ஆந்திரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்
ஆந்திரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர்கள் (List of Rajya Sabha members from Andhra Pradesh) என்பது இந்தியப் பாராளுமன்றத்தின் 245 உறுப்பினர்கள் கொண்ட மேலவையான மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா என அழைக்கப்படுகின்ற அவையில் உள்ள ஆந்திரப்பிரதேசம் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் 11 பேர்களின் பட்டியல் ஆகும். இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். 18 உறுப்பினர்களை கொண்ட ஆந்திரப் பிரதேச மாநிலம், தெலுங்காணா என 2014-ல் பிரிக்கப்பட்ட பின்னர் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆந்திரப் பிரதேசத்திற்கு 11 தெலங்காணாவிற்கு 7 இடங்கள் என ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போதைய உறுப்பினர்கள்
தொகுகுறியீடு: ஒய்.எசு.ஆர்.கா. (9) பாஜக (1) தெதே (1)
வ. எண் | பெயர்[1] | கட்சி | முதல்[2] | வரை[2] | |
---|---|---|---|---|---|
1 | வி.விஜயசாய் ரெட்டி | ஒய் எசு ஆர் கா | 22-சூன்-2022 | 21-சூன்-2028 | |
2 | ஆர். கிருஷ்ணய்யா | ஒய் எசு ஆர் கா | 22-சூன்-2022 | 21-சூன்-2028 | |
3 | எஸ். நிரஞ்சன் ரெட்டி | ஒய் எசு ஆர் கா | 22-சூன்-2022 | 21-சூன்-2028 | |
4 | பீடா மஸ்தான் ராவ் | ஒய் எசு ஆர் கா | 22-சூன்-2022 | 21-சூன்-2028 | |
5 | அல்லா அயோத்தி ராமி ரெட்டி | ஒய் எசு ஆர் கா | 22-சூன்-2020 | 21-சூன்-2028 | |
6 | மோபிதேவி வெங்கடரமண | ஒய் எசு ஆர் கா | 22-சூன்-2020 | 21-சூன்-2028 | |
7 | பில்லி சுபாஷ் சந்திர போஸ் | ஒய் எசு ஆர் கா | 22-சூன்-2020 | 21-சூன்-2028 | |
8 | பரிமல் நத்வானி | ஒய் எசு ஆர் கா | 22-சூன்-2020 | 21-சூன்-2028 | |
9 | வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி | ஒய் எசு ஆர் கா | 03-ஏப்ரல்-2018 | 02-ஏப்ரல்-2024 | |
10 | சி.எம்.ரமேஷ் | பாஜக | 03-ஏப்ரல்-2018 | 02-ஏப்ரல்-2024 | |
11 | கனகமேடல ரவீந்திர குமார் | தெதே | 03-ஏப்ரல்-2018 | 02-ஏப்ரல்-2024 |
உறுப்பினர்கள் பட்டியல்
தொகுஆந்திரப்பிரதேசத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி போன்றவை கொண்ட பட்டியல் இது.
வ.எண். | உறுப்பினர் பெயர் | அரசியல் கட்சி | பதவிக்காலம் |
---|---|---|---|
1 | ஆல்வி ரசீத் | இந்திய தேசிய காங்கிரஸ் | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
2 | ஒய்.எஸ்.சௌத்ரி | தெலுங்கு தேசம் கட்சி | 22-06-2010 முதல் 21-06-2016 வரை |
3 | கான் முகம்மது அலி | இந்திய தேசிய காங்கிரஸ் | 10-04-2008 முதல் 09-04-2014 வரை |
4 | நந்தமூரி ஹரிகிருஷ்ணா | தெலுங்கு தேசம் கட்சி | 10-04-2008 முதல் 09-04-2014 வரை |
5 | நந்தி எல்லையா | இந்திய தேசிய காங்கிரஸ் | 10-04-2008 முதல் 09-04-2014 வரை |
6 | பாட்சா சையது அஜீஸ் | இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
7 | ரமேஷ் ஜெய்ராம் | இந்திய தேசிய காங்கிரஸ் | 22-06-2010 முதல் 21-06-2016 வரை |
8 | டாக்டர்.தாசரி நாராயண ராவ் | இந்திய தேசிய காங்கிரஸ் | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
9 | டாக்டர்.கே.கேசவராவ் | இந்திய தேசிய காங்கிரஸ் | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
10 | கே.வி.பி.ராமச்சந்திரராவ் | இந்திய தேசிய காங்கிரஸ் | 10-04-2008 முதல் 09-04-2014 வரை |
11 | வி.ஹனுமந்தராவ் | இந்திய தேசிய காங்கிரஸ் | 22-06-2010 முதல் 21-06-2016 வரை |
12 | டி.ரத்னாபாய் | இந்திய தேசிய காங்கிரஸ் | 10-04-2008 முதல் 09-04-2014 வரை |
13 | ஜி.சஞ்சீவரெட்டி | இந்திய தேசிய காங்கிரஸ் | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
14 | எம்.வி.மைசூரா ரெட்டி | தெலுங்கு தேசம் கட்சி | 03-04-2006 முதல் 02-04-2012 வரை |
15 | டாக்டர்.என்.ஜனார்த்தன ரெட்டி | இந்திய தேசிய காங்கிரஸ் | 22-06-2010 முதல் 21-06-2016 வரை |
16 | டாக்டர் சுப்பராமி ரெட்டி | இந்திய தேசிய காங்கிரஸ் | 10-04-2008 முதல் 09-04-2014 வரை |
17 | சலீம் ஜேசுதாசு | இந்திய தேசிய காங்கிரஸ் | 22-06-2010 முதல் 21-06-2016 வரை |
18 | சுதாராணி குண்டு | தெலுங்கு தேசம் கட்சி | 22-06-2010 முதல் 21-06-2016 வரை |
- மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.
இதையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Statewise List". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.
- ↑ 2.0 2.1 "Statewise Retirement". 164.100.47.5. பார்க்கப்பட்ட நாள் 12 June 2016.