இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே
இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே (ஆங்கில மொழி: Ramakrishna Mahabaleshwar Hegde) (29 ஆகஸ்ட் 1926 - 12 ஜனவரி 2004) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடகாவின் முதலமைச்சர்களில் பத்தாவது முதல் மந்திரியாக மூன்று தடவைகளில் 1983 மற்றும் 1988க்கு இடையில் பணிபுரிந்து இருக்கிறார். இவர் கர்நாடக சட்டப்பேரவைக்கு 1957, 1962, 1967, 1983, 1985 மற்றும் 1989 ஆகிய வருடங்களிலும்,மாநிலங்களவைக்கு 1978-1983 மற்றும் 1996-2002 ஆகிய இரு முறைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இவர் இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக 1998 முதல் 1999 வரை பணிபுரிந்துள்ளார்.[1]
இராமகிருஷ்ண மகாபலேஷ்வர் ஹெக்டே | |
---|---|
10 ஆவது கர்நாடகா முதல்வர் | |
பதவியில் 10 ஜனவரி 1983 – 10 ஆகஸ்ட் 1988 | |
முன்னையவர் | ஆர். குண்டு ராவ் |
பின்னவர் | எஸ். ஆர். பொம்மை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | உத்தர கன்னட மாவட்டம், பிரிடிஷ் இந்தியா | 29 ஆகத்து 1926
இறப்பு | 12 சனவரி 2004 பெங்களூர், இந்தியா | (அகவை 77)
அரசியல் கட்சி | ஜனதா தளம், லோக் சக்தி |
துணைவர் | சகுந்தலா ஹெக்டே |
ஆரம்ப வாழ்க்கை
தொகுஹெக்டே உத்தர கன்னட மாவட்டத்தில் காவ்யகா பிராமண குடும்பத்தில் சித்தபுரா என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை மகாபலேஷ்வர். இவருடைய தாயார் சரஸ்வதி அம்மா ஹெக்டே. இவர்கள் சிருங்கேரி பக்கத்தில் உள்ள சிரிமனே கிராமத்தில் வசித்து வந்தார்கள். இவர் தன்னுடைய ஒரு பகுதி கல்வியை வாரணாசியில் உள்ள காசி வித்யாபீடத்தில் முடித்தார். இவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய சட்டப்படிப்பு பட்டத்தைப் பெற்றார்.[2] இவர் வழக்கறிஞர் தொழில் செய்து வந்தாலும் இவர் 1942ம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு ஒரு தீவிர காங்கிரசு கட்சி உறுப்பினராக இருந்தார்.[3]
அரசியல் வாழ்க்கை
தொகுஹெக்டே உத்தர கன்னட காங்கிரசு கட்சியின் மாவட்ட தலைவராக 1954 முதல் 1957 வரை இருந்தார். பிறகு 1958-இல் மைசூர் பிரதேச காங்கிரசு கட்சியின் பொதுச் செயலராக உயர்ந்தார். 1962 வரை அப்பதவியில் இருந்தார்.இவருடைய பெரும்பாலான நிர்வாக அனுபவங்கள் சி.நிஜலிங்கப்பா (1956-58 மற்றும் 1962-68) மற்றும் வீரேந்திர படேல் (1968-71) ஆட்சியில் இருந்த பொது கட்டமைக்கப்பட்டவை. இவர் 1957ஆம் ஆண்டு முதன் முதலாக கர்நாடகா சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு துணை மந்திரியாக நியமிக்கப்பட்டார். பிற்பாடு இவர் காபினெட் அமைச்சராக உயர்வு பெற்று இளையோர் நலன் மற்றும் விளையாட்டு, கூட்டுறவு, தொழிற்சாலை, திட்டமிடுதல், பஞ்சாயத் ராஜ், செய்தி மற்றும் விளம்பரம், கலால் மற்றும் நிதி போன்ற துறைகளுக்கு 1962-1971 இடைப்பட்ட காலங்களில் அமைச்சராக இருந்தார். 1969ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சி இரண்டாக உடைந்த போது இவர் தன்னுடைய வழிகாட்டியான நிஜலிங்கப்பாவினைப் பின்பற்றி, அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்திக்கு எதிரான பிரிவில் சேர்ந்தார். இவர் 1974 வரை கர்நாடக சட்ட மேலவையில் எதிர்க்கட்சி தலைவராகச் சில வருடங்கள் இருந்தார். 