உலக சதுப்பு நில நாள்
உலக சதுப்பு நில நாள் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவத்தினை மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் நாளாகும். இந்த நாள் பிப்ரவரி 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.[1]
உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.
அலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
சதுப்புநில நாள் துவக்கம்
தொகு1971-ல் காசுபியன் கடற்பகுதியிலுள்ள ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்பு நிலங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாப்பது குறித்து முடிவுசெய்து, அதுபற்றிய விவாதக் கூட்டத்தையும், அதே ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. இதேநாளை (பிப்ரவரி 2-ஐ) உலக சதுப்புநில நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. மேலும் இக்கூட்டம் ராம்சர் நகரில் நடைபெற்றதால் இந்த அமைப்புக்கு ராம்சர் அமைப்பு என பெயர் பெற்றது.[2][3]
விவரங்கள்
தொகுராம்சர் அமைப்பில், இந்தியா உட்பட 161 நாடுகள் உள்ளன. உலகின் சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த 1,950 சதுப்புநிலங்கள் பட்டியலிடப்பட்டு அவ்வமைப்பால் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் 25 சதுப்புநிலங்கள் ராம்சர் தகுதிவாய்ந்தவையாகவும் அதில் தமிழகத்தில் கோடியக்கரை, பழவேற்காடு போன்றவை அடங்கும்.[4] பழவேற்காடு தினம் AARDE Foundation ஒவ்வொரு ஆண்டும் பழவேற்காடில் கொண்டாடுகிறது.[சான்று தேவை]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ramsar.org|WORLD WETLANDS DAY 2016|வலை காணல்: பிப்ரவரி 04 2016
- ↑ World Wetlands Day 2016: Satellite images offer fascinating look at Earth's most precious resource – water|By David Sim|February 2, 2016 13:23 GMT|வலை காணல்: பிப்ரவரி 04 2016
- ↑ Ramsar World-Wetlands-Day-2016|வலை காணல்: பிப்ரவரி 04 2016
- ↑ arulagam.org | உலக சதுப்பு நில நாள் | Written by சு. பாரதிதாசன்[தொடர்பிழந்த இணைப்பு]
புற இணைப்புகள்
தொகு- தமிழ் மொழி-பத்தாவது உலக சதுப்பு நில நாள்-(GMT+08:00) 2006-02-02 20:06:54- இணைய இணைப்பு: பிப்ரவரி 04 2016[தொடர்பிழந்த இணைப்பு]
- தமிழ் அருள்-உலக சதுப்பு நில தினம் இன்று!-பிப்ரவரி 02-இணைய இணைப்பு: பிப்ரவரி 04 2016
- அருளகம்-சு.பாரதிதாசன்-உலக சதுப்பு நில நாள்-இணைய இணைப்பு: பிப்ரவரி 04 2016[தொடர்பிழந்த இணைப்பு]
- தினகரன்-சமூகம்-சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் அழிந்து வரும் சதுப்புநில தாவரங்கள் - இன்று உலக சதுப்பு நில நாள்- '2/2/2015 3:40:31 PM-இணைய இணைப்பு: பிப்ரவரி 04 2016[தொடர்பிழந்த இணைப்பு]