ஏ. கே. பாலன்

இந்திய அரசியல்வாதி

ஏ.கே.பாலன் (A. K. Balan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். வழக்கறிஞரான இவர் 1951 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 3 ஆம் தேதி பிறந்தார். பாலன் மின்சாரத் துறை அமைச்சராக பதவிவகித்தார். 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கேரள இடதுசாரி சனநாயக முன்னணி கட்சியின் வி.எசு. அச்சுதானந்தன் அரசில் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் முன்னேற்றத்திற்காக பணிபுரிந்தார்.[1].

ஏ.கே.பாலன்
A. K. Balan
மின்சாரத் துறை , பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் மேம்பாடு அமைச்சர்
கேரள அரசு
பதவியில்
2006–2011
முன்னையவர்ஆர்யாதன் முகமது
பின்னவர்ஆர்யாதன் முகமது
தொகுதிதரூர், பாலக்காடு மாவட்டம்
பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நல அமைச்சராகவும், சட்டம், கலாசாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகப் பொறுப்புகள்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 மே 2016
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஆகத்து 1951 (1951-08-03) (அகவை 73)
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபொதுவுடமைக் கட்சி (மார்க்சிசுட்
துணைவர்டாக்டர் பி.கே சமீலா
பிள்ளைகள்நவீன் பாலன் ,நிக்கில் பாலன்

மார்க்சிசுட்டு பிரிவு இந்திய பொதுவுடமைக் கட்சியின் செயற்குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். கேரள சட்டமன்றத் தேர்தலில் பாலக்காடு மாவட்டம் தரூர் தொகுதியில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார்.[2]

வாழ்க்கை

தொகு

பாலன் 1951 ஆம் ஆண்டு ஆகத்து 3 ஆம் தேதி கேளப்பன் மற்றும் குங்கி தம்பதியருக்கு கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், சாலபுரத்தில்பிறந்தார். இவ்வூர் தற்போது கோழிக்கோடு என அழைக்கப்படுகிறது. மாணவர்கள் இயக்கத்தின் மூலம் பாலன் அரசியலில் பிரவேசித்தார். இந்திய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளராக இயங்கினார். நில உரிமை போராட்டத்தில் கலந்து கொண்ட்தற்காக பாலன் கண்ணூர் சிறையில் 30 நாட்கள் இருந்தார்.[3] பாலன் 1980 ஆம் ஆண்டு ஓட்டபாலம் தொகுதியிலிருந்து மக்களவைக்கும் 2001 ஆம் ஆண்டு குசால்மன்னம் தொகுதியிலிருந்து கேரள சட்ட மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு மின்சாரத்துறை அமைச்சராக இருந்து ஒரு மாநிலம் முழுவதையும் மின்வசதி உள்ள மாநிலமாக மாற்றிய முதலாவது அமைச்சர் என்ற பெருமை இந்திய வரலாற்றில் இவருக்கு பெருமை உண்டு. இவர் அமைச்சராக இருந்தபோதுதான் 2010 ஆம் ஆண்டு பாலக்காடு நகரம் இந்தியாவிலே முழுவதுமாக மின்சாரமயமாக்கப்பட்ட முதல் மாவட்டம் என்று அறிவிக்கப்பட்டது.[4]

கேரளா மாநிலத்தில் மின்சாரம் நுகர்வோருக்கு அதிக அளவு மின்சார இணைப்புகள் வழங்கி பாலன் சாதனை படைத்துள்ளார். பாலன் அமைச்சராக இருந்த காலத்தில்தான் கேரளா மாநிலம் எரிசக்தி பாதுகாப்புக்கான தேசிய விருது பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும்.[5] தற்போது இவர் கேரள மாநிலத்தின் பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நல அமைச்சராகவும், சட்டம், கலாசாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகப் பொறுப்புகளை வகிக்கிறார். மேலும் பாலன் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Twelfth Kerala Legislative Assembly". Kerala Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 29 October 2011.
  2. "Members of Legislative Assempbly". கேரள அரசு. Archived from the original on 30 January 2010. பார்க்கப்பட்ட நாள் 13 January 2010.
  3. "A. K. Balan". Government of Kerala. Archived from the original on 5 January 2010. பார்க்கப்பட்ட நாள் 13 January 2010.
  4. http://www.indianexpress.com/news/palakkad-country-s-first-fully-electrified-district/578831
  5. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 26 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2013-04-03.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._கே._பாலன்&oldid=3747695" இலிருந்து மீள்விக்கப்பட்டது