1998 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியக் குடியரசின் பன்னிரெண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் 1998 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு பன்னிரெண்டாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. எக்கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிட்டவில்லை. தனிப்பெரும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி அடல் பிகாரி வாச்பாய் பிரதமரானார்.
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மக்களவைக்கான 543 தொகுதிகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 605,880,192 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 61.97% ( 4.03pp | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
பின்புலம்
தொகுஇத்தேர்தலின் போது இந்திய மக்களவையில் 533 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் நேரடியாக நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ-இந்தியர்களும் இருந்தனர். முந்தைய தேர்தலுக்குப் பின் அமைந்த ஐக்கிய முன்னணி கூட்டணி அரசுகள் ஒற்றுமையின்மையால் இரண்டு ஆண்டுகளுக்குள் கவிழ்ந்தன. 1996ல் பிற கட்சிகள் எதுவும் ஆதரவளிக்க முன்வராததால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த பாரதிய ஜனதா கட்சி இரு ஆண்டுகளுள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் வெற்றி கண்டது. அதிமுக, பாமக, மதிமுக, சிவ சேனா, லோக் சக்தி, அரியானா முன்னேற்றக் கட்சி, ஜனதா கட்சி, என். டி. ஆர். தெலுங்கு தேசம் (சிவபார்வதி) ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது. இக்கூட்டணி 254 இடங்களை வென்றது. அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லையெனினும் தனிப்பெரும் கூட்டணி என்பதால் குடியரசுத் தலைவர் தேஜகூ கூட்டணியின் தலைமையில் ஆன பாஜக கட்சி தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களை ஆட்சியமைக்க அழைத்தார். பிரதமரான பின் வெற்றி பெற்ற இதரக்கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் துணையுடன், 286 உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் தனது தனிப்பெரும்பான்மையை நிருபித்தார்.
முடிவுகள்
தொகுமொத்தம் 61.97% வாக்குகள் பதிவாகின.
கட்சி | கூட்டணி | % | இடங்கள் |
பாஜக | தே.ஜ. கூட்டணி | 25.59% | 182 |
காங்கிரசு | காங்கிரசு | 25.82% | 141 |
சிபிஎம் | ஐக்கிய முன்னணி | 5.40% | 32 |
சமாஜ்வாதி கட்சி | 4.93% | 20 | |
அதிமுக | தே.ஜ. கூட்டணி | 1.83% | 18 |
ராஷ்டிரீய ஜனதா தளம் | ஜன மோர்ச்சா | 2.78% | 17 |
தெலுங்கு தேசம் | 2.77% | 12 | |
சமதாக் கட்சி | தே.ஜ. கூட்டணி | 1.76% | 12 |
சிபிஐ | ஐக்கிய முன்னணி | 1.75% | 9 |
பிஜு ஜனதா தளம் | தே.ஜ. கூட்டணி | 1.00% | 9 |
அகாலி தளம் | தே.ஜ. கூட்டணி | 0.81% | 8 |
திரிணாமுல் காங்கிரசு | தே.ஜ. கூட்டணி | 2.42% | 7 |
ஜனதா தளம் | ஐக்கிய முன்னணி | 3.24% | 6 |
சுயேட்சைகள் | 2.37% | 6 | |
சிவ சேனா | தே.ஜ. கூட்டணி | 1.77% | 6 |
திமுக | ஐக்கிய முன்னணி | 1.44% | 6 |
பகுஜன் சமாஜ் கட்சி | ஜன மோர்ச்சா | 4.67% | 5 |
புரட்சிகர சோசலிச கட்சி | ஐக்கிய முன்னணி | 0.55% | 5 |
அரியானா லோக் தளம் | 0.53% | 4 | |
பாமக | தே.ஜ. கூட்டணி | 0.42% | 4 |
இந்தியக் குடியரசுக் கட்சி | 0.37% | 4 | |
தமாக | ஐக்கிய முன்னணி | 1.40% | 3 |
லொக் சக்தி | தே.ஜ. கூட்டணி | 0.69% | 3 |
மதிமுக | தே.ஜ. கூட்டணி | 0.44% | 3 |
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | 0.21% | 3 | |
ஃபார்வார்டு ப்ளாக் | ஐக்கிய முன்னணி | 0.33% | 2 |
கேரள முசுலீம் லீக் | காங்கிரசு | 0.22% | 2 |
அருணாச்சல் காங்கிரசு | 0.05% | 2 | |
ராஷ்டிரீய ஜனதா கட்சி | ஜன மோர்ச்சா | 0.56% | 1 |
சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரீய) | ஜன மோர்ச்சா | 0.32% | 1 |
அரியானா முன்னேறக் கட்சி | தே.ஜ. கூட்டணி | 0.24% | 1 |
மஜ்லீஸ்-ஈ-இத்தீஹாதுல் முஸ்லீமன் | 0.13% | 1 | |
இந்திரா காங்கிரசு (மதச்சார்பின்மை) | ஐக்கிய முன்னணி | 0.12% | 1 |
ஜனதா கட்சி | தே.ஜ. கூட்டணி | 0.12% | 1 |
கேரள காங்கிரசு (மணி) | காங்கிரசு | 0.10% | 1 |
ஐக்கிய சிறுபான்மையினர் முன்னணி, அசாம் | 0.10% | 1 | |
இந்திய குடியானவர் மற்றும் உழைப்பாளர் கட்சி | 0.07% | 1 | |
சுயாட்சி மாநிலம் வேண்டுதல் குழு | 0.05% | 1 | |
மணிப்பூர் மாநில காங்கிரசு | 0.05% | 1 | |
சிக்கிம் ஜனநாயக முன்னணி | 0.03% | 1 | |
மொத்தம் | 543 |
கூட்டணி வாரியாக
தொகுகூட்டணி | % வாக்குகள் | இடங்கள் |
---|---|---|
தே. ஜ. கூட்டணி | 37.21% | 254 |
காங்கிரசு கூட்டணி | 26.14% | 144 |
ஐக்கிய முன்னணி | 14.61% | 64 |
ஜன மோர்ச்சா | 8.69% | 24 |
மற்றவர்கள் | 13.35% | 57 |
மொத்தம் | 100% | 543 |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Indian general election, 12th Lok Sabha பரணிடப்பட்டது 2014-10-20 at the வந்தவழி இயந்திரம்