வி. எஸ். சிவக்குமார்

இந்திய அரசியல்வாதி

வி. எஸ். சிவகுமார் (V. S. Sivakumar) (பிறப்பு 30 மே 1960) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும், உம்மன் சாண்டியின் இரண்டாவது அமைச்சரவையில் கேரள அரசின் சுகாதாரம், குடும்ப நலன், தேவஸ்வம் துறை அமைச்சராகவும் இருந்தார்.[1] இவர், 2011 ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்தெடுக்கப்பட்டு 2021 வரை பணியாற்றினார். திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பதின்மூன்றாவது மக்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

வி. எஸ். சிவக்குமார்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1 ஜூன் 2011 – 24 மே 2021
முன்னையவர்தொகுதி உருவாக்கப்பட்டது
பின்னவர்ஆண்டனி ராஜூ
தொகுதிதிருவனந்தபுரம்
உம்மன் சாண்டியின் இரண்டாவது அமைசரவையில் சுகாதரம், குடும்ப நலம், தேவஸ்வம் துறை அமைச்சர்,
கேரள அரசு
பதவியில்
12 ஏப்ரல் 2012 (2012-04-12) – 25 மே 2016 (2016-05-25)
முன்னையவர்அடூர் பிரகாஸ்
பின்னவர்
உம்மன் சாண்டியின் இரண்டாவது அமைசரவையில் போக்குவரத்துத் துறை,
கேரள அரசு
பதவியில்
23 மே 2011 (2011-05-23) – 12 ஏப்ரல் 2012 (2012-04-12)
முன்னையவர்ஜோஸ் தெட்டாயில்
பின்னவர்ஆர்யாதன் முகமது
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1999 (1999)–2004 (2004)
முன்னையவர்கே. கருணாகரன்
பின்னவர்பி. கே. வாசுதேவன் நாயர்
தொகுதிதிருவனந்தபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 மே 1960 (1960-05-30) (அகவை 64)
அமரவிலை, திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சிந்து சலூஜா சி. ஆர்.
பிள்ளைகள்2
வாழிடம்(s)சாஸ்தமங்கலம் , திருவனந்தபுரம், கேரளா
As of 26 அக்டோபர், 2012
மூலம்: kerala.gov.in

சொந்த வாழ்க்கை

தொகு

வி. எஸ். சிவகுமார் 30 மே 1960 இல் நெய்யாற்றிங்கரை அருகே அமரவிலையில் கே. வி. சதாசிவன் நாயர் - பி. சுபத்ரா அம்மாவுக்கு பிறந்தார். திருவனந்தபுரத்திலுள்ள தனுவச்சபுரம் வேலு தம்பி நினைவு நாயர் சேவை சங்கக் கல்லூரியில் இளங்கலை அறிவியலும், திருவனந்தபுரத்தில் கேரள சட்ட அகாதமி சட்டக் கல்லூரியில் சட்டமும் முடித்துள்ளார்.[2] இவர் சிந்து சலூஜா சி. ஆர். என்பவரை மணந்தார். இவர்கள்க்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தற்போது திருவனந்தபுரம் சாஸ்தமங்கலம் அருகே வசிக்கிறார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

சிவகுமார் 1978இல் கேரள மாணவர் ஒன்றியம் மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், இளைஞர் காங்கிரசில் சேர்ந்து வளர்ந்தார்.[3] இவர் 1979-80இல் கல்லூரியின், மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரான இவர், வட்டாரத் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பதின்மூன்றாவது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

சிவகுமார் 1999ஆம் ஆண்டு முதல் முறையாக பதின்மூன்றாவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளர் கனியாபுரம் இராமச்சந்திரனை 14,385 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2004 வரை மக்களவையில் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆனால் பதினான்காவது மக்களவை தேர்தலிலும், 2005ஆம் ஆண்டு இடைத்தேர்தலிலும், திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து முறையே இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பி. கே. வாசுதேவன் நாயர், பானியன் ரவீந்திரனுக்கு எதிராக தோல்வியைச் சந்தித்தார்.[4]

வெற்றி

தொகு

சிவகுமார் முதல் முறையாக 2011 திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இவர் 5352 வாக்குகள் வித்தியாசத்தில் கேரள காங்கிரசின் (இணைப்பு எதிர்ப்பு குழு) முன்னாள் அமைச்சர் வி. சுரேந்திரன் பிள்ளைக்கு எதிராக வெற்றி பெற்றார்.

2011 இல் முதல் முறையாக போக்குவரத்து மற்றும் தேவஸ்வம் துறைகளின் அமைச்சராக 18 மே 2011 அன்று உம்மன் சாண்டி அமைச்சகத்தில் 2011-2016 இல் பதவியேற்றார். பின்னர் முதல் அமைச்சரவை மாற்றத்தில், அவர் சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் தேவஸ்வம் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது இலாகாவில் சுகாதாரம், குடும்ப நலன், மருத்துவ கல்வி, மருத்துவ பல்கலைக்கழகம், சுதேச மருந்துகள், மருந்து கட்டுப்பாடு, ஓமியோபதி, இயற்கை மருத்துவம் மற்றும் தேவஸ்வம் ஆகியவை அடங்கும்.

புகார்

தொகு

2011-16 க்கு இடையில் தனது நெருங்கிய கூட்டாளிகள் மூலம் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்ததற்காக 27 பிப்ரவரி 2020 அன்று கேரளாவின் இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறையால் (VACB) இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.[5]

குறிப்புகள்

தொகு
  1. http://kerala.gov.in/index.php?option=com_content&view=article&id=3892&Itemid=3069
  2. http://www.parliamentofindia.nic.in/ls/lok13/biodata/13KL20.htm
  3. "Kerala Assembly election database: Biodata of V. S. Sivakumar". keralaassembly.org. பார்க்கப்பட்ட நாள் 8 March 2018.
  4. [1]
  5. https://www.thehindu.com/news/national/kerala/vigilance-raids-house-of-former-kerala-health-minister-vs-sivakumar/article30868778.ece/amp/
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எஸ்._சிவக்குமார்&oldid=3480514" இலிருந்து மீள்விக்கப்பட்டது