திருவிதாங்கூர் அரச குடும்பம்
திருவிதாங்கூர் அரச குடும்பம் (Travancore royal family) என்பது திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஆளும் இல்லமாக இருந்தது. 1949 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் இந்தியாவுடன் இணைந்தபோது அவர்கள் ஆளும் உரிமைகளை இழந்தனர். மேலும் அவர்களின் மீதமுள்ள சலுகைகள் 1971 இல் அகற்றப்பட்டன. இந்த குடும்பம் ஆய்/ வேணாடு குடும்பம், சேரர், பாண்டியர்கள் மற்றும் சோழர்கள் ஆகியவர்களிடமிருந்து வந்தது. அந்த வம்சாவளியின் ஆட்சியாளர் மகாராஜா மூலம் திருநாள், மகாராஜா சித்திரைத் திருநாளின் குடும்பம் மற்றும் வாரிசுகள் ஆவர்.
திருவிதாங்கூர் அரச இல்லம் | |
---|---|
நாடு | திருவிதாங்கூர் |
தாயில்லம் | சேரர் |
விருதுப் பெயர்கள் | திருவிதாங்கூரின் மகாராஜா |
நிறுவிய ஆண்டு | 1750 |
நிறுவனர் | மார்த்தாண்ட வர்மர் |
கலைப்பு | 1949 |
அரச குடும்பம் மாற்றாக குபக சொரூபம், திர்பாப்ப்பூர் சொரூபம், வேணாடு சொரூபம் மற்றும் வஞ்சி சொரூபம் என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் இன்று அதன் இருக்கை இருந்தது. திருவிதாங்கூரின் கடைசி ஆளும் மகாராஜா சித்திரைத் திருநாள் பலராம வர்மன் ஆவார். இவர் 1991 சூலை 20 அன்று பக்கவாதத்தால் இறந்தார். இவருடைய இளைய சகோதரர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மன் 2013 திசம்பர் 16 மருத்துவமனையில் காலமானார். அவருக்குப் பின் மகாராணி கார்த்திகை திருநாள் லட்சுமி பாய் மற்றும் லெப்டினன்ட் கர்ணல் ஜி. வி. ராஜா ஆகியோரின் மகன் மூலம் திருநாள் இராம வர்மன் மகாராஜா பட்டத்தைப் பெற்றார். [1]
வம்சத்தின் வரலாறு மற்றும் புனைவுகள்
தொகுகுடும்பம் பண்டைய மன்னர்களிடமிருந்து வந்துள்ளது. [2] வேணாட்டுத் தலைவரின் முதல் பதிவு செய்யப்பட்ட கல்வெட்டு பின்னர் திருவிதாங்கூரில் காணப்பட்டது. யூத மற்றும் கிறிஸ்தவ வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் மற்றும் சலுகைகளைப் பற்றி செப்புத் தகடு மானியங்களில் காணப்படுகிறது. [3] கேரளாவின் ஆட்சியாளர்கள், கிழக்கு கடற்கரையின் தென்னிந்திய இராச்சியங்களின் பெருமாள் ஆட்சியாளர்கள், கேரளாவை ஆட்சி செய்ய நியமிக்கப்பட்டனர். [4] இதற்கு வேணாட்டின் தலைவர் உட்பட நாயர் தலைவர்களால் சாட்சிகள் வழங்கப்பட்டுள்ளன. [5]
தற்போதுள்ள புராணங்களின்படி, திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் நிறுவன உறுப்பினர்கள் [6] நருமதை ஆற்றின் கரையிலிருந்து கேரளாவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது . மற்றொரு கூற்று என்னவென்றால், பரசுராமரே வம்சத்தின் முதல் அதிகாரப்பூர்வ ஆட்சியாளராக முடிசூட்டப்பட்டார். இருப்பினும் இதற்கு வரலாற்று ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. அவர்களின் வரலாற்றை பொ.