வி. என். வாசவன்

இந்திய அரசியல்வாதி

வி. என். வாசவன் (V. N. Vasavan) (1954 ) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர்,கோட்டயம் மாவட்டத்தின் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிசம்)[1] ஏற்றுமானூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருக்கிறார். தற்போதைய கேரள அரசின் பிணறாயி விஜயனின் இரண்டாவது அமைச்சகத்தில் கூட்டுறவு மற்றும் பதிவு அமைச்சராகவும் உள்ளார்.[2] [2] [3]

வி. என். வாசவன்
கூட்டுறவு மற்ரும் பதிவுத் துறை அமைச்சர், கேரள அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மே 2021
முன்னையவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1954
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்)

அரசியல் வாழ்க்கை

தொகு

வாசவன், மாணவர் கூட்டமைப்பு மூலம் அரசியலில் நுழைந்தார். பின்னர் கேரள சோசலிச இளைஞர் கூட்டமைப்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகியவற்றின் மாவட்ட இணைச் செயலாளராக இருந்தார். 1974இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிசம்) உறுப்பினரானார், 1991இல் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997இல் மாவட்டச் செயலக உறுப்பினராகவும், 18 ஜனவரி 2015 அன்று ஏற்றுமானூரில் நடந்த[4] கட்சியின் மாநாட்டில் மாவட்டச் செயலாளராகவும் ஆனார். இவர் மாநிலக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

வகிக்கும் பதவிகள்

தொகு

வாசவன், 1987இல் நடந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் புதுப்பள்ளியிலிருந்தும் 2006இல் நடந்த தேர்தலில் கோட்டயத்திலிருந்தும் போட்டியிட்டார். இவர் 2006 முதல் 2011 வரை கோட்டயம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். இப்போது கட்சியின் கோட்டயம் மாவட்டத்தின் மாவட்ட செயலாளர், மாநில குழு உறுப்பினர்,[5] கேரள மாநில இரப்பர் கூட்டுறவு நிறுவனத்தின் (RUBCO) இயக்குநர் குழு உறுப்பினர்,[6] இந்திய தொழிற் சங்க மையத்தின் பொது அமைப்பு, செயற்குழு உறுப்பினர்[7] என பல பதவிகளை வகித்து வருகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Communist Party of India (Marxist) | State Committee, Kerala". Archived from the original on 2016-04-12. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08.
  3. [1] (2006–2011).
  4. "V.N. Vasavan to head CPI(M) in Kottayam". தி இந்து. 19 January 2015. http://www.thehindu.com/news/national/kerala/vn-vasavan-to-head-cpim-in-kottayam/article6800840.ece. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-23. பார்க்கப்பட்ட நாள் 2021-08-08.
  6. "Kerala state Rubber Co-operative Limited | an ISO 9001:2008 Certified Company Kerala state Rubber Co-operative Limited | an ISO 9001:2008 Certified Company".
  7. "Official Website :: Centre of Indian Trade Unions".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._என்._வாசவன்&oldid=4161802" இலிருந்து மீள்விக்கப்பட்டது