வீரேந்திர வர்மா
வீரேந்திர வர்மா (Virendra Verma) (18 செப்டம்பர் 1916 - 2 மே 2009) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் உத்தரபிரதேசத்தின் சாம்லியில் பிறந்தார். பஞ்சாப் ஆளுநராகவும், சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராகவும் (1990) இமாச்சலப் பிரதேச ஆளுநராகவும் (1990-1993) பணியாற்றினார்.[1]
வீரேந்திர வர்மா | |
---|---|
மாநிலங்களவை | |
பதவியில் 3 ஏப்ரல் 1984 – 14 ஜூன் 1990 | |
பஞ்சாப் ஆளுநர், சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளர் | |
பதவியில் 14 ஜூன் 1990 – 18 திசம்பர் 1990 | |
7வது இமாச்சலப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 20 திசம்பர் 1990 – 29 ஜனவரி 1993 | |
முன்னையவர் | பி. இராச்சையா |
பின்னவர் | சுரேந்திர நாத் (கூடுதல் பொறுப்பு) |
பன்னிரெண்டாவது மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 10 மார்ச் 1998 – 26 ஏப்ரல் 1999 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாம்லி, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா | 18 செப்டம்பர் 1916
இறப்பு | 2 மே 2009 சாம்லி, உத்தரப் பிரதேசம், இந்தியா | (அகவை 92)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரசு ஜனதா தளம் இராஷ்டிரிய லோக்தள் |
துணைவர் | இரமேசுவரி தேவி (1940 – 2017) |
பிள்ளைகள் | சத்யேந்திர வர்மா சாதனா குமார் சுனிதா வர்மா-குர்வாரி, சகோதரர்கள் - தர்மேந்திர வர்மா & சுரேந்திர வர்மா |
முன்னாள் கல்லூரி | மீரட் கல்லூரி (சட்டம்) |
தொழில் | அரசியல்வாதி, விடுதலை வீரர் |
சொந்த வாழ்க்கை
தொகுவீரேந்திர வர்மா சாம்லியிலுள்ள ஜெஎச் பள்ளியில் கல்வி பயின்றார். முசாபர்நகரில் தனது உயர்கல்வியை முடித்த இவர் மீரட்டிலுள்ள மீரட் கல்லூரியில் சட்டம் பயின்றார். ஜூன் 1940 இல் வர்மா இராமேஸ்வரி தேவி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருந்தனர்.
இவர் தனது வாழ்க்கையில், அமெரிக்கா], கனடா, ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, இங்கிலாந்து, நெதர்லாந்து, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, துருக்கி, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.[2]
அரசியல் வாழ்க்கை
தொகுவீரேந்திர வர்மா முன்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து முசாபர்நகர் மாவட்ட வாரியத் தலைவராகவும், (1948-1952), மாவட்ட காங்கிரசு குழுவின் உறுப்பினராகவும் (1950-1959), உத்தரப் பிரதேச காங்கிரசின் நிர்வாகக்குழுவில் உறுபினராகவும் (1960-1967), அகில இந்திய காங்கிரசு குழு உறுப்பினராகவும் (1950-1980), காங்கிரசு செயற்குழு உறுப்பினராகவும் (1977-1980) இருந்துள்ளார்.
1978இல் காங்கிரசு கட்சி பிளவுபடாபோது, வீரேந்திர வர்மா, பி.வி. நரசிம்மா ராவ், பிரணாப் முகர்ஜி, கமலாபதி திரிபாதி, ஏ. பி. சர்மா, பூட்டா சிங் ஆகியோர் இந்திரா காந்தியுடன் தங்கியிருந்தனர். 1978இல் இந்திரா காந்தியை ஜனதா கட்சி அரசு கைது செய்ததை எதிர்த்து, இவர், 1200 சத்தியாகிரகிகளை வழிநடத்தி, கைது செய்யப்பட்டு, முசாபர்நகர் மாவட்ட சிறையில் இரண்டு முறை அடைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Biographical Sketch of Member of 12th Lok Sabha: VERMA, VIRENDRA". இந்திய நாடாளுமன்றம் website.
- ↑ "Virender Singh Verma, Ex. Governor". [NIC, Muzaffarnagar] website.