ச. 820 வரை அறியலாம் என்று ஒரு கூற்று உள்ளது. இது மூன்று தென்னிந்திய மண்டல இராச்சியங்களின் பிற்காலச் சேரர்களிடமிருந்து வந்தவர்கள் என்ற கூற்று அடிப்படையில் அமைந்துள்ளது. அதாவது சேர மண்டலம், பாண்டிய மண்டலம் மற்றும் சோழ மண்டலம். மற்றொரு புராணத்தின் படி, சேர குடும்பத்தின் ஒரு கிளை கேரள பிராந்தியத்தின் வடக்கே அனுப்பப்பட்டது. அங்கு அவர்கள் குடியேறி புலி நாடு அரச குடும்பம் அல்லது பின்னர் வந்த கோலாதிரிகள் என்று அறியப்பட்டனர். அதே நேரத்தில் பாண்டிய படையெடுப்புகளைத் தடுக்க மற்றொரு கிளை தெற்கே சென்றது. சேர வம்சத்தின் இரண்டு கிளைகளில் ஒன்று வேணாடு /கொல்லத்திற்கு மாற்றப்பட்டது, அங்கு அது ஆயி இராச்சியத்துடன் இணைந்தது. இந்த சேர ஆய் வம்சத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆட்சியாளராக சங்கிரமாதிரா இரவிவர்மன் குலசேகரன் (1266-1314) இருந்தார். இந்த சேர-ஆய் வம்சத்தின் பெயரால் ஏராளமான இடங்கள் பெயரிடப்பட்டுள்ளன. இரவி வர்மன் பாண்டியர்கள் மற்றும் சோழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்து மதுரை மற்றும் காஞ்சிபுரத்தில் ஏகாதிபத்திய முடிசூட்டு விழாக்களை நிகழ்த்தினார். இதனால் இப்பகுதியில் பாண்டிய மேலாதிக்கத்தை தூக்கி எறிந்தார். [7]
எவ்வாறாயினும், இவரது வெற்றி குறுகிய காலமே இருந்தது. மேலும், இவருக்குப் பிறகு இவரது வாரிசுகள் பாண்டியர்கள் மற்றும் சோழர்களின் இந்த கையகப்படுத்துதல்களை தொடர முடியவில்லை. 1305 ஆம் ஆண்டில் ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் ராணிகள் என்று அழைக்கப்படும் கோலாத்திரி வம்சத்தைச் சேர்ந்த இரண்டு இளவரசிகளை இரவிவர்மன் குலசேகரன் தத்தெடுத்தார். இரவி வர்மனுக்குப் பின் இருந்த மன்னர்களின் வரிசை, மருமக்கதாயம் சட்டத்தைப் பின்பற்றியது. [8] அரச குடும்பம் பெண் வரிசையில் தொடர்ந்தது. கோலாத்திரி குடும்பத்திலிருந்து இளவரசிகள் தத்தெடுக்கப்பட்டனர். சமீபத்திய தத்தெடுப்பு 1994 இல் இருந்தது. [9]
17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி செய்த உமயாம்மா ராணி ஒரு முக்கிய ஆட்சியாளராக இருந்தார். "நவீன திருவிதாங்கூரை உருவாக்கியவர்" என்றழைக்கப்படும் மார்த்தாண்ட வர்மா மற்றும் தர்ம ராஜா ஆகியோர் சக்திவாய்ந்த ஆட்சியாளர்களாக இருந்தனர். இவர்கள் மாநிலத்தில் முடியாட்சியின் அதிகாரத்தை மீண்டும் நிறுவி, பிரபுக்களின் சக்தியை அழித்தனர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த இராச்சியம் பிரிட்டிசாரின் கீழ் ஒரு சுதேச அரசாக மாறியது. பிரிட்டிசு அரசாங்கம் திருவிதாங்கூர் மகாராஜாவிற்கு ஒரு உயர் 19 துப்பாக்கி மரியாதை