இந்திய தொழிற் சங்க மையம்
இந்திய தொழிற்சங்க மையம் (இந்தி: भारतीय ट्रेड यूनियन केन्द्र), (ஆங்கில மொழி: Centre of Indian Trade Unions) ஒரு இந்திய அளவிலான தொழிற்சங்கம் ஆகும். இந்திய அளவில் அதிக தொழிலாளர்களைக் கொண்டுள்ள அமைப்பாகும். இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்களிலும் செயல்பட்டு வருகிறது குறிப்பாக மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், திரிபுரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்காணா போன்ற மாநிலங்களில் வலுவான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. [1]
Full name | இந்திய தொழிற்சங்க மையம் |
---|---|
Native name | CITU |
Founded | 30.05.1970 |
Members | 6.2 மில்லியன் |
Country | இந்தியா |
Affiliation | WFTU |
Key people | கே.ஹேமலதா, தலைவர் தபன் சென், பொதுச் செயலாளர் |
Office location | பி.டி.ரணதிவே பவன், 13 ஏ, ரூஸ் அனிவ், புது தில்லி -10 002 புது தில்லி, இந்தியா |
Website | www.citucentre.org |