2022 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
2022 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் (2022 Indian presidential election) 16வது இந்தியக் குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் 18 சூலை 2022 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் 9 சூன் 2022 அன்று அறிவித்துள்ளது. முறைப்படியான தேர்தல் அறிவிப்பு 15 சூன் 2022 அன்று வெளியிடப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் 29 சூன் 2022 ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை நாள் 2 சூலை 2022 ஆகும். தேர்தல் நாள் 18 சூலை 2022 மற்றும் தேர்தல் முடிவு 21 சூலை 2022 அன்று வெளியிடப்படும். [1][2][3]
| ||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 99.12% (1.83%) | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||
மாநிலங்கள் வாரியாக வெற்றியாளர்கள் . திரௌபதி முர்மு ஆரஞ்சு, யஷ்வந்த் சின்கா பச்சை. | ||||||||||||||||||||||||||
|
மாநிலங்களவை தலைமைச் செயலாளர் இத்தேர்தலை நடத்துவார். தற்போதுள்ள குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 24 சூலை 2022 அன்றுடன் முடிவடைகிறது.
15 மாநிலங்களில் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவடைந்த பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இத்தேர்தலில் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4,403 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குகள் செலுத்த உள்ளனர். இத்தேர்தலில் யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்பது குறிதது அரசியல் கட்சிகளின் கொறடாக்கள், தங்கள் கட்சியினருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது.
தேர்தல் அட்டவணை
தொகுவ. எண் | நிகழ்வு | நாள் | கிழமை |
---|---|---|---|
1. | தேர்தல் அறிவிக்கை | 15 சூன் 2022 | புதன் கிழமை |
2. | வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் | 29 சூன் 2022 | புதன் கிழமை |
3. | வேட்பு மனு பரிசீலனை நாள் | 30 சூன் 2022 | வியாழன் |
4. | வேட்பு மனு திரும்பப் பெற இறுதி நாள் | 2 சூலை 2022 | சனிக்கிழமை |
5. | வாக்குப் பதிவு நடைபெறும் நாள் | 18 சூலை 2022 | திங்கள் கிழமை |
6. | வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் | 21 சூலை 2022 | வியாழக்கிழமை |
தேர்தல் முறை
தொகுகுடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களால் நேரடியாக வாக்களிக்க முடியாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் (MLA), நாடாளுமன்ற உறுப்பினர் (MP) வாக்களிப்பர்.மொத்தம் வாக்களிப்போர் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4,033 சட்டமன்ற உறுப்பினர்கள் என 4,809 பேர் வாக்களிப்பர். நியமன சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது.1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஒரு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 708 ஆகும். ஆனால், ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் இல்லாததால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு குறைந்தது 700 என்று ஆகிவிட்டது.ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலும் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,200 ஆகும்.மாநில சட்டமன்றத் உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பு 5,43,231 ஆகும்.மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு 10,86,431 ஆக உள்ளது.தேர்தல் அன்று வாக்களிக்க இந்திய வாக்காளர் குழு அதாவது சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்க வாக்கு சீட்டு கொடுப்பர்.அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க பச்சை நிற வாக்கு சீட்டும், சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு நிற வாக்கு சீட்டுட்டில் வாக்களிப்பர்.
மாநிலம், யூனியன் பிரதேசங்கள் | மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை | ஒரு சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு |
---|---|---|
1.ஆந்திர பிரதேசம் | 175 | 159 |
2.அருணாச்சல பிரதேசம் | 60 | 8 |
3.அசாம் | 126 | 116 |
4.பிகார் | 243 | 173 |
5.சத்திஸ்கர் | 90 | 129 |
6.கோவா | 40 | 20 |
7.குஜராத் | 182 | 147 |
8.ஹரியானா | 90 | 112 |
9.இமாச்சல் பிரதேசம் | 68 | 51 |
10.ஜம்மு காஷ்மீர் | 114 | தகவல் தெரியவில்லை |
11.ஜார்க்கண்டு | 81 | 176 |
12.கர்நாடகம் | 224 | 131 |
13.கேரளா | 140 | 152 |
14.மத்திய பிரதேசம் | 230 | 131 |
15.மகாராஷ்ரம் | 288 | 175 |
16.மணிப்பூர் | 60 | 18 |
17.மேகாலயா | 60 | 17 |
18.மிசோரம் | 40 | 8 |
19.நாகாலாந்து | 60 | 9 |
20.ஒடிசா | 147 | 149 |
21.பஞ்சாப் | 117 | 116 |
22.ராஜஸ்தான் | 200 | 129 |