வழங்கியது. அதேசமயம் உள்நாட்டிலும், அனைத்து கோயில் திருவிழாக்களிலும், 21 துப்பாக்கிகளுடன் மிக உயர்ந்த மரியாதை செலுத்தப்பட்டது. சுவாதித் திருநாள் 19 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்தார். இவர், நிர்வாகத் துறையிலும் இசையிலும் பங்களிப்புகளைச் செய்தார். சித்திரைத் திருநாள் பலராம வர்மனின் ஆட்சி கோயில் நுழைவு பிரகடனம், அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி போன்ற புரட்சிகர சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. இவரை திருவிதாங்கூர் தொழில்மயமாக்கலின் தந்தை என ஏ.சிறீதர மேனன் குறிப்பிட்டுள்ளார். வி.பி. மேனன் தனது புத்தகத்தில், சித்திரைத் திருநாளின் ஆட்சியின் கீழ், திருவிதாங்கூர் பிரிட்டிசு பேரரசின் இரண்டாவது வளமான மன்னர் அரசாக மாறியது என்று கூறினார். [10] [11]
ஆற்றிங்கல்லின் இணைப்பு
தொகுகுடும்பத்தின் பெண்கள் ஆற்றிங்கல் இராணிகள் என்று பிரபலமாக குறிப்பிடப்பட்டனர். திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் மூதாதையர் வீடுகளாகவும் ஆற்றிங்கல் கருதப்பட்டது. வி.நாகம் அய்யா, ஏ. சிறீதர மேனன் போன்ற வரலாற்றாசிரியர்கள் கூறுகையில், ஆற்றிங்கல் ஒருபோதும் ஒரு தனி இராச்சியம் அல்ல, ஆனால் அரச பெண்களுக்கு குடும்பத்தின் ஆண் தலைவரால் வழங்கப்பட்ட தோட்டங்கள் மற்றும் மாகாணங்கள் இருந்தன. திருவிதாங்கூர் மன்னர்கள் ஆற்றிங்கல் இராணிகளின் மகன்களாக இருந்ததால், பிந்தையவர்கள் அரச குடும்பத்தினராலும் பொதுமக்களாலும் மிகுந்த மரியாதைக்குரியவர்களாக இருந்தனர். இந்த மரியாதை மற்றும் உயர் அந்தஸ்து ஆற்றிங்கல் இராணிகள் ஒரு காலத்தில் இறையாண்மை கொண்டவர்கள் என்ற தவறான கருத்துக்கு வழிவகுத்தது. இது பல வெளிநாட்டு வரலாற்றாசிரியர்கள் மற்றும் பயணிகளின் எழுத்துக்களால் மேலும் ஒருங்கிணைக்கப்பட்டது. அவர்களுக்கு ஏதேனும் சக்தி இருந்தாலும், அதை மகாராஜா அனுசம் திருநாள் வீரபால மார்த்தாண்ட வர்மன் அதை பறித்துக் கொண்டார். பல ஆற்றிங்கல் இராணிகள் ஆளும் திருவிதாங்கூர் மன்னர்களுடன் கூட ஆலோசிக்காமல். தங்களது நிலையை தவறாகப் பயன்படுத்தினர். மேலும், வெளிநாட்டு சக்திகளுடன் சதி வேலைகளில் ஈடுபட்டனர். இராச்சியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை எதிர்பார்த்த மகாராஜா அனுசம் திருநாள் மார்த்தாண்ட வர்மன், ஆற்றிங்கல் இராணிகளின் அதிகாரங்களை நிரந்தரமாக அகற்றி, அவற்றை மன்னரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். ஆகவே, ஆற்றிங்கல் இராணிகள் குடும்ப சொத்துக்களில் உள்ள அனைத்து தனி உரிமைகளையும் இழந்தனர். அவற்றின் அதிகாரம் அத்தகைய சொத்துக்களின் மேற்பார்வையாளரின் பாத்திரத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டது. [12] [13]
