வர்ணகுலசிங்கம் முருகதாசன்

வர்ணகுலசிங்கம் முருகதாசன் (Varnakulasingham Murugathasan, டிசம்பர் 2, 1982 - பெப்ரவரி 12, 2009) சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். இவர், 7 பக்கங்களுக்கு "உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார்[1].

வர்ணகுலசிங்கம் முருகதாசன்
முருகதாசன்
பிறப்பு(1982-12-02)2 திசம்பர் 1982
துன்னாலை, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
இறப்புபெப்ரவரி 12, 2009(2009-02-12) (அகவை 26)
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
இறப்பிற்கான
காரணம்
தீக்குளித்து இறப்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஇனவழிப்பில் இருந்து ஈழத்தமிழரைக் காக்கக்கோரி தீக்குளித்து இறப்பு

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர்.

இலங்கையின் உள்நாட்டுப் போரை எல்லோரினதும் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலில் 2009, பெப்ரவரி 12 தீக்குளித்து மரணமடைந்த முருகதாஸ் விரும்பியிருந்தார் என்று லண்டன் பிபிசி தெரிவித்தது[2].

ஈகப்பேரொளி முருகதாசனின் இறுதிவணக்கம் பிரித்தானியாவில் மார்ச் 7, 2009 நடைபெற்றது.[3]

இறுதி சாசனம்

தொகு

முருகதாசனின் இறுதி மரண சாசனக் கடிதம் ஏழு பக்கங்களைக் கொண்ட நீண்ட கடிதம். இக்கடிதத்தில் கூடுதலான பக்கங்கள் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களை கண்டிப்பதோடு, வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. உரிமையை காக்க போராடுவதில் என்ன தவறு என்றும் அவர் கேட்டிருந்தார். 'தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்' என்று கூறி, உண்மைக்காக உயிர் தருவதாக தெரிவித்து தனது மரணசாசனத்தை முடித்திருந்தார்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "ஜெனீவா ஐ.நா முன்றலில் தீக்குளித்த தமிழர் மரணம்; மரணசாசன அறிக்கை இணைப்பு". Archived from the original on 2009-02-15. பார்க்கப்பட்ட நாள் 2009-03-07.
  2. http://news.bbc.co.uk/1/hi/uk/7929236.stm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-10. பார்க்கப்பட்ட நாள் 2009-03-07.

வெளி இணைப்புகள்

தொகு