கடகம்பள்ளி சுரேந்திரன்
கடகம்பள்ளி சுரேந்திரன் (Kadakampally Surendran) (பிறப்பு 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 12) கேரள அரசின் பிணறாயி விஜயனின் முதல் அமைச்சகத்தில் (2016-2021) கூட்டுறவு, சுற்றுலா, தேவஸ்வம் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றிய ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிசம்) திருவனந்தபுரம் மாவட்டக் குழு செயலாளராகவும் கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டு காலம் (2007-2016) பணியாற்றினார். கேரள மாநில கூட்டுறவு வங்கியின் தலைவராக பணியாற்றினார் (2006-2008).[2] கேரளாவின் 10வது சட்டமன்ற உறுப்பினராக கழக்கூட்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 24000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுவின் தலைவராகவும் இருந்தார் (1996-2001).[3] இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருவனந்தபுரத்தில் இடதுசாரி இயக்கம் மற்றும் முற்போக்கான கலாச்சார அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.[4]
கடகம்பள்ளி சுரேந்திரன் | |
---|---|
கேரள அரசின் கூட்டுறவு, சுற்றுலா, தேவஸ்வம் துறை அமைச்சர் | |
பதவியில் 25 மே 2016 – 3 மே 2021 | |
முன்னையவர் |
|
பின்னவர் |
|
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 சூன் 2016 | |
முன்னையவர் | எம். ஏ. வாகீத் |
தொகுதி | கழக்கூட்டம் |
மின்சாரத் துறை அமைச்சர், கேரள அரசு | |
பதவியில் 25 மே 2016 – 29 நவம்பர் 2016 | |
முன்னையவர் | ஆர்யாதன் முகமது |
பின்னவர் | எம். எம். மணி |
இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) திருவனந்தபுரம் மாவட்டக்குழுச் செயலாளர் | |
பதவியில் 2007 –2016 | |
முன்னையவர் | பிரப்பன்கோடு முரளி |
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1996 –2001 | |
முன்னையவர் | எம். வி. இராகவன் |
பின்னவர் | எம். ஏ. வாகீத் |
தொகுதி | கழக்கூட்டம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கே. சுரேந்திரன் 12 அக்டோபர் 1954[1] திருவனந்தபுரம், திருவாங்கூர்-கொச்சி மாநிலம் (தற்போதைய கேரளம்), இந்தியா |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்) |
துணைவர் | சுலேகா சுரேந்திரன் |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | பாட்டம், திருவனந்தபுரம் |
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிசம்) உறுப்பினரான இவர் தற்போது கட்சியின் கேரள மாநிலக் குழு உறுப்பினராக உள்ளார்.[5] இவர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழக்கூட்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 15வது கேரள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members - Kerala Legislature" (PDF).
- ↑ "State Cooperative Bank to launch monthly income scheme for the aged". The Hindu. 24 March 2007. http://www.thehindu.com/todays-paper/state-cooperative-bank-to-launch-monthly-income-scheme-for-the-aged/article1815414.ece.
- ↑ "Members - Kerala Legislature".
- ↑ http://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/ONVs-Flag-is-of-Green-Politics/2015/03/27/article2732095.ece
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/surendran-to-head-cpim-in-capital/article1976961.ece