திருப்படிதானம் மற்றும் சிறீ பத்மநாபதாசன்
தொகுமகாராஜா அனுசம் திருநாள் 1750 சனவரி 3 ஆம் தேதி திருவிதாங்கூர் இராச்சியத்தை தனது குடும்ப தெய்வமான பத்மநாபசாமிக்கு அர்ப்பணித்தார். அதன் பிறகு அவர் சிறீ பத்மநாபதாச வஞ்சிபால மகாராஜா சிறீ அனுசம் திருநாள் வீரபால மார்த்தாண்ட வர்மா குலசேகரம் என்றௌ அழைக்கப்பட்டார். திருவிதாங்கூர் மன்னர்கள், "சிரீபத்மநாபதாசன்" என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு, அந்த தெய்வத்தின் வேலைக்காரராக இராச்சியத்தை ஆட்சி செய்தனர். கோயிலுக்கு இராச்சியத்தின் இந்த முக்கியமான நன்கொடை "திருப்படிதானம்" என்று அழைக்கப்பட்டது. [14] திருவிதாங்கூர் ஒட்டுமொத்தமாக, திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் தெய்வமான சிறீ பத்மநாபசாமியின் சொத்தாக மாறியது அல்லது வேறு வார்த்தைகளில் கூறுவதானால் கடவுளின் சொந்த நாடு என்றானது. [15]
திரிப்பாதிதானத்திற்குப் பிறகு அரச ஆண் உறுப்பினர்களின் பெயர்களுக்கு முன்பு "சிறீ பத்மநாபதாச" என்ற தலைப்பைப் பயன்படுத்துவது தவறாக நம்பப்பட்டது. ஆனால் இந்த தலைப்பு 16 ஆம் நூற்றாண்டில் கூட பயன்பாட்டில் இருந்தது. 1725 இல் மகாராஜா கார்த்திகைத் திருநாள் இராமவர்மனின் முதல் பிறந்தநாள் விழாவின் போது, அவர் "சிறீ பத்மநாபதாச" என்று குறிப்பிடப்பட்டார். இது மார்த்தாண்ட வர்மா எழுதிய திருப்படிதானத்திற்கு (1750) முன்பே இருந்தது. "சிறீ பத்மநாபதாச" என்ற தலைப்பு ஒவ்வொரு திருவிதாங்கூர் மன்னரின் பெயருக்கும் முன்னொட்டாக உள்ளது.
அதே சமயம் அரச பெண்கள் "சிறீ பத்மநாபசேவினிகள்" என்ற பெயருடன் அழைக்கப்பட்டனர். "சிறீ பத்மநாபதாச" என்ற பட்டத்தை அடைவதற்கான தகுதியைப் பெற, புதிய அரச ஆண் உறுப்பினர்களின் பிறப்பில் சில சடங்குகள் முடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு அரச ஆண் உறுப்பினர்களின் முதல் பிறந்தநாளில் பத்மநாபசாமி கோயிலின் 'ஒற்றைக்கல் மண்டபம்' போடப்பட்டு கோயிலின் புனித நீர் குழந்தை மீது தெளிக்கப்படும். இந்த விழா முடிந்த பின்னரே அரச குழந்தை "சிறீ பத்மநாபதாச" என்று அறிவிக்கப்படும். பெண் உறுப்பினர்களுக்கு "படியெட்டம்" என்ற சடங்கு உள்ளது. இது அவர்களின் "தாலிக்கட்டு " (திருவிதாங்கூர் இளவரசிகள் மற்றும் ராணிகளின் திருமணம்) க்குப் பிறகு மட்டுமே நடத்தப்படுகிறது. இந்த விழாக்களை நிறைவு செய்யும் ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள் மட்டுமே கோவில் விவகாரங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் மரியாதை மற்றும் கோயிலுடன் தொடர்புடைய தலைப்புகள் மற்றும் அரச குடும்பத்தினருக்கும் வழங்கப்படுகிறார்கள். ' [16] [17]
தத்தெடுப்பு
