இந்திய மாணவர் சங்கம்
இந்திய மாணவர் சங்கம் (Students' Federation of India, SFI) இந்தியாவிலுள்ள மாணவர் இயக்கங்களில் மிகப்பெரிய அமைப்பாகும். 1970 டிசம்பர் 30 இல் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. "சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம்" என்னும் முழக்கத்துடன் தேச ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை மற்றும் முற்போக்கான அறிவியல்பூர்வமான மாற்றுக் கல்வியை உருவாக்கிட வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடி வரும் மாணவர் இயக்கமாகும்.[1] இந்த இயக்கம் 2018 ஆம் ஆண்டில் 50 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.[2]
![]() இந்திய மாணவர் சங்கத்தின் ஸ்தாபனக் கொடி | |
சுருக்கம் | SFI - இந்திய மாணவர் சங்கம் |
---|---|
உருவாக்கம் | 1970 டிசம்பர் 30 |
வகை | மாணவர் இயக்கம் |
தலைமையகம் | புதுதில்லி |
தலைமையகம் | |
உறுப்பினர்கள் | 2018 இல் 50 லட்சம் |
பொதுச் செயலாளர் | மயூக் பிஸ்வாஸ் |
வரலாறு தொகு
தேசத்தின் விடுதலைக்காக ஏராளமான இளைஞர்களும், மாணவர்களும் தம் உயிரையும் தியாகம் செய்தனர். விடுதலைக்கு பிறகு இந்த தேசத்தைப் பாதுகாத்திட, எல்லோருக்கும் கல்வி , எல்லோருக்கும் வேலை கேட்டு தேசம் முழுவதும் இருந்த மாணவர்களின் அணிவகுப்பில் துவங்கப்பட்ட அமைப்பு இந்திய மாணவர் சங்கம்.[3]
மூலம் தொகு
- ↑ எஸ், கார்த்திக் (30 டிசம்பர் 2013). "இலட்சியப் பயணம் ஓயாது" (இ-பேப்பர்). தீக்கதிர் இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 30 டிசம்பர் 2013.
- ↑ "history". Students’ federation of India இம் மூலத்தில் இருந்து 2013-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131027030438/http://sfitamilnadu.org/history.html. பார்த்த நாள்: அக்டோபர் 14, 2013.
- ↑ "தமிழ் பதிவுகள்". tamilnanbargal.com இம் மூலத்தில் இருந்து 2013-09-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130909210916/http://tamilnanbargal.com/tamil-blogs/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-14%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81.