சுக்தேவ் சிங் காங்கு

இந்திய நீதிபதி மற்றும் அரசியல்வாதி

சுக்தேவ் சிங் காங்கு (Sukhdev Singh Kang) என்பவர் 14 ஆவது கேரள ஆளுநராவார். 1931 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் இவர் பிறந்தார். 1997 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் தேதி முதல் 2002 ஆம் ஆண்டு எப்ரல் 18 ஆம் தேதி வரை கேரள ஆளுநராக இவர் பணியாற்றினார். 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணிபுரிந்தார். பின்னர் பதவி உயர்வும் பணிமாறுதலும் கிடைக்கப்பெற்று உயர் நீதிமன்ற நீதிபதியாக சம்மு காசுமீர் உயர் நீதிமன்றத்தில் 1989 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முதல் 1993 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வரை செயல்பட்டார். [1] இவருடைய பதவி காலத்தில் ஈ. கே. நாயனார் மற்றும் ஏ. கே. அந்தோணி ஆகியோர் கேரள முதலமைச்சர்களாக இருந்தனர். காங்கு கேரள கவர்னாராக இருந்த போது 1993 ஆம் ஆண்டு இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின் தன் பதவியிலிருந்து ஓய்வுப்பெற்றார்.[2][3].

காங்கு சண்டிகர் என்னும் ஊரில் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி காலமானார். அச்சமயம் அவருக்கு 81 வயதாகும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Jammu and Kashmir High Court". Archived from the original on 3 மார்ச்சு 2010.
  2. "High Court of Punjab and Haryana".
  3. "Sukhdev Singh Kang gives Doctorate". Archived from the original on 2021-01-07. பார்க்கப்பட்ட நாள் 2019-05-01.
  4. "Former Kerala Governor Sukhdev Kang passes away". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2012-10-12.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்தேவ்_சிங்_காங்கு&oldid=3835134" இலிருந்து மீள்விக்கப்பட்டது