தொகுஅரச குடும்பத்தின் பெண்கள் "ஆற்றிங்கலின் ராணிகள்" என்று பெயரிடப்பட்டனர். மேலும் இவர்கள் ஆற்றிங்கல் மூத்த தம்புராட்டி (ஆற்றிங்கலின் மூத்த ராணி) மற்றும் ஆற்றிங்கல் இளைய தம்புராட்டி (ஆற்றிங்கலின்இளைய ராணி) மற்றும் ஆற்றிங்கலின் கொச்சு தம்புராட்டி (ஆற்றிங்கலின் முதல் இளவரசி) என்றும் அறியப்படனர். [18] திருவிதாங்கூர் அரச குடும்பத்திற்கு முதல் தத்தெடுப்பு 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கோலாத்திரி குடும்பத்திலிருந்து வந்தது. ஏனெனில் கோலத்திரிகள் திருவிதாங்கூர் ஆட்சியின் ஒரு சகோதரி வம்சமாக கருதப்படுகிறார்கள். [19] இந்த தத்தெடுப்பின் விளைவாக அரச குடும்பம் நான்கு குடும்பங்களாக பிரிக்கப்பட்டன. பின்னர் வந்த இரண்டு கிளைகளும் 18 ஆம் நூற்றாண்டில் மறைந்து போயின. [20]
1630 ஆம் ஆண்டில் கொச்சி அரச குடும்பத்திலிருந்து இரண்டு ஆண்கள் தத்தெடுக்கப்பட்டனர். [21] இவர்கள் அரச குடும்பத்தின் கிளைகளுக்கு இடையில் பிளவு விதைகளை விதைத்தனர். பின்னர் 1684 ஆம் ஆண்டில் கோலாத்திரி குடும்பத்தில் இருந்து ஒரு ஆணும் இரண்டு பெண்களும் தத்தெடுக்கப்பட்டனர். அந்த குடும்பத்தில் இருந்து உமயாம்மா ராணி தத்தெடுக்கப்பட்டார். [22] 1688 ஆம் ஆண்டில் ராஜா ராம வர்மா உட்பட இரண்டு ஆண்களும், 2 பெண்களும் தத்தெடுக்கப்பட்டனர். பிரபல திருவிதாங்கூர் மன்னர் அனுசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா இந்த இளவரசிகளில் ஒருவருக்குப் பிறந்தார். [23]
1718 ஆம் ஆண்டில் ஒரு இளவரசி தத்தெடுக்கப்பட்டார். அவருடைய மகன் பிற்கால மன்னர் கார்த்திகை திருநாள் இராம வர்மா தர்ம ராஜா ஆவார். 1748 ஆம் ஆண்டில் மீண்டும் நான்கு இளவரசிகள் தத்தெடுக்கப்பட்டனர் . பலராம வர்மா (1798-1810) இந்த வழியைச் சேர்ந்தவர். [24] 1788 ஆம் ஆண்டின் அடுத்த தத்தெடுப்பு புகழ்பெற்ற மகாராணி, கௌரி லட்சுமி பாய் மற்றும் கௌவுரி பார்வதி பாய் மற்றும் 1924 வரை அனைத்து ஆண் ஆட்சியாளர்களையும் கொண்டு வந்தது. இந்த வரிசையில் கடைசி ஆட்சியாளர் மகாராஜா மூலம் திருநாள் ஆவார். [25]
1857 ஆம் ஆண்டில், பரணித் திருநாள் லட்சுமி பாய் உட்பட இரண்டு இளவரசிகள் 1790 களில் மாவேலிக்கராவில் வசித்த கோலாத்திரி குடும்பத்தின் ஒரு கிளையிலிருந்து தத்தெடுக்கப்பட்டனர். ஆனால் 1901 வாக்கில் இந்த இளவரசிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் அனைவரும் இறந்தனர். [26] ரவி வர்மாவின் பேத்திகளான சேது லட்சுமி பாய் மற்றும் சேது பார்வதி பாய் ஆகியோர் 1900 ஆம் ஆண்டில் மாவேலிகராவிலிருந்து தத்தெடுக்கப்பட்டனர். [27] இளவரசி அசுவதி திருநாள் கௌரி லட்சுமி பாய் 1994 இல் லேகா பார்வதி பாய் என்ற இளவரசியை சமீபத்தில் தத்தெடுத்தார். இவர் தற்போது இந்தியாவிற்கும் வெளிநாட்டிற்கும் இடையில் பயணம் செய்கிறார்.
