பிணறாயி

(பினராயி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிணறாயி (Pinarayi) கேரளா மாநிலத்தின் கண்ணூர் மாவட்டம், தலச்சேரி வருவாய் வட்டத்தில் அமைந்த ஓலையம்பாளையம் கிராம ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும்.[1]தற்போதைய கேரளா முதலமைச்சர் பிணறாயி விஜயன் இக்கிராமத்தில் பிறந்தவர் ஆவார்.

பிணறாயி
ஒலையம்பாலம்
சிற்றூர்
பிணறாயி is located in கேரளம்
பிணறாயி
பிணறாயி
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பிணறாயி ஊரின் அமைவிடம்
பிணறாயி is located in இந்தியா
பிணறாயி
பிணறாயி
பிணறாயி (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°49′18″N 75°29′50″E / 11.821782°N 75.497288°E / 11.821782; 75.497288
நாடு இந்தியா
மாநிலம்கேரளா
மாவட்டம்கண்ணூர்
வருவாய் வட்டம்தலச்சேரி
அரசு
 • வகைபஞ்சாயத்து
 • தலைவர்கொன்கின் ரவீந்திரன்
பரப்பளவு
 • மொத்தம்20.54 km2 (7.93 sq mi)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்15,828
 • அடர்த்தி770/km2 (2,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
670741
தொலைபேசி குறியீடு0490-382454
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KL
வாகனப் பதிவுKL 58 KL 13
பாலின விகிதம்1000M/1047F /
மக்களவைத் தொகுதிகண்ணூர்
சட்டமன்றத் தொகுதிதர்மடம்
இணையதளம்www.pinarayionline.com
பிணறாயி கிராமத்தில் பிறந்த கேரளாவின் தற்போதைய முதலமைச்சர் பிணறாயி விஜயன்

நிலவியல்

தொகு

கண்ணூர் மாவட்ட நிர்வாகத் தலைமையிடமான கண்ணூருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலச்சேரியில் உள்ளது. பினராயி ஊராட்சியைச் சுற்றிலும் மூன்று புறங்களிலும் ஆறுகள் சூழ்ந்துள்ளது. நான்காவது புறத்தில் கடிரூர், தர்மடம், பெரளச்சேரி, வெங்காடு மற்றும் கோட்டயம் மற்றும் ஊர்கள் உள்ளது. பிணறாயி கிராமத்திற்கு மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் அரபுக் கடல் உள்ளது. பிணறாயி பஞ்சாயத்து கிராம் பிணறாயி மற்றும் எருவாட்டி என ஊர்களைக் கொண்டுள்ளது. பிணறாயி ஊராட்சி 19 வார்டு உறுப்பினர்களையும், பல துவக்கப் பள்ளிகளையும் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 3,922 வீடுகள் கொண்ட பிணறாயி கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 16,801 ஆகும். அதில் ஆண்கள் 7,786 மற்றும் 9,015 பெண்கள் ஆகவுள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1518 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1158 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 97.41% ஆகவுள்ளது. பிணறாயி கிராமத்தின் மக்கள் தொகையில் இந்துக்கள் 85.71%, இசுலாமியர் 13.49% மற்றும் பிறர் 0.50% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணறாயி&oldid=3941610" இலிருந்து மீள்விக்கப்பட்டது