாபுரம், செங்கோட்டை, குன்னத்தூர், கருநாகப்பள்ளி, கார்த்திகபள்ளி, மாவேலிக்கரா, பத்தனம்திட்டா, திருவல்லா, அம்பலப்புழா, சேர்த்தலை |
கோட்டையம் | கோட்டயம், சங்கனாச்சேரி, வைக்கம், மூவாற்றுப்புழை (கோத்தமாங்குளம் உட்பட), தொடுபுழா, மீனச்சில், தேவிகுளம், பீர்மேடு |
திருச்சூர் | பரவூர், குன்னத்துன்துநாடு, கொச்சி-கண்ணையனூர், கொடுங்ஙல்லூர், முக்குண்டபுரம், திருச்சூர், தலபிள்ளை, சித்தூர் |
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "A. J. John, Anaparambil". http://cs.nyu.edu/kandathi/a_j_john.html.
- ↑ "Glimpses of a historic moment". New Indian Express (New Indian Express). http://newindianexpress.com/cities/kochi/article112248.ece.
- ↑ K. M. Mathew, தொகுப்பாசிரியர் (2006). Manorama Year Book. மலையாள மனோரமா. பக். 116.