ததகதா ராய்

இந்திய அரசியல்வாதி

ததகதா ராய் (Tathagata Roy) (பிறப்பு: செப்டம்பர் 14, 1945) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2015 முதல் 2018 வரை திரிபுராவின் ஆளுநராகவும், ஆகஸ்ட் 2018 முதல் ஆகஸ்ட் 2020 வரை தனது பதவிக்காலம் முடியும் வரை மேகாலயாவின் ஆளுநராகவும் பணியாற்றினார்.[3] இவர், 2002 முதல் 2006 வரை பாரதீய ஜனதா கட்சியின் மேற்கு வங்க மாநில பிரிவின் ஆறாவது தலைவராக இருந்தார்.[4] மேலும், 2002 முதல் 2015 வரை பாஜகவின் தேசிய நிர்வாக உறுப்பினராகவும் இருந்தார்.[5]

ததகதா ராய்
மேகாலாயாவின் 18வது ஆளுநர்
பதவியில்
27 ஜனவரி 2020 – 18 ஆகஸ்ட் 2020
முதலமைச்சர் கான்ராட் சங்மா
முன்னவர் ஆர். என். இரவி
பின்வந்தவர் சத்யபால் மாலிக்
பதவியில்
25 ஆகஸ்ட் 2018 – 18 திசம்பர் 2019
மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா
முன்னவர் கங்கா பிரசாத்
பின்வந்தவர் ஆர். என். இரவி
திரிபுராவின் பதினாறாவது ஆளுநர்
பதவியில்
20 மே 2015 – 25 ஆகஸ்ட் 2018
முதலமைச்சர் மாணிக் சர்க்கார்
பிப்லப் குமார் தேவ்
முன்னவர் பத்மநாப ஆச்சார்யா
பின்வந்தவர் காப்தன் சிங் சோலங்கி
அருணாச்சலப் பிரதேசத்தின் பதினாறாவது ஆளுநர்
பதவியில்
10 ஜூலை 2016 – 12 ஆகஸ்ட் 2016
முஹ்ட்லமைச்சர் கலிகோ புல்
நபம் துக்கி
பெமா காண்டு
முன்னவர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா
பின்வந்தவர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா
பாரதிய ஜனதா கட்சி, மேற்கு வங்காளம்
பதவியில்
2002–2006
முன்னவர் அசிம் கோஷ்
பின்வந்தவர் சுகுமார் பானர்ஜி
தனிநபர் தகவல்
பிறப்பு 14 செப்டம்பர் 1945 (1945-09-14) (அகவை 78)[1]
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
உறவினர் சௌகத்தா ராய்[2]
(brother)
இருப்பிடம் ஆளுநர் மாளிகை, சில்லாங்
படித்த கல்வி நிறுவனங்கள் வங்காள பொறியியல் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் (பொறியியல்)
கொல்கத்தா பல்கலைக்கழகம் (சட்டம்)

ராய் சிலகாலம் அருணாச்சல பிரதேச ஆளுநர் அலுவலகத்தில் 2016 ஜூலை முதல் 2016 ஆகஸ்ட் வரை கூடுதல் பொறுப்பைக் கொண்டிருந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து முதலமைச்சர் கலிகோ புல் பதவி விலகியைத் தொடர்ந்து புதிய முதலமைச்சராக பெமா காண்டுவுக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்தார். பயிற்சியின் மூலம் இவர் ஒரு பொறியியலாளராக இருக்கிறார். இவர், முன்னாள் பேராசிரியரும், ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் கட்டுமானப் பொறியியல் துறையின் நிறுவனத் தலைவருமாவார்.[5]

அரசியல் தொகு

இந்து தேசியவாதத்தின் சித்தாந்தமான இந்துத்துவத்த்தல் ஈர்க்கப்பட்டு 1986 இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) சேர்ந்தார். அரசுப் பணியை விட்டு வெளியேறிய இவர் 1990 ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இவர் 2002இல் பாஜகவின் மேற்கு வங்க மாநில பிரிவின் தலைவராக ஆஷிம் கோஷுக்கு பிறகு நியமிக்கப்பட்டார். இவருக்குப் பிறகு சுகுமார் பானர்ஜி 2006 இல் தலைவரானார்.[6]

2009இல் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளராக மேற்கு வங்கத்தின் வடக்கு கொல்கத்தா தொகுதியில் நின்றுதோற்றார். இவர் 2014 இந்திய பொதுத் தேர்தலுக்கான தெற்கு கொல்கத்தா நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நின்று, மொத்த வாக்குகளில் 25.29% வாக்குகளைப் பெற்றார். இவர் 12 மே 2015 அன்று திரிபுராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[7] பின்னர், ஆகஸ்ட் 2018 இல் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு மேகாலயாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டு,[8] 2019 திசம்பர் வரை பணியாற்றினார். ஒரு குறுகிய மருத்துவ விடுப்புக்குப் பிறகு, மீண்டும் ஜனவரி 2020 முதல் 2020 ஆகஸ்ட் 18 வரை தனது ஐந்தாண்டு கால பதவியை நிறைவுசெய்து, தனக்குப் பின் ஆளுநரான சத்ய பால் மாலிக்கிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.[9]

குடும்பம் தொகு

அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும் , மன்மோகன் சிங் அமைச்சரவையின் முன்னாள் நகர அபிவிருத்தி அமைச்சருமான சௌகதா ராயின் மூத்த சகோதரர் ஆவார்.[6] கொல்கத்தாவின் பி.கே.சி கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்த அனுராதாவை மணந்தார். இவர்களுக்கு மாலினி, மதுரா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Governor's Profile". Raj Bhavan ,Tripura. http://rajbhavan.tripura.gov.in/gov_profile. பார்த்த நாள