1975 அவசர நிலை கடும் நடவடிக்கையின் போது மற்ற பல மாநில எதிர்க்கட்சி மற்றும் தேசியத்தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது இவரும் கைது செய்யப்பட்டார். அவசர நிலை தளர்த்தப்பட்ட போது இவர் ஜனதா கட்சியில் சேர்ந்தார். அதன் கர்நாடக மாநில குழுவிற்கு இவர் பொதுச்செயலாளர் ஆனார். 1978-83-இல் இவர் பாராளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
கர்நாடக முதல் மந்திரி
தொகு1983 தேர்தலில் ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த பொழுது சக்தி வாய்ந்த லிங்காயத் மற்றும் வொக்காலிகா இயக்கங்களுக்கு முன் ஒருமித்த பிராமண முதல்வர் வேட்பாளராக வெளிவந்தார். இந்த நடைமுறையில் கர்நாடகாவின் காங்கிரசு அல்லாத முதல் முதல் மந்திரி ஆனார். ஒரு தந்திரத்தன்மை உள்ள எசமானனாக தன் அரசிற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இதர கட்சிகளிடம் இருந்து ஏற்பாடு செய்து திரட்டினார். இவருடைய அரசிற்கு பாரதீய ஜனதா கட்சி, இடதுசாரிகள் மற்றும் 16 சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.[4] 1985-இல் நடந்த தேர்தலில் இவருடைய கட்சி போதுமான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. ஜனதா கட்சியின் மோசமான செயல்பாடுகளால் 1984 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி 28 தொகுதிகளில் 4 மக்களவைத் தொகுதிகளையே பெற நேர்ந்ததால் மக்களின் ஆணை இவர் கட்சிக்கு சாதகமாக இல்லாததால் பதவியை துறந்து சட்டசபைக்கு மக்களிடம் புதிய ஆணையை வேண்டினார். 1983-85 மீண்டும் 1985-88 இடையில் முதல் அமைச்சராக இருந்த பொழுது அவர் கூட்டாட்சிக்குள் மாநில ஆட்சியைத் தக்க வைக்கும் தொண்டனாகச் செயல்பட்டார். ஆனால் வட்டார, மொழியியல் பேரினவாதத்திற்கு எந்தச் சலுகையும் இல்லை. இரண்டாவதாக இவர் கூட்டாட்சிக் கொள்கைகளை விரிவுபடுத்த சில புத்தாக்க முயற்சிகளை எடுத்தார். அதில் முதலாவதாக உள்ளாட்சி நிறுவனங்களுக்குப் பொறுப்புகளைக் கொடுத்து அவற்றைச் செயல்படுத்த முயன்றார். இவர் முதலமைச்சராக இருந்த பொழுது கணிசமான அதிகாரங்களை உள்ளாட்சி நிறுவனங்களுக்குப் பகிர்ந்து கொடுக்க, பஞ்சாயத் ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டது. அது நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்கள் கொண்ட மூன்று அடுக்கு முறைமையை உள்ளாட்சி நிறுவனங்களுக்கு வழங்கியது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சயத்துகளுக்கு அதிகாரங்களைப் பிரித்து வழங்குவதில் ஓய்வின்றி உழைத்த கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் மந்திரி அப்துல் நசீர் சாபை ஆதரித்தார். இந்த கர்நாடக திட்டம் இதர இந்திய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கியது. அலுவலக மற்றும் நிர்வாக ஊழல்களைக் களைய 1984-ஆம் ஆண்டில் லோக் ஆயுக்தா நிறுவன சட்டங்களை அறிமுகப்படுத்தினார். நிர்வாகத்தில் கன்னடத்தை செயல்படுத்த கன்னட காவல் குழு வை நியமித்தார். தனது பதின்மூன்றாவது நிதி நிலை அறிக்கையைச் சமர்ப்பித்தது