கே. இராதாகிருஷ்ணன் (அரசியல்வாதி)

இந்திய அரசியல்வாதி

கே. இராதாகிருஷ்ணன் (K. Radhakrishnan) (பிறப்பு 24 மே 1964) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது கேரளாவின் பிணறாயி விஜயனின் இரண்டாவது அமைச்சகத்தில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம், தேவஸ்வம், நாடாளுமன்ற விவகாரங்கள் ஆகிய துறைகளின் அமைச்சராக இருக்கிறார்.[1] மேலும், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்) கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருக்கிறார். இவர் 2006 முதல் 2011 வரை கேரள சட்டமன்றத்தின் முன்னாள் பேரவைத் தலைவராக இருந்தார். திருச்சூரைச் சேர்ந்த அரசியல்வாதியான இவர், 1996 முதல் 2001 வரை எ. கி. நாயனாரின் மூன்றாவது அமைச்சகத்தில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் விவகாரங்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் சேலக்கரை சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 1996 முதல் 2016 வரை சட்டமனற உறுப்பினராக பணியாற்றினார்.

கே. இராதாகிருஷ்ணன்
பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும், பிற்படுத்தப்பட்டோர் நலம், தேவஸ்வம், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர். கேரள அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மே 2021
முன்னையவர்
கேரள சட்டமன்றத்தின் பேரவைத் தலைவர்
பதவியில்
3 சூன் 2006 (2006-06-03) – 13 மே 2011 (2011-05-13)
முன்னையவர்தெரம்பில் ராமகிருஷ்ணன்
பின்னவர்ஜி. கார்த்திகேயன்
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1996–2016
முன்னையவர்எம். பி. தமி
பின்னவர்யூ. ஆர். பிரதீப்
தொகுதிசேலக்கரை
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்யூ. ஆர். பிரதீப்
தொகுதிசேலக்கரை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 மே 1964 (1964-05-24) (அகவை 60)
புள்ளிக்கானம் வாகாமன், கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்)
பெற்றோர்
  • கொச்சுன்னி
  • சின்னம்மா
வாழிடம்(s)திருச்சூர், கேரளம்
கல்விஇளங்கலை
முன்னாள் கல்லூரிசிறீ வியாச என்எஸ்எஸ் கல்லூரி, வடக்காஞ்சேரி|சிறீ கேரள வர்மா கல்லூரி, திருச்சூர்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் புல்லிக்கானம் வாகாமன் என்ற கிராமத்தில் 24 மே 1964 அன்று பிறந்தார்.[2] இவரது தந்தை எம். சி. கொச்சுன்னி ஒரு தோட்டத் தொழிலாளி - தாயார் சின்னம்மா ஒரு இல்லத்தரசி. தொன்னூர்கரை பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த இவர் தனது உயர்நிலைப் பள்ளிக் கல்வியை சேலக்கரை பள்ளியில் முடித்தார். இராதாகிருஷ்ணன் வடக்காஞ்சேரி சிறீ வியாச என்எஸ்எஸ் கல்லூரியிலும், திருச்சூர் சிறீ கேரளா வர்மா கல்லூரியிலும் இளங்கலை பட்டப்படிப்பை முடித்து அரசியலில் ஈடுபட்டார். ஒரு நல்ல விவசாயியான இவர் தனது தொகுதி மக்களுடன் நெருக்கம் கொண்டவர். முன்னாள் அமைச்சராகவும், பேரவைத் தலைவராகவும் இருந்தபோதிலும் இவரது எளிமையான வாழ்க்கை முறை இவரை ஒரு சாதாரண மனிதனின் தலைவராக ஆக்கியுள்ளது.

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர், இந்திய மாணவர் சங்கத்தில் தீவிர உறுப்பினராக இருந்தார். சிறீ கேரளா வர்மா கல்லூரியின் பிரிவு செயலாளராகவும், சேலக்கரை பகுதி செயலாளராகவும், திருச்சூர் மாவட்ட செயலக உறுப்பினராகவும் அதன் தலைவராகவும் இருந்தார். இவர் செல்லக்கரை தொகுதி குழு செயலாளராகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினராகவும் பணியாற்றினார், இப்போது இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) மத்திய குழு உறுப்பினராக உள்ளார். 1991 ஆம் ஆண்டு திருச்சூர் மாவட்ட அமைப்புக்கு வள்ளத்தோள் நகர் பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996, 2001, 2006 இல் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 முதல் 2001 வரை பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகங்கள் மற்றும் இளைஞர் விவகார நல அமைச்சராக பணியாற்றினார். இவர் 2001 முதல் 2006 வரை எதிர்க்கட்சித் தலைமைக் கொறடாவாகவும் இருந்தார்.[3]

கே.ராதாகிருஷ்ணன் கேரள சட்டப் பேரவையின் 18வது பேரவைத் தலைவராக பணியாற்றினார்.[4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-06.
  2. "Speaker - KLA". legislativebodiesinindia.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-11.
  3. "Sitting MLAs dominate CPI(M)'s candidates list for Thrissur". 2011-03-19. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/sitting-mlas-dominate-cpims-candidates-list-for-thrissur/article1552761.ece. 
  4. "KERALA LEGISLATURE - SPEAKER". Legislativebodies. பார்க்கப்பட்ட நாள் 2012-03-12.
  5. "Radhakrishnan elected Thrissur Mayor". தி இந்து. 29 April 2004 இம் மூலத்தில் இருந்து 2 ஜூலை 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040702225214/http://www.hindu.com/2004/04/29/stories/2004042910000400.htm. பார்த்த நாள்: 2012-04-27. 
  6. "Past Mayors". Thrissur Municipal Corporation. Archived from the original on 28 November 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-04-27.