பி. இராச்சையா
பசவையா இராச்சையா (Basavayya Rachaiah) (10 ஆகஸ்ட் 1922 - 14 பிப்ரவரி 2000[3] ) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும்[4] [5] கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.[6] இவர் 1977இல் கர்நாடகாவின் சாமராஜநகரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] இவர் கேரளா, இமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக இருந்தார்.[8] [9] எஸ். நிஜலிங்கப்பா, பசப்பா தனப்பா ஜாட்டி, தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டில், இராமகிருஷ்ணா ஹெக்டே, சோ. ரா. பொம்மை ஆகிய முதலைமைச்சர்களின் தலைமையிலான கர்நாடக மாநில அமைச்சரவை உறுப்பினராக இருந்தார்.
பசவையா இராச்சையா | |
---|---|
கேரள ஆளுநர் | |
பதவியில் 20 திசம்பர் 1990 – 9 நவம்பர் 1995 | |
முன்னையவர் | சரூப் சிங் |
பின்னவர் | பி. சிவ சங்கர் |
இமாச்சலப் பிரதேசத்தின் 6வது ஆளுநர் | |
பதவியில் 16 பிப்ரவரி 1990 – 19 திசம்பர் 1990 | |
முன்னையவர் | எச். ஏ. பிராரி (கூடுதல் பொறுப்பு) |
பின்னவர் | வீரேந்திர வர்மா |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1977–1980 | |
முன்னையவர் | எஸ். எம். சித்தையா |
பின்னவர் | சிறீநிவாச பிரசாத் |
தொகுதி | சாமராஜநகர், கருநாடகம் |
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1974–1977 [1] | |
தொகுதி | கருநாடகம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆலுர், சாமராசநகர் மாவட்டம், பிரித்தானிய இந்தியா | 10 ஆகத்து 1922
இறப்பு | 14 பெப்ரவரி 2000[2] | (அகவை 77)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு, ஜனதா தளம் |
மூலம்: [1] |
இராச்சையா 1922இல் சாமராசநகரில் பிறந்தார். இவர், தொழிலில் வழக்கறிஞராக இருந்தார். இவருடைய மருமகன்களில் ஒருவரான பி. பி. நிங்கையா, ஜே. ஹெச். படேல் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். இராச்சையா 2000 இல் தனது 77 வயதில் இறந்தார்.[10]
மரபு
தொகுமாநிலத்திற்கு இவர் ஆற்றிய சேவைகளுக்காக, மைசூரில் சாயாஜிராவ் சாலையில் உள்ள ஒரு சாலைக்கு இராச்சையாவின் பெயரிடப்பட்டது.
இதையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
- ↑ "Reference Made To The Passing Away Of Shri B. Rachaiah". Indian Kanoon. பார்க்கப்பட்ட நாள் 1 May 2021.
- ↑ RAJYA SABHA, February 23, 2000
- ↑ "Previous MEMBERS OF KARNATAKA LEGISLATIVE ASSEMBLY 4th". Archived from the original on 8 March 2011. பார்க்கப்பட்ட நாள் 19 March 2012.
- ↑ "Previous MEMBERS OF KARNATAKA LEGISLATIVE ASSEMBLY 3rd". Archived from the original on 6 March 2011. பார்க்கப்பட்ட நாள் 19 March 2012.
- ↑ Rajya Sabha Previous MEMBERS
- ↑ "Lok Sabha Profile". Archived from the original on 26 August 2014. பார்க்கப்பட்ட நாள் 19 March 2012.
- ↑ "Previous Governor Kerala". Archived from the original on 13 August 2012. பார்க்கப்பட்ட நாள் 19 March 2012.
- ↑ PAST GOVERNORS Himachal Pradesh
- ↑ "Siddaramaiah launches works on memorial for B Rachaiah". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 August 2017. பார்க்கப்பட்ட நாள் 1 May 2021.