நிர்வாகச் சட்டம்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
நிர்வாகச் சட்டம் (Administrative Law) என்பது பொதுவுடைமைச் சட்டத்தின் கிளைகளில் ஒன்றாகும். அண்மைக்காலத்தில் தோன்றிய நிர்வாகச் சட்டம், இருபதாம் நூற்றாண்டில் தான் பெரியளவில் வளர்ந்து வளர்ச்சிருவது நிரூபணமானது. அடிப்படையிலயே நீதிபதிகளால் உருவாக்கப்படும் சட்டம் என்பதாலும், நீதிபதிகள் தங்கள் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்வதாலும், இந்தச் சட்டம் விரைவாக வளர்வதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் உள்ளது. பொருளதாரக் கொள்கையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாகவும் நிர்வாகச் சட்டத்தின் பகுதிகள் நேரத்திற்கு நேரம் வளர்ச்சியுரக் காரணமாக அமைந்தது.[1][2][3]
நிர்வாகச் சட்டத்தின் பொருள் (Meaning of Administrative Law)
தொகுபொதுவுடைமைச் சட்டத்தின் குறிப்பிடத்தக்க முக்கியமான கிளையாகும் நிர்வாகச் சட்டம். இது ஆட்சியகங்கள் அல்லது அரசு அலுவல்கள் என அறியப்படும் நிர்வாக அதிகார அமைப்புகளின் அமைப்பு, திறன் மற்றும் அதன் கடமைகளை நிர்ணயிப்பதாக உள்ளது. இதுப் பொது நிர்வாகம் தொடர்பானச் சட்டமாகும். ஆரம்பத்தில், அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாகமாகவே கருதப்பட்டு வந்த இது, இருபதாம் நூற்றாண்டில் தான் தனித்துவத்துடன் வளர்ச்சியுரத் தொடங்கியது. அரசின் செயல்பாடுகளின் விரிவாக்கம், மற்றும் அரசு மற்றும் தனிநபர்கள் இடையான தர்க்கங்களின் அதிகரிப்பு ஆகியவற்றுடன், பெரும்பாலான வழக்குகளில் உச்சநீதிமன்றம் நிர்வாக நடவடிக்கைகளை நீதியக மறு ஆய்வுக்கு உட்படுத்தியதால், இருபதாம் நூற்றாண்டில் இச்சட்டக் கிளை வேகமாக வளர்ச்சியுரக் காரணமாயிற்று.
நிர்வாகச் சட்டத்தின் வரையறை (Definition of Administrative Law)
தொகுவிரைவாக வளர்ச்சியுருவதால் நிர்வாகச் சட்டத்தை வரையறுத்துக் கூறுவது மிகவும் கடினமாகும். சில சட்டவியலாளர்களின் முயற்சி கீழேத் தரப்பட்டுள்ளது.
ஐவர் ஜென்னிங்ஸ் (Ivor Jennings)
தொகுஇவரின் கூற்றின்படி, "நிர்வாகச் சட்டம் என்பது நிர்வாக அதிகார அமைப்புகளின், அமைப்பு, திறன்கள் மற்றும் அதன் கடமைகளை நிர்ணயிக்கும் சட்டமாகும்". இந்த வரையறைப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரையறையாகும். ஆனாலும் இதற்கு பின்வரும் குறைபாடுகள் உள்ளன.
(a) இது நிர்வாகச் சட்டத்திற்கும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் இடையான வேறுபாடுகளைத் தரவில்லை
(b) இது ஒரு பரந்த வரையறையாகும்.
கார்ணர் (Garner)
தொகு"நிர்வாகச் சட்டம் அரசின் நிர்வாகம் தொடர்பானதும், அரசின் நிர்வாகத்தை கட்டுப்படுத்துவதற்கான, நீதிமன்றங்களால் சட்டமாக ஏற்றுக்கொள்ளப்படும் விதிமுறைளால் ஆனது ஆகும்".
பொதுவுடைமைக் கழகங்கள் ஆகியன போன்ற நிர்வாக அமைப்புகளைப் பற்றி இதுக் கூறவில்லை என்றப் பார்வையில் இந்த வரையறை விமர்சிக்கப் படுகிறது.
நிர்வாகச் சட்டம் வளர்ச்சியுரக் காரணங்கள் (Reason of Growth of Administrative Law)
தொகு1. தற்போதைய நீதியக முறை தாமதமானதும், செலவினம் கூடுதலாகவும் இருப்பதால்
2. சட்டமியற்றகத்தின் தாமதமும், சட்டம் இயற்றல் சரியாக அமைவதில் ஏற்படும் குறைபாடுகளும் சில அதிகாரங்களை நிர்வாக அதிகார அமைப்புகளுக்கு பகிர்ந்து தர வேண்டியுள்ளதால்.