தலைப்புகள் மற்றும் முன்னுரிமை
தொகுஆளும் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் இரண்டு பெயர்களைப் பெறுகிறார்கள் - ஒரு உத்தியோகபூர்வ தனிப்பட்ட பெயர், மற்றும் அவர்கள் பிறந்த 'நட்சத்திரம்' அல்லது 'திருநாள்' உடன் தொடர்புடைய பெயர் (எ.கா.: மகாராஜா சுவாதித் திருநாள் இராம வர்மா).
அரண்மனைகள்
தொகுதிருவிதாங்கூர் மகாராஜாக்களின் பிரதான வசிப்பிடமாக பத்மநாபபுரம் அரண்மனை இருந்தது. அதே நேரத்தில் ஆற்றிங்கலின் ராணிகள் இந்த இடத்தில் தங்கள் அரண்மனைகளில் வசித்து வந்தனர். பின்னர் அரச குடும்பம் திருவனந்தபுரத்திற்கு குடிபெயர்ந்தது. அதில் பெண்கள் சிறீ பாதம் அரண்மனையிலும், துளசி மாலை அரண்மனை, இரங்கவிலாசம் அரண்மனை, குதிரை மாளிகை அரண்மனை போன்ற பல அரண்மனைகளிலும் ஆண்கள் வசித்து வந்தனர்.
சேது லட்சுமி பாயியின் கிளை 1940 களின் பிற்பகுதியிலும் 1950 களின் முற்பகுதியிலும் கேரளாவில் உள்ள அனைத்து சொத்துக்களையும் விற்று மாநிலத்திற்கு வெளியே சென்றது. அவர்களில் பெரும்பாலோர் சென்னை, பெங்களூர் போன்ற இடங்களிலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் குடியேறினர். [28]
தற்போது சேது பார்வதி பாயியின் சந்ததியினர் மட்டுமே கௌடியர் அரண்மனையில் வசிக்கிறார்கள். ஏனெனில் அது அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் சொந்தமானது. அவர்கள் அனைவரும் திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டவர்கள் . மேலும் புகழ்பெற்ற பத்மநாபசாமி கோயிலின் பராமரிப்பு உட்பட அவர்களின் பண்டைய வம்சத்தின் மரபுகளையும் சடங்குகளையும் உயிரோடு வைத்திருக்கிறார்கள். [29] [30] [31]
மேலும் காண்க
தொகுமேலும் படிக்க
தொகு- Menon, P. Shungoonny (1879). A History of Travancore from the Earliest Times. Higginbotham & Co., Madras.
குறிப்புகள்
தொகு- ↑ "Uthradom Tirunal passes away". The Hindu (Chennai, India). 16 December 2013. http://www.thehindu.com/news/national/kerala/marthanda-varma-head-of-travancore-royal-family-dies/article5465077.ece?homepage=true.
- ↑ per Wigram, H., Malabar Law and Custom High Court of Judicature Madras 1900 See Introduction at page xvi. Wigram also comments that they might perhaps be "the oldest aristocracy in the world."
