அலெக்சாந்தர் நெவ்ஸ்கி

நோவ்கோரோட்டின் இளவரசர்

அலெக்சாந்தர் யரோஸ்லவிச் நெவ்ஸ்கி (உருசியம்: Алекса́ндр Яросла́вич Не́вский; pronounced [ɐlʲɪˈksandr jɪrɐˈslavʲɪtɕ ˈnʲɛfskʲɪj]( கேட்க); 13 மே 1221[1] – 14 நவம்பர் 1263) என்பவர் நோவ்கோரோத் இளவரசர் (1236–52), கீவின் பெரும் இளவரசர் (1236-52) மற்றும் விலாடிமிரின் பெரும் இளவரசர் (1252–63) ஆவார். இவரது காலத்தில் கீவிய ருஸ்ஸானது கடினமான காலத்தில் இருந்தது.

புனிதர் அலெக்சாந்தர் நெவ்ஸ்கி
Святой Александр Невский
அலெக்சாந்தர் நெவ்ஸ்கியின் உருவம்
பிறப்பு(1221-05-13)13 மே 1221 [1]
பெரஸ்லாவ்-சலேஸ்கி, விலாடிமிர்-சுஸ்தல்
(தற்கால உருசியா)
இறப்பு14 நவம்பர் 1263(1263-11-14) (அகவை 42)
கொரோடெட்ஸ், நிஸ்னி நோவ்கோரோத் ஒப்லாஸ்து, விலாடிமிர்-சுஸ்தல்
(தற்கால உருசியா)
கல்லறைஅலெக்சாந்தர் நெவ்ஸ்கி லவ்ரா
ஏற்கும் சபை/சமயங்கள்கிழக்கு கிறிஸ்தவம்
புனிதர் பட்டம்1547 by மகரியஸ்
முக்கிய திருத்தலங்கள்விலாடிமிர்; பெரஸ்லாவ்-சலேஸ்கி, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்
திருவிழா23 நவம்பர் (இளைப்பாறுதல்)
23 மே (ராஸ்டாவ் மற்றும் யாரோஸ்லாவ் பரிசுத்தவான்களின் சினாக்ஸிஸ்)
30 ஆகத்து (பீடத்தில் மொழிபெயர்ப்பு)
சித்தரிக்கப்படும் வகைமாபெரும் உருசிய இளவரசர் போல் அங்கி அணிந்தவர், அடிக்கடி கவசம் அணிந்தவர்
பாதுகாவல்செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், உருசிய எல்லை
சர்ச்சை(கள்)
  • வாசிலி அலேக்சாந்தரோவிச்
  • யூடோக்சியா அலேக்சாந்தரோவ்னா
  • பெரஸ்லாவின் டிமிட்ரி
  • கொரோடெட்ஸின் ஆன்ட்ரே
  • மாஸ்கோவின் டேனியல்

இவர் மத்திய கால ருஸ்ஸின் முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். இவர் செவோலோட் பெரும் கூட்டின் பேரன் ஆவார். ஜெர்மனி மற்றும் சுவீடன் நாட்டு ஊடுருவலாளர்களைத் தடுத்ததன் மூலம் பெரும் புகழ் பெற்றார். அதே நேரத்தில் பலம் வாய்ந்த தங்க நாடோடிக் கூட்டத்திற்கு கப்பம் கட்ட ஒப்புக் கொண்டார். 1547ல் மகாரியசால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 V.A. Kuchin (1986). (in ru)Вопросы истории [Questions of History] (2): 174–176. http://www.maxknow.ru/images/upload/articles45/1160.htm. 
  2. "The Faithful Saint Prince Alexandr Nevsky" (உருசிய மொழியில்), article read on 4.11.2010