துன்னாலை

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்

துன்னாலை (Thunnalai) இலங்கையின் வடபகுதியில் யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறைக்கும் தொண்டைமானாறுக்கும் அருகாக அமைந்துள்ள சிறிய ஊர். இது வடமராட்சியில் கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமமாகும். இதன் அருகே நெல்லியடி, பருத்தித்துறை போன்ற நகரங்கள் காணப்படுகின்றன. இவ்வூர் துன்னையம்பதி எனவும் அழைக்கப்படும். இங்கே புகழ்பெற்ற ஆலயங்களான வல்லிபுர ஆழ்வார் கோவில், துன்னாலை கலிகைக் கந்தசுவாமி ஆலயம் என்பன அமைந்துள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, அம்பம் அரசினர் வைத்தியசாலைகள் என்பன இக்கிராமத்திற்கு அருகே அமைந்திருக்கின்றன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதற் கரும்புலியான கப்டன் மில்லர் பிறந்து வளர்ந்த ஊரும் இதுவாகும்.

துன்னாலை
துன்னாலை is located in Northern Province
துன்னாலை
துன்னாலை
ஆள்கூறுகள்: 9°47′0″N 80°14′0″E / 9.78333°N 80.23333°E / 9.78333; 80.23333
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ. பிரிவுவடமராட்சி தென்மேற்கு

தமிழ் மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் சைவ, கிறித்துவ சமயங்களை கடைபிடிக்கின்றனர். வேளாண்மை, மற்றும் வணிகம் என்பன இவர்களின் பிரதான தொழிலாகும். இங்கு பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துன்னாலை&oldid=3903929" இலிருந்து மீள்விக்கப்பட்டது