ரேபரேலி மக்களவைத் தொகுதி
ரேபரேலி (Raebareli Lok Sabha constituency) என்பது வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது இந்திய தேசிய காங்கிரசின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1967 முதல் 1977 வரை, இந்தத் தொகுயிலிருந்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், 2004 முதல் 2024 இல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வரை சோனியா காந்தியும் இதன் உறுப்பினராக இருந்தனர்.
ரேபரேலி UP-36 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
ரேபரேலி மக்களவைத் தொகுதியின் வரைபடம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952–தற்போதுவரை |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுரேபரேலியானது பச்ரவன், ஹர்சந்த்பூர், ரேபரேலி, சரேணி, உஞ்சஹர் உள்ளிட்ட ஐந்து சட்டமன்றத்தொகுதிகளை உள்ளடக்கியது.[1]
மக்களவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | பெரோஸ் காந்தி | இதேகா[2] | |
1957 | |||
1960^ | ஆர். பி. சிங் | ||
1962 | பைஜ்நாத் குரீல் | ||
1967 | இந்திரா காந்தி | ||
1971 | |||
1977 | ராஜ் நாராயணன் | ஜனதா கட்சி | |
1980 | இந்திரா காந்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
1980^ | அருண் நேரு | ||
1984 | |||
1989 | சீலா கவுல் | ||
1991 | |||
1996 | அசோக் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | |||
1999 | சதீசு சர்மா | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | சோனியா காந்தி | ||
2006^ | |||
2009 | |||
2014 | |||
2019 | |||
2024 | இராகுல் காந்தி |
^இடைத் தேர்தல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-36-Rae Bareli". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ "1951 India General (1st Lok Sabha) Elections Results".