மாநிலங்களவை உறுப்பினர்கள்
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மாநிலங்களவைக்குக் குறிப்பிட்ட அளவிலான உறுப்பினர்கள் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றபடுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்றார்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்குக் குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இன்படி இதன் இருக்கைகள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலக இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-04-20 at the வந்தவழி இயந்திரம்:
மாநிலம் வாரியாக மாநிலங்களவை உறுப்பினர்கள் தொகு
இந்தியாவிலுள்ள மாநிலம் வாரியாக மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கைப் பட்டியல்.
மொத்தம்: 245 [1]
- தேர்தல்கள் மாநிலங்களுக்குள் இருக்கும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களால் ஒற்றை மாற்றுதலுக்குரிய வாக்களிப்பு முறையில் கட்சிகள் பெற்றுள்ள பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடைபெறுகின்றன.
மேற்கோள்கள் தொகு
- ↑ 1952 இல் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களின் அகரவரிசைப்படியான எண்ணிக்கைப் பட்டியல் பரணிடப்பட்டது 2012-02-17 at the வந்தவழி இயந்திரம் மாநிலங்களவை இணையத்தளம்.