வைக்கம் (Vaikom) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு நகராட்சியாகும்.[3] வட்டத் தலைநகராக இருக்கும் இந்த ஊர் வைக்கம் போராட்டம் மூலம் அறியப்படும் முக்கிய நகரமாகும். கோட்டயத்திற்கு அருகே இந்த ஊர் உள்ளது.

வைக்கம்
Vaikom
நகராட்சி[1]
வைக்கம் சிவன் கோவில்
வைக்கம் Vaikom is located in கேரளம்
வைக்கம் Vaikom
வைக்கம்
Vaikom
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
வைக்கம் Vaikom is located in இந்தியா
வைக்கம் Vaikom
வைக்கம்
Vaikom
வைக்கம்
Vaikom (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°45′00″N 76°23′34″E / 9.75000°N 76.39278°E / 9.75000; 76.39278
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோட்டயம்
தாலுக்காVaikom
அரசு
 • வகைநகராட்சி மன்றக் குழு
 • தலைவர்ரேணுகா ரத்தீசு (இந்திய தேசிய காங்கிரசு)
 • நகராட்சி மன்றக் குழுவைக்கம்
பரப்பளவு
 • மொத்தம்8.73 km2 (3.37 sq mi)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்23,234
 • அடர்த்தி2,700/km2 (6,900/sq mi)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
686141
தொலைபேசிக் குறியீடு04829
அருகிலுள்ள நகரம்கோட்டயம், கொச்சி

வைக்கம் நகரத்தில் இந்துக்கள் மிகப்பெரிய மத சமூகமாக உள்ளனர். மக்கள் தொகையில் இவர்கள் 85% உள்ளனர். கிறித்துவர்கள் 12% மற்றும் முசுலிம்கள் 3% என இந்நகரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.[4]

வைக்கம் போராட்டம்

தொகு

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்த வைக்கம் சோமநாதர் கோயிலில் வழிபாட்டு உரிமை நம்பூதிரிகளின் வசம் இருந்தது. இந்தக் கோயிலுக்குள் ஈழவர்களும் அவர்களுக்கு கீழ் வகுப்பினராகக் கருதப்பட்ட சாதிகளும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் இந்தக் கோயிலைச் சுற்றியிருக்கும் தெருக்களில் நடப்பதற்குக் கூட தடை விதிக்கப்பட்டிருந்தது.

1905ல் இந்த அநீதிக்கு எதிராக ஈழவர்கள் நடத்திய போராட்டம் திவான் வேலுப்பிள்ளை என்பவரால் முறியடிக்கப்பட்டது. பின்னர் திருவிதாங்கூரில் சட்டசபையில்ல் ஸ்ரீ நாராயணகுருவின் ஸ்ரீ நாராயணகுரு பரிபாலன சபை எனும் இயக்கத்தைச் சேர்ந்த பலர் உறுப்பினர்களாக ஆன போது மீண்டும் இந்தக் கோரிக்கை எழுந்தது. ஆனால் இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்தது. 1924 ஜனவரி 24 ல் டி. கே. மாதவன் முன்முயற்சியில் வைக்கம் ஆலயத்திலும், அதனைச் சுற்றிலும் உள்ள தெருக்களிலும் நுழைவதற்கான வைக்கம் போராட்டம் ஆரம்பித்தது.

இப்போராட்டம் காந்தியின் வழிகாட்டல்களின் படி காங்கிரசு கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ நாராயணகுருவின் இயக்கத்தவர் பெருவாரியாக பங்கெடுத்தனர். தமிழக காங்கிரஸ் சார்பில் ஈ. வெ. இராமசாமி, கோவை அய்யாமுத்துக் கவுண்டர், எம்.வி.நாயுடு, இராஜகோபாலாச்சாரி போன்றோர்களும் முக்கியப் பங்கெடுத்தனர். இப்போராடத்தில் மகாத்மா காந்தியும் 1925 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈ. வெ. இராமசாமி ஐந்து மாதங்கள் வரை சிறையில் இருந்தார் என்பது நினைவில் கொள்ளத் தக்கது.

மேற்கோள்கள்

தொகு
  1. https://lsgkerala.gov.in/system/files/2017-10/localbodies.pdf
  2. "Census of India: Search Details". Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 12 May 2014.
  3. https://lsgkerala.gov.in/system/files/2017-10/localbodies.pdf
  4. "Vaikom Municipality City Population Census 2011-2019 | Kerala". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-08-01.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வைக்கம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வைக்கம்&oldid=3995513" இலிருந்து மீள்விக்கப்பட்டது