3. சட்டமியற்றம் கண்டிப்பானதும், நிர்வாகச் செயல்முறை வளைந்துக் கொடுக்கும் தனமையைக் கொண்டிருப்பதால்.
4. நிர்வாகத் தீர்ப்பாயங்களுக்கு சான்றிய, நடவடிக்கை ஆகிய விதிமுறைகள் பாதகம் இல்லை, மற்றும் இவைகள் நடைமுறை சாத்தியங்களையே கணக்கில் எடுத்துக் கொள்ளும்.
5. நீதிமன்றங்களைப் போன்று அல்லாது, நிர்வாக அமைப்புகள் தடுப்பு ஏற்பாடுகளுக்கு தர்க்கத் தரப்பினர் முன் தோன்றுவதற்காக காத்திருக்காது.
6. நிர்வாக அமைப்புகள் சட்ட விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கும். அதாவது ரத்து செய்தல், நிருத்திவைத்தல், நிராகரித்தல் பொன்றவை.
நிர்வாகச் சட்டத்தின் உறைவிடங்கள் ( Sources of Administrative Law)
தொகுஅரசியல் அமைப்புச் சட்டம்
முந்தையச் சம்பவங்கள்
வழக்குச் சட்டங்கள்
எழுத்துருச் சட்டங்கள்
அவசரச் சட்டங்கள்
குழுக்கள் மற்றும் ஆணையங்களின் அறிக்கை
அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் நிர்வாகச் சட்டத்திற்கும் இடையிலானத் தொடர்புகள் (Relation between Constitutional law and Administrative law)
தொகுகெய்த் (Keith)-ன் கூற்றின்படி அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருந்து நிர்வாகச் சட்டத்தை வேறுபடுத்திக் காட்டுவது பகுத்தறிவுக்கு ஒப்பாத செயலாகும். பெரும்பாலான நிர்வாகச் சட்டக் கருத்துக்கள் எல்லாம் அரசியல் அமைப்புச் சட்டத்திலும் காணப்படுகிறது.
1. அரசியல் அமைப்புச் சட்டம் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளாகவும், அவற்றின் அமைப்புச் சார்ந்ததாகவும் இருக்கும். நிர்வாகச் சட்டம் அத்தகைய செயல்பாடுகளின் விரிவான ஆய்வாக இருக்கும்.
2. அரசியல் அமைப்புச் சட்டம் அரசின் அமைப்பும் அதன் செயல்பாடுகளும் சார்ந்ததாக இருக்கின்றபோது, நிர்வாகச் சட்டம் அமைப்பையும், செயல்பாட்டையும் நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பானதாக இருக்கின்றது.
3. அரசியல் அமைப்புச் சட்டம் அமைச்சர்கள் மற்றும் குடிமைப் பணியாளர்களின் அரசியல் அமைப்பு படிநிலையுடன் தொடர்புற்றுள்ள போது, நிர்வாகச் சட்டம் மாறுபட்ட அரசுத்துறைகளின் அமைப்பும், அது செயல்படும் முறையுடன் தொடர்புற்றதாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sabino Cassese, "Administrative Law without the State? The Challenge of Global Regulation", 37 New York University Journal of International Law and Politics, 2005, p. 663 and ff., Vincenzo Ferraro, L'organizzazione della pubblica amministrazione scolastica. La peculiare integrazione tra gli ordinamenti globali, internazionali e sovranazionali, Torino, 2023, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-8-3973-2552-3
- ↑ Zhang, Angela Huyue (2024). High Wire: How China Regulates Big Tech and Governs Its Economy. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780197682258.
- ↑ French Ministry of Justice (15 September 2021). "L'organisation de la justice en France" [Organization of justice in France]. Ministère de la Justice (in பிரெஞ்சு). பார்க்கப்பட்ட நாள் 4 March 2023.
Les juridictions françaises se répartissent en deux ordres : un ordre judiciaire et un ordre administratif. Les juridictions de l'ordre judiciaire sont compétentes pour régler les litiges opposant les personnes privées et pour sanctionner les auteurs d'infractions aux lois pénales. ... Les juridictions de l'ordre administratif sont compétentes dès qu'une personne publique est en cause (une municipalité ou un service de l'État par exemple).
[The French courts are divided into two orders: a judicial order and an administrative order. The courts of the judicial order are responsible for settling disputes between private individuals and for punishing the perpetrators of criminal offenses. ... The administrative courts have jurisdiction as soon as a public entity is involved (a municipality or a government department for example).]