ஆலப்புழா கலங்கரை விளக்கம்
ஆலப்புழா கலங்கரை விளக்கம் (Alappuzha Lighthouse) என்பது கேரளத்தின், ஆலப்புழா நகரத்தில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கமாகும். இது 1862 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மேலும் இது ஒரு முக்கிய சுற்றுலா பகுதியாகும். கலங்கரை விளக்கத்தைப் பார்வையிட இந்திய குடிமக்களிடம் 20 ரூபாயும், வெளிநாட்டவர்களிடம் 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கபடுகிறது. ஒவ்வொரு வாரமும் 1500 மணி முதல் 1630 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆலப்புழா கலங்கரை விளக்கின் ஒரு தோற்றம் | |
கேரளம் | |
அமைவிடம் | கேரளம், ஆலப்புழா |
---|---|
ஆள்கூற்று | 9°29′38″N 76°19′15″E / 9.493927°N 76.320935°E |
ஒளியூட்டப்பட்டது | 1862 |
கட்டுமானம் | கட்டுமான கோபுரம் |
கோபுர வடிவம் | மாடம் மற்றும் விளக்கு கொண்ட உருளை கோபுரம் |
குறியீடுகள்/அமைப்பு | சிவப்பு மற்றும் வெள்ளை கிடைமட்ட பட்டைகள், சிவப்பு விளக்கு |
உயரம் | 28 மீட்டர்கள் (92 அடி) |
குவிய உயரம் | 33 மீட்டர்கள் (108 அடி) |
ஒளி மூலம் | 150 W metal halide lamp (230 V AC recommended power supply / 220–250 V range supply) |
வீச்சு | 24.5 கடல் மைல்கள் (45.4 km; 28.2 mi) |
சிறப்பியல்புகள் | Fl W 15s. |
Admiralty எண் | F0706 |
NGA எண் | 27516 |
ARLHS எண் | IND-071 |
வரலாறு
தொகுஇந்தியாவின் ஆலப்பழா கலங்கரை விளக்கம் உள்ள இடமான ஆலப்புழா, கேரளத்தின் பரபரப்பான துறைமுகங்கள் மற்றும் வர்த்தக மையங்களில் ஒன்றாகும். திருவிதாங்கூரின் ஒரு பகுதியான ஆலப்புழா, இந்திய விடுதலைக்கு முன்னர் திருவிதாங்கூரைச் சேர்ந்த மன்னரால் ஆளப்பட்டது. போர்த்துகீசியம், டச்சுக்காரர்கள், ஆங்கிலேய வர்த்தகர்களின் வருகைக்குப் பிறகு, விழிஞ்ஞம், கொல்லம், திருவிதாங்கூர் மற்றும் புரைக்காடு ஆகியவை முந்தைய திருவிதாங்கூரின் முக்கிய துறைமுகங்களாக இருந்தன, இதன் மூலம் வெளிநாட்டு வர்த்தகம் செழித்தது.
புரைக்காடு துறைமுகத்தின் வீழ்ச்சியால், வர்த்தகர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியது அவசியமாயிற்று. அதற்காக ஆலப்புழாவை துறைமுகமாக உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டன. இந்த துறைமுகம் 1792 இல் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு திறக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் வழக்கமான கலங்கரை விளக்கம் எதுவும் இருக்கவில்லை.
துறைமுகத்தின் பயன்பாடு அதிகரித்ததால், துறைமுகப் பொறுப்பாளர்கள் கலங்கரை விளக்கம் ஒன்றை அமைக்கவேண்டி இருந்தது. தற்போதைய கலங்கரை விளக்கத்தின் கட்டுமானமானது அரசர் இரண்டாம் மார்தாண்டா வர்மரின் (திருவிதாங்கூரின் மன்னர்) ஆட்சியில் தொடங்கி, இராம வர்மரின் ஆட்சிகாலத்தில் நிறைவடைந்தது. கலங்கரை விளக்கத்துக்கான அடிக்கல்லை 26 ஏப்ரல் 1860 அன்று திருமதி மௌக் கிராஃபோர்டு நாட்டினார்.
30 ' உயர கலங்கரை விளக்கத்தில் தேக்கு மரத்தாலான சுழல் படிக்கட்டு அமைக்கபட்டது. தேங்காய் எண்ணெய் கொண்டு எரியும் இரட்டை திரி விளக்கு ஒளியூற்றுடன் முதல்-வரிசை ஓளியியல் கருவிகளின் ஒரு பகுதி எம் /எஸ் ஆல் வழங்கப்பட்டது. சான்ஸ் பிரதர்ஸ், பர்மிங்காமால், 28 மார்ச், 1862 இல் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இதே உபகரணங்கள் 1952 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தன. பின்னர் 500 மிமீ டிரம் ஆப்டிக் மற்றும் ஏஜிஏ தயாரிப்பின் டிஏ கேஸ் ஃப்ளாஷர் கொண்டு மாற்றப்பட்டது.
1000 வாட் மின்சார விளக்குடன் தற்போதைய 4 வது வரிசை ஓளியியல் கருவி 1960 இல் நிறுவப்பட்டது.
நேரடி இயக்கி அமைப்பு 8 ஏப்ரல் 1998 இல் ஒருங்கிணைக்கப்பட்டது, மேலும் 30, திசம்பர் 1998 அன்று 300 மிமீ விளக்குகளில் ஒரு தனி அவசர விளக்கு அமைக்கபட்டது. வெள்ளொளிர்வு விளக்கு 28 பிப்ரவரி 1999 இல் மாற்றபட்டு 230 V 150 W உலோக ஹேலைட்டு விளக்கு அமைக்கபட்டது.
கலங்கரை விளக்கம் தானியக்கமாக ஆக்கப்படாமல் ஆளுள்ள நிலையம். [1]
வெற்று வெள்ளை வண்ணம் பூசப்பட்ட கலங்கரை விளக்கமானது 2000 ஆம் ஆண்டில் சிவப்பு மற்றும் வெள்ளை பட்டைகள் பூசப்பட்டன.
பாரவையிடல்
தொகுஇந்த கட்டிடம் 2007 முதல் பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. [2]
படக்காட்சியகம்
தொகு-
ஆலப்புழா கலங்கரை விளக்கம்
-
கலங்கரை விளக்கம் நெருக்கமான தோற்றத்தில்
-
அலப்புழா கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்ட பெட்ரோலிய ஆவி விளக்கு
குறிப்புகள்
தொகு- ↑ "Lighthouse Digest Article". Lighthouse Digest. Archived from the original on 27 February 2008. பார்க்கப்பட்ட நாள் 6 March 2008.
- ↑ "Alappuzha lighthouse to celebrate 150 Year". The Hindu (Chennai, India). 23 January 2012. https://www.thehindu.com/news/national/kerala/Alappuzha-lighthouse-to-celebrate-150-Year/article13378011.ece. பார்த்த நாள்: 22 July 2018.
வெளி இணைப்புகள்
தொகு- Alappuzha Lighthouse
- ஆலப்புழா கலங்கரை விளக்கம் 2009