பிரெண்டா மில்னெர்

பிரெண்டா மில்னெர் (Brenda Milner,பிறப்பு; ஜூலை 15, 1918): பிரித்தானிய- கனடிய நரம்புசார் உளவியலாளர் ஆவார். மருத்துவ நரம்புசார் உளவியல் துறையில் ஆய்விலக்கியத்தில் பல்வேறு தலைப்புகளில் விரிவாகப் பங்களித்திருக்கிறார்.[1] நரம்புசார் உளவியலின் நிறுவனர் எனச் சிலநேரம் இவர் குறிப்பிடப்படுகிறார்.[2] மில்னெர் 2010 ஆம் ஆண்டு, மக்கில் பல்கலைக்கழத்தில் நரம்பியல் துறை, நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகிய துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். மேலும் மொண்ட்ரியால் நரம்பியல் நிறுவனத்தில் உளவியல் பேராசிரியராகவும் இருந்தார்.[3] 2005 ஆம் ஆண்டில் இவர் 20 பட்டங்களைப் பெற்றிருந்தார். மேலும் தனது 19 ஆண்டிலேயே பணியாற்றத் தொடங்கினார்.[4] இவருடைய தற்போதைய பணி, பெருமூளையின் வலது மற்றும் இடது கோளங்களை ஆய்வு செய்வதாகும்.[4] மில்னெர் நரம்பியல் உளவியல் துறையின் நிறுவனராகவும் அதன் வளர்ச்சியில் பங்காற்றும் ஒரு இன்றியமையாத நபராகவும் விளங்குகிறார்.[5] இவர் 2009 இல் அறிவுசார் நரம்பியலுக்கான பல்சான் பரிசு பெற்றுள்ளார். மேலும் 2014 இல் ஜான் ஓ'கீஃப், மார்க்கஸ் ரெய்ச்சல் ஆகியோருடன் இணைந்து காவ்லி பரிசினைப் பெற்றுள்ளார். இவருக்கு ஜூலை 2018 -இல் நூறு வயது முடிவடைந்துள்ளது.[6] இந்த வயதிலும் இவர் ஆராய்ச்சிப் பணிகளை மேற்பார்வை செய்தவண்ணம் உள்ளார்.[7]

பிரெண்டா மில்னெர்
மிக்கில் பல்கலைக்கழகத்தில் மில்னெர் , 2011
பிறப்புசூலை 15, 1918 (1918-07-15) (அகவை 106)
மான்செஸ்டர், இங்கிலாந்து
வாழிடம்மொண்ட்ரியால் கனடா
துறைநரம்புசார் உளவியல்
பணியிடங்கள்மக்கில் பல்கலைக்கழகம், மொண்ட்ரியால் நரம்பியல் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம், மக்கில் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்டொன்னால்ட் ஆல்டிங் ஹெப்
அறியப்படுவதுநினைவாற்றல், அறிதிறன் பற்றிய ஆய்வுகள்
விருதுகள்
  • கெய்டுனர் விருது
  • கனடாவின் தோழமை விருது
  • பல்சான் பரிசு அறிவுசார் நரம்பியல் (2009)
  • காவ்லி பரிசு நரம்பியல் (2014)