அரிதாகவும், வேறுபாடாகவும் இருந்தது. முதலமைச்சராக ஹெக்டே மிகப்பெரிய மகிழ்ச்சியையும் தனிப்பட்ட புகழையும் அடைந்தார். திறமை வாய்ந்த நிர்வாகியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இருந்தபோதிலும் காலப்போக்கில் இவரின் நிர்வாகம் அஇவருடைய குடும்பத்தின் ஒரு பகுதியால் ஊழலில் ஆழ்ந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இவருடைய மைந்தன் மருத்துவ இடம் பெற பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார். என்ஜிஇபி நிறுவனத்திற்கு பங்குகளை மாற்றிய வழக்கில் இவரை இந்திய தேசிய காங்கிரசு குற்றம் சாட்டியது. கர்நாடக உயர்நீதிமன்றம் இவர் அரசின் மீது சாராய பாட்டில் வழக்கில் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து இவர் தன் முதலமைச்சர் பதவியில் இருந்து 13 பிப்ரவரி 1986 அன்று விலகினார். ஆனால் மூன்று நாள் கழித்து 16 பிப்ரவரி அன்று பதவி விலகலைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதால் இவர் தன் பதவியை விட்டு விலகினார். 1989 மற்றும் 1990ல் சுப்பிரமணியன் சுவாமி இவரை தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் குற்றம் சாட்டியதை அடுத்து இவர் சுவாமி மீது வழக்கு தொடர்ந்தார்.
விஸ்வநாத் பிரதாப் சிங் பிரதம மந்திரியாக இருந்த பொழுது இவர் திட்டக்குழுவின் துணைத்தலைவராக இருந்தார். 1996ஆம் ஆண்டில் பிரதம மந்திரியாக இருந்த தேவ கௌடா அறிவுரையின் பேரில் ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இவரை கட்சியில் இருந்து நீக்கினார். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ராஷ்டிரீய நவ நிர்மான் வேதிகாஎன்ற சமூக அமைப்பைத் துவக்கினார். அதன் பிறகு 'லோக் சக்தி' என்ற தனது சொந்த கட்சியைத் துவக்கினார். 1998 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துப் பெரும்பாலான மக்களவைத் தொகுதிகளை வென்றார். 1998 பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் வர்த்தகத் துறை மந்திரியாகப் பதவி வகித்தார். 1999ல் ஜனதா தளம் உடைந்த பிறகு அதன் ஒரு பகுதி முதலமைச்சர் ஜெ.ஹெச்.படேல் அவர்களால் வழிநடத்தப்பட்டது. இன்னொரு பகுதி லோக்சக்தி ஐக்கிய ஜனதா தள் உடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டது. இருந்த போதிலும் இந்தக் கூட்டணி 1999-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் படேலின் அரசால் அரசு எதிர்ப்பு வாக்குகளால் பின்னடைவைச் சந்தித்தது. காங்கிரசு கட்சி வென்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rajya Sabha Members Biographical Sketches 1952 – 2003: H" (PDF). pp. 3–4. பார்க்கப்பட்ட நாள் 1 September 2014.
- ↑ "Hegde, a multifaceted personality". The Hindu. 13 January 2004 இம் மூலத்தில் இருந்து 27 பிப்ரவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040227170037/http://www.hindu.com/2004/01/13/stories/2004011306771100.htm.
- ↑ "Ramakrishna Hegde dead". rediff.com.
- ↑ "State unit History". Bharatiya Janata Party- Karnataka. Archived from the original on 2013-01-16. பார்க்கப்பட்ட நாள் 2019-05-22.