டி. கே. மாதவன்

இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்

டி. கே. மாதவன் ('T. K. Madhavan, 2 செப்டம்பர் 1885 – 27 ஏப்ரல் 1930) இந்தியாவில் சமூக மாற்றத்திற்கு பாடுபட்ட ஒரு பத்திரிக்கையாளரும் புரட்சியாளரும் ஆவார்.[2] கேரளத்தைச் சேர்ந்த இவர் வைக்கம் இயக்கத்தின் மூலம் தீண்டாமைக்கு எதிராக முன் நின்று போராடினார்.

டி. கே. மாதவன்
T. K. Madhavan
பிறப்புசெப்டம்பர் 2, 1885(1885-09-02)
கார்த்திகப்பள்ளி
இறப்பு27 ஏப்ரல் 1930(1930-04-27) (அகவை 44)
தேசியம்இந்தியர்
பணிசமூக ஆர்வலர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்
வாழ்க்கைத்
துணை
நாராயணி
பிள்ளைகள்2[1]

காந்தியுடன் சந்திப்பு தொகு

காந்தியை திருநெல்வேலியில் சந்தித்த இவர் வைக்கத்திற்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தார். வைக்கம் சத்தியாகிரகம் என்பது கேரளத்தில் உள்ள வைக்கம் எனும் சிற்றூரில் உள்ள கோவில் தெருக்களில் பிற்படுத்தப்பட்ட மக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிரான போராட்டமாகும். காந்தி இவ்விஷயத்தை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பணிகளில் ஒன்றாக அதனை எடுத்துக்கொண்டார்.

இறப்பு தொகு

மாதவன் 1930ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27 ஆம் தேதி நமது இல்லத்தில் இயற்கை எய்தினார். அவரது பணியை போற்றும் விதமாக ஒரு நினைவுச்சின்னம் செட்டிகுளம் கரை என்னும் ஊரில் எழுப்பப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._மாதவன்&oldid=3556548" இருந்து மீள்விக்கப்பட்டது