இளமை

தொகு

பிரெண்டா லாங்க்ஃபோர்ட் (திருமணத்திற்குப் பின் பிரெண்டா மில்னெர்), 1918, ஜூலை 15 ஆம் நாள் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிறந்தார்.[8][9] இவருடைய தந்தை சாமுவேல் லாங்க்ஃபோர்ட், ஓர் இசை விமர்சகரும், இதழியலாளரும் ஆவார். இவருடைய தாயார் ஒரு மாணவப் பாடகர்.[9] இவருடைய தாய் தந்தை இருவரும் இசைத்துறையில் திறமையானவர்களாய் இருந்தாலும் பிரெண்டாவுக்கு இசைமேல் விருப்பம் இல்லை.[9] 1918 -இல் மில்னெருக்கு ஆறு வயதாய் இருக்கும்பொழுது, இவரும் இவருடைய தாயாரும் இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல் நோய்க்கு ஆளானார்கள். இந்நோய் அக்காலத்தில் இருபது மில்லியனிலிருந்து நாற்பது மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்து போனார்கள். இது முதலாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களை விட அதிகமாகும். ஆயினும் மில்னெரும் அவருடைய தாயாரும் இந்நோய்த் தொற்றிலிருந்து பிழைத்துக்கொண்டனர். இவருடைய தந்தை இவருக்கு கணிதம், கலைகளை எட்டு வயது வரை கற்றுக்கொடுத்தார்."[9] பிரெண்டா வித்திங்டன் பெண்கள் பள்ளியில் சேர்ந்தார்.[2] இது அவர் நியூஹாமில் கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கணிதம் படிக்க உதவியது. 1936-இல் இவருக்கு உதவித்தொகை கிடைத்தது.“[8][10] அச்சமயத்தில் இக்கல்லூரியில் 400 பெண்களுக்கு மட்டுமே இடமிருந்தது. பிரெண்டா அவர்களில் ஒருவராக இடம்பெற்றார். பின்னர் தனக்கு கணிதம் படிக்க போதிய அறிவு இல்லை என உணர்ந்த பிரெண்டா உளவியல் துறைக்கு மாற்றிக்கொண்டார்.[8] 1939 இல் பிரெண்டா தனது பரிசோதனை உளவியல் படிப்பில் இளங்கலைப் பட்டம்பெற்றார்.[8] அப்பொழுது இப்படிப்பு மனித அறிவியல்.[10] என அழைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Birchard, Karen (November 6, 2011) " 'Nosy' and Observant, a Neuroscientist Continues Her Memorable Career at 93", Chronicle of Higher Education
  2. 2.0 2.1 Perdue, Mitzi (15 April 2015). "Science Legend Dr. Brenda Milner". Genetic Engineering & Biotechnology News 35 (8): pp. 6–7. http://www.genengnews.com/insight-and-intelligence/science-legend-dr-brenda-milner/77900405/. 
  3. Brenda Milner Wins Balzan Prize for Cognitive Neurosciences பரணிடப்பட்டது 2020-01-27 at the வந்தவழி இயந்திரம். (2011). Government of Canada.
  4. 4.0 4.1 "Dr. Brenda Milner". Canadians for Health Research. சூன் 2005. Archived from the original on அக்டோபர் 8, 2014. பார்க்கப்பட்ட நாள் மே 14, 2013.
  5. "Pioneering Memory Researcher Brenda Milner To Receive Pearl Meister Greengard Prize". Medical News Today. May 26, 2011. பார்க்கப்பட்ட நாள் May 14, 2013.
  6. "Pioneering neuropsychologist Brenda Milner turns 100". Thesuburban.com. பார்க்கப்பட்ட நாள் November 30, 2018.
  7. "Mind of her own: Montreal neuroscientist Brenda Milner on turning 100". Montrealgazette.com. July 19, 2018. பார்க்கப்பட்ட நாள் November 30, 2018.
  8. 8.0 8.1 8.2 8.3 No Authorship Indicated (1974). "Distinguished Scientific Contribution Awards for 1973". American Psychologist 29: 27–43. doi:10.1037/h0020147. https://archive.org/details/sim_american-psychologist_1974-01_29_1/page/27. 
  9. 9.0 9.1 9.2 9.3 "Dr. Brenda Milner - Biography". The Great Canadian Psychology Website. Milner_bio1.html. Worth Publishers. பார்க்கப்பட்ட நாள் 2016-06-20.
  10. 10.0 10.1 "Dr. Brenda Milner - Biography". The Great Canadian Psychology Website. Milner_bio2.html. Worth Publishers. பார்க்கப்பட்ட நாள் 2016-06-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரெண்டா_மில்னெர்&oldid=3858049" இலிருந்து மீள்விக்கப்பட்டது