பி. ஏ. முகமது ரியாஸ்
பி. ஏ. முகமது ரியாஸ் (P. A. Mohammed Riyas) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். தற்போது கேரள அரசின் பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக பணியாற்றுகிறார்.[1] இந்தியப் பொதுவுடமைக் கட்சி கட்சியின் கேரள மாநில குழு உறுப்பினராக இருக்கும் இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் அகில இந்திய தலைவராகவும் இருந்தார்.[2][3][4][5]
பி. ஏ. முகமது ரியாஸ் P. A. Mohammed Riyas | |
---|---|
அமைச்சர், கேரள அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 மே 2021 | |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
அமைச்சகம் |
|
முன்னையவர் |
|
கேரள சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 03 மே 2021 | |
முன்னையவர் | வி. கே. சி. மம்மெது கோயா |
தொகுதி | பேப்பூர் |
தலைவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2017 | |
முன்னையவர் | எம். பி. ராஜேஷ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1blankname முதலமைச்சர் 18 மே 1976 பேப்பூர் |
இறப்பு | 1blankname முதலமைச்சர் |
இளைப்பாறுமிடம் | 1blankname முதலமைச்சர் |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
துணைவர்(கள்) | சமீகா சைதலவி (தி. 2002; ம.மு. 2015) வீணா (தி. 2020) |
பெற்றோர் |
|
உறவினர் | பிணறாயி விஜயன் (மாமனார்) |
முன்னாள் கல்லூரி |
|
இளமை வாழ்க்கை
தொகுமுகமது ரியாஸ் கோழிக்கோட்டில் பிறந்தார்.[6] இவரது தந்தை பி. எம். அப்துல் காதர் ஒரு இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார்.[7] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவரது உறவினர் பி. கே. மொய்தீன்குட்டி சாஹிப் கேரள பிரதேச காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவராவார். அவர், சுதந்திர போராட்ட வீரராகவும், 1937 இல் சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.[8]
ரியாஸ் தனது பள்ளிப்படிப்பை கோழிக்கோட்டில் உள்ள புனித சூசையப்பர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். பின்னர், பரூக் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். பின்னர் கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.[9]
சொந்த வாழ்க்கை
தொகுஇவர் 2002 இல் மருத்துவர் சமீகா சைதலவி என்பவரை மணந்தார். பின்னர் 2015 இல் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[10] 15 ஜூன் 2020, அன்று கேரள முதலமைச்சர் பிணறாயி விஜயனின் மகள் டி. வீணாவை மணந்தார்.[11]
தேர்தல் அரசியல்
தொகு2009 இந்தியப் பொதுத் தேர்தலின்போது, ரியாஸ் கோழிக்கோடு தொகுதியில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக இருந்தார்.[12][13] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் எம். கே. ராகவன் 838 வாக்குகள் வித்தியாசத்தில் ரியாஸை வென்றார். ராகவன் தனக்கு எதிராக அச்சு ஊடகங்களில் பிரச்சாரத்தை வெளியிட்டதாக குற்றம் சாட்டி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ரியாஸ் தேர்தல் முடிவை எதிர்த்தார்.[14][15] இந்த மனு 2010 மே 17 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.[16]
2021 கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பேப்பூர் தொகுதியில் போட்டியிட்ட முகமது ரியாஸ் 28,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அரசியல் கருத்துக்கள்
தொகுகுடியுரிமை திருத்தச் சட்டம் 2019 -ஐ ரியாஸ் விமர்சித்து எதிர்த்தார். [17][18][19][20] அச்சட்டத்திற்கு எதிர்ப்பை இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டமாக இவர் கருதுகிறார். 6 ஜனவரி 2020 அன்று, கோழிக்கோடு கடற்கரையில் 100,000 பேருடன் அச்சட்டத்திற்கு எதிரான பேரணிக்கும் தலைமை தாங்கினார்.[21]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy". Archived from the original on 21 May 2021. பார்க்கப்பட்ட நாள் 21 May 2021.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Kerala: For P A Mohammad Riyas, it's a rise from the ranks". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 19 May 2021. பார்க்கப்பட்ட நாள் 19 May 2021.
- ↑ "Mohammed Riyas elected as national president of DYFI". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.
- ↑ "Mohammad Riyas elected DYFI president". Deccan Chronicle (in ஆங்கிலம்). 6 February 2017. பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.
- ↑ "Veena George to replace KK Shailaja as Kerala health minister; here's list of new ministers and portfolios". Times Now. 19 May 2021. பார்க்கப்பட்ட நாள் 19 May 2021.
- ↑ "Biodata of P. A. Muhammed Riaz". keralaassembly.org. பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.
- ↑ "Kerala CM Pinarayi Vijayan's daughter to tie the knot on Monday". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 11 June 2020.
- ↑ "Public opinion survey sets apart Anakkara". https://www.thehindu.com/news/national/kerala/public-opinion-survey-sets-apart-anakkara/article33094357.ece.
- ↑ "Biodata of P. A. Muhammed Riaz". keralaassembly.org. பார்க்கப்பட்ட நாள் 10 May 2020."Biodata of P. A. Muhammed Riaz". keralaassembly.org. Retrieved 10 May 2020.
- ↑ "Kerala CM Pinarayi Vijayan's daughter Veena to marry DYFI leader Mohammed Riyas". Coastal Digest. 9 June 2020. பார்க்கப்பட்ட நாள் 19 May 2021.
- ↑ "Kerala CM Pinarayi Vijayan's daughter Veena marries DYFI national president PA Mohammed Riyas". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 15 June 2020.
- ↑ "2009 India General (15th Lok Sabha) Elections Results". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.
- ↑ "Indian Parliament Election Results 2009 (Lok Sabha polls 2009)- Kerala". keralaassembly.org. பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.
- ↑ "Kerala's success in dummy candidate strategy and why VM Sudheeran still fears it". www.thenewsminute.com. May 2016. பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.
- ↑ "Constituency Wise Detailed Result of 2009 Parliament Elections". Election Commission of India. 10 August 2018.
- ↑ "Kerala High Court : Mohamed Riyas vs M.K.Raghavan on 6 January, 2010 (El.Pet..No. 6 of 2009)". Indian Kanoon. 17 May 2010.
- ↑ "Bindhu Ammini, woman who entered Sabarimala, detained during anti-CAA protest in Delhi". www.thenewsminute.com. 27 December 2019. பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.
- ↑ Anti- CAA Protest Staged In Delhi's UP Bhavan Amidst Section 144CrPc| Mathrubhumi News (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 10 May 2020
- ↑ "സി.എ.എയ്ക്കെതിരെ മഹാരാഷ്ട്രയില് ഡി.വൈ.എഫ്.ഐ മാര്ച്ച്; റിയാസടക്കമുള്ള നേതാക്കള് തടവില്". DoolNews (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 11 May 2020.
- ↑ "ദില്ലിയിൽ സംഘർഷം, പ്രമുഖർ കസ്റ്റഡിയിൽ; പൊലീസ് ആസ്ഥാനം ഉപരോധിക്കാൻ ജാമിയ സമര സമിതിയുടെ ആഹ്വാനം". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.
- ↑ "DFYI's anti-CAA march to reach Kozhikode beach, Kerala CM to address over 1 hundred people". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 May 2020.