23.சிக்கிம் | 32 | 7 |
23.தமிழ்நாடு | 234 | 176 |
24.தெலங்கானா | 119 | 132 |
25.திரிபுரா | 60 | 26 |
26.உத்தர பிரதேசம் | 403 | 208 |
27.உத்தரக்காண்டு | 70 | 64 |
30.மேற்கு வங்காளம் | 294 | 151 |
31.டில்லி | 70 | 58 |
32.புதுச்சேரி | 30 | 16 |
வேட்பாளர்கள்
தொகு2022 இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் திரௌபதி முர்மு 24 சூன் 2022 அன்று தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது.[4]ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் திரிணாமுல் காங்கிரசு கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்கா 27 சூன் 2022 அன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது.[5]
வேட்பாளரின் பெயர் | புகைப்படம் | பிறந்த நாள் | கட்சி &
கூட்டணி |
வகித்த பதவிகள் | சொந்த மாநிலம் | வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாள் |
---|---|---|---|---|---|---|
திரௌபதி முர்மு | 20 சூன் 1964 (64) வயது | பாஜக | ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் (2015-2021)
ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினர் (2000-2009) ஒடிசா மாநில அமைச்சர் (2000-2004) |
ஒடிசா | 21 சூன் 2022 | |
யஷ்வந்த் சின்கா | 6 நவம்பர் 1937 (84) வயது | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | இந்திய வெளியுறவு துறை அமைச்சர்
(2002-2004) மாநிலங்களவை தலைவர் (1990-1991) இந்திய நிதியமைச்சர்(1990-1991), (1998-2002) மக்களவை உறுப்பினர் (1998-2004), (2009-2014) சார்க்கண்டு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் (2004-2009)
|
சார்க்கண்டு | 21 சூன் 2022 |
கூட்டணி வாரியாக வாக்கு சதவீதம்
தொகுபாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 420 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளன. எந்த அணியையும் சேராத மாநில கட்சிகளுக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 894 வாக்குகள் உள்ளன. பாஜக கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு சுமார் 13 ஆயிரம் வாக்குகள் குறைவாக உள்ளது. மாநில கட்சிகளின் ஆதரவை பெற்று பாரதிய ஜனதா கட்சி நிறுத்தும் வேட்பாளர் எளிதாக வெற்றிபெறுவார் கணிக்கப்படுகிறது.[6]
வாக்காளர்கள் | |||
---|---|---|---|
தேசிய ஜனநாயகக் கூட்டணி | ஐக்கிய முற்போக்கு கூட்டணி | பிறர் | |
மக்களவை உறுப்பினர்கள் | 335 / 540 (62%)
|
109 / 540 (20%)
|
96 / 540 (18%)
|
மாநிலங்களவை உறுப்பினர்கள் | 108 / 226 (48%)
|
54 / 226 (24%)
|
1,414 / 4,785 (30%)
|
மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் | 1,731 / 4,019 (43%)
|
1,038 / 4,019 (26%)
|
1,250 / 4,019 (31%)
|
மொத்தம் | 2,173 / 4,785 (45%)
|
1,198 / 4,785 (25%)
|
1,414 / 4,785 (30%)
|
வாக்குகளின் மதிப்பு
தொகுஅவை | மொத்தம் | |||
---|---|---|---|---|
தேசிய ஜனநாயகக் கூட்டணி | ஐக்கிய முற்போக்குக் கூட்டணி | பிறர் | ||
மக்களவை வாக்குகள் | 2,36,472 | 77,880 | 67,968 | 3,82,320 |
மாநிலங்களவை வாக்குகள் | 76,464 | 35,400 | 46,278 | 1,58,142 |
மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் | 2,17,046 | 1,46,600 | 1,77,575 | 5,41,221 |
மொத்த வாக்குகள் | 5,29,982 | 2,59,880 | 2,91,821 | 10,81,683 |
சதவீதம் % | 49.00% | 24.02% | 26.98% | 100.00% |
தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கூட்டணி | பெற்ற வாக்குகள் | கூட்டணி வாக்குகள் | % | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|
திரௌபதி முர்மு | தேசிய ஜனநாயகக் கூட்டணி | 2,824 | 676,803 | 64.03 | |||||
யஷ்வந்த் சின்கா | ஐக்கிய எதிரணி | 1,877 | 380,177 | 35.97 | |||||
செல்லத்தக்க வாக்குகள் | 4,701 | 1,056,980 | |||||||
செல்லாத வாக்குகள் | 53 | 10,500 | |||||||
மொத்தம் | 4,754 | 100 | |||||||
பதிவான வாக்குகள் | 4,797 | 1,081,991 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Presidential election 2022: Voting on July 18, results on July 21
- ↑ "Presidential elections on July 18, counting, if needed, on July 21: Election Commission". The Indian Express (in ஆங்கிலம்). 2022-06-09. பார்க்கப்பட்ட நாள் 2022-06-09.
- ↑ President election 2022: Election Commission flags off race to Rashtrapati Bhawan – voting on July 18, result on July 21
- ↑ Prez election: NDA candidate Droupadi Murmu files nomination in presence of PM Modi
- ↑ Yashwant Sinha files nomination for presidential election
- ↑ ஜனாதிபதி தேர்தல் - வேட்பாளர் தேர்வில் பிரதமர் மோடி தீவிரம்
- ↑ Presidential elections on July 18, counting, if needed, on July 21: Election Commission