கானாயி குஞ்ஞிராமன்

கானாயி குஞ்ஞிராமன் (Kanayi Kunhiraman) (மலையாளம்: കാനായി കുഞ്ഞിരാമന്‍ கேரளத்தின் புகழ் பெற்ற சிற்பிகளுள் ஒருவர். இவர் 1937 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் காசிரங்கோடு மாவட்டத்தில் பிறந்தவர்.

கானாயி குஞ்ஞிராமன்
பிறப்பு25 சூலை 1937 (1937-07-25) (அகவை 86)
குட்டமத், காசிரகோட் மாவட்டம்
பணிசிற்பி
செயற்பாட்டுக்
காலம்
1960 - தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்தமிழகப் பெண், மலம்புழா யட்சி, கடற்கன்னி

கல்வி தொகு

கானாயி குஞ்ஞிராமன் சோளமண்டலம் கலைக் கிராமத்தில் ஓவியக்கலை பயின்றார். புகழ்பெற்ற ஓவியரான கெ.ஸி.எஸ். பணிக்கர் இவருடைய ஓவிய ஆசிரியர். தேவி பிரசாத் ராய் சௌத்திரி இவரின் சிற்பக்கலை ஆசிரியர்.பின்னர் சென்னைக் கவின் கலைக்கல்லூரியில் சிற்பவியல் பட்டயப் படிப்பு பயின்ற இவர் 1960 இல் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இலண்டனில் உள்ள ஸ்லெய்ட் கலைப் பள்ளியில் 1965இல் மேல்படிப்பை முடித்தார்.

 
யட்சி, மலம்புழா
 
கடற்கன்னி, சங்குமுகம், திருவனந்தபுரம்ʼ

விருதுகள் தொகு

2005இல் இராஜா இரவி வர்மா விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kanayi Kunhiraman
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானாயி_குஞ்ஞிராமன்&oldid=3300804" இலிருந்து மீள்விக்கப்பட்டது