பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென்
பேர்டினண்ட் ஃபிறீஹெர் வொன் ரிச்தோஃபென் (Ferdinand Freiherr von Richthofen 1833 - 1905), ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒரு புவியியலாளரும், பயண ஆர்வலரும், அறிவியலாளரும் ஆவார். இவர் ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூஹே (Karlsruhe) என்னுமிடத்தில் பிறந்தார். பெர்லின் நகரில் கல்வி கற்றார். 1860ஆம் ஆண்டில், யூலென்பர்க் பயணம் (Eulenburg Expedition) எனப்பட்ட பயணத்தில் சேர்ந்து, 1860க்கும், 1862க்கும் இடையில், இலங்கை, ஜப்பான், தாய்வான், செலெபெஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், சீயாம், பர்மா ஆகிய நாடுகளுக்குச் சென்றார். 1862க்கும், 1868க்கும் இடையில், ஐக்கிய அமெரிக்காவில், கலிபோர்னியாவில் தங்க வயல்களைக் கண்டு பிடிக்கும் பணியில் நிலவியலாளராகப் பணி புரிந்தார். இதன் பின்னர் பல தடவை சீனா, ஜப்பான், ஜாவா, பர்மா முதலிய நாடுகளில் பயணம் செய்துள்ளார் (செலவாகச் சென்றுள்ளார்).[1][2][3]
பேர்டினண்ட் வொன் ரிச்தோஃபென் | |
---|---|
பிறப்பு | 5 மே 1833 Pokój |
இறப்பு | 6 அக்டோபர் 1905 (அகவை 72) பெர்லின் |
பணி | நிலவியலாளர், தேடலாய்வாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், volcanologist |
வேலை வழங்குபவர் |
|
விருதுகள் | Founder’s Medal, Honorary doctor of the Heidelberg University, Foreign Member of the Royal Society, Wollaston Medal |
இவர், புவியியல், நிலவியல், பொருளியல், இனவியல் (ethnology) தொடர்பான தனது ஆய்வுகளை, நிலப்படத் தொகுதியுடன் மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளார்மேற்கோள் தேவை.
இவர், 1875 இல் பொன் (பான்) பல்கலைக்கழகத்தில் நிலவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். 1883 இலும், 1886 இலும் முறையே லீப்சிக் பல்கலைக்கழகம், பெர்லினில் உள்ள பிறீட்ரிக் வில்ஹெல்ம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புவியியல் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் பெர்லினில் 1905ம் ஆண்டு இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Approaches Old and New to the Silk Roads" Vadime Elisseeff in: The Silk Roads: Highways of Culture and Commerce. Paris (1998) UNESCO, Reprint: Berghahn Books (2000), pp. 1-2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-3-103652-1; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57181-221-0; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57181-222-9 (pbk)
- ↑ Waugh, Daniel. (2007). "Richthofen's "Silk Roads": Toward the Archaeology of a Concept." The Silk Road. Volume 5, Number 1, Summer 2007, p. 4.
- ↑ ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள் தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Richthofen, Ferdinand". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 23. (1911). Cambridge University Press.