- ↑ Logan, W., "The Malabar Manual", 1887 at page 265
- ↑ Gough (1961).
- ↑ Gough, K., page Matrilineal Kinship, University of California Press, Berkeley and LA 1962 at page 303
- ↑ "Royal vignettes: Travancore – Simplicity graces this House". தி இந்து (Chennai, India). 30 March 2003 இம் மூலத்தில் இருந்து 4 ஏப்ரல் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110404124139/http://www.hindu.com/mag/2003/03/30/stories/2003033000700700.htm.
- ↑ Travancore State Manual Vol II by Velu Pillai pages 104–105
- ↑ Native Life in Travancore Vol I by Rev:Samuel Mateer, AD 1883, pages 388
- ↑ "The Hindu : New member in Travancore family". Hinduonnet.com. 25 November 2000. Archived from the original on 2010-11-20. பார்க்கப்பட்ட நாள் 2012-03-09.
- ↑ "Marthanda Varma could have been Kerala's Henry Ford but for family compulsions : "Travancore was the second wealthiest princely state after Nizam's Hyderabad when it joined the Indian union. "". http://articles.economictimes.indiatimes.com/2014-01-04/news/45860597_1_marthanda-varma-sree-padmanabhaswamy-temple-moolam-thirunal-rama-varma.
- ↑ "During his rule the revenues of the State were nearly quadrupled from a little over Rs 21/20 million to over Rs 91/20 million."-THE STORY OF THE INTEGRATION OF THE INDIAN STATES by V. P. Menon
- ↑ Kerala District Gazetteers Trivandrum by A. Sreedhara Menon, pages 190 to 192
- ↑ N Ojha (28 November 1991). "Revathinnal Balagopala Varma vs His Highness Shri Padmanabhadasa ... on 28 November, 1991". Supreme Court of India. http://indiankanoon.org/doc/1999764/.
- ↑ Travancore State Manual Vol II by Velu Pillai page 348
- ↑ Gauri Lakshmi Bayi, Aswathi Thirunal (1998). Sreepadmanabhaswami Kshetram. Thiruvananthapuram: The State Institute of Languages. pp. 168–172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7638-028-7.
- ↑ Aswathy Thirunal, Gauri Lakshmi Bai (1998). Sree Padmanabhaswamy Kshetram. Thiruvananthapuram: The State Institute of Languages, Kerala. pp. 168–170, 179–180, 595–602. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7638-028-7.
- ↑ Travancore State Manual Vol II by Velu Pillai
- ↑ Travancore State Manal Vol II by Velu Pillai page 121
- ↑ [1] [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Travancore State Manual Vol II by Velu Pillai page 301
- ↑ Travancore State Manual Vol II by Velu Pillai page 202
- ↑ Travancore State Manual Vol II by Velu Pillai page 228
- ↑ Travancore State Manual Vol II by Velu Pillai page 232
- ↑ Travancore State Manual Vol II by Velu Pillai page 347
- ↑ Travancore State Manual Vol II by Velu Pillai page 399
- ↑ Travancore State Manual Vol II by Velu Pillai page 582
- ↑ Travancore State Manual Vol II by Velu Pillai page 706
- ↑ Raghunanadan, Lakshmi (1995). At the turn of the tide : the life and times of Maharani Setu Lakshmi Bayi.
- ↑ "Uthradom Thirunal Marthanda Varma at "90"". Thiruvananthapuramupdates.wordpress.com. 11 March 2012. பார்க்கப்பட்ட நாள் 10 August 2017.
- ↑ "Moolam Thirunal anointed as head of Travancore royal house". 3 January 2014.
- ↑ "Moolam Tirunal Rama Varma is Travancore royal family head". 4 January 2013. http://www.thehindu.com/news/national/kerala/moolam-tirunal-rama-varma-is-travancore-royal-family-head/article5536401.ece. பார்த்த நாள்: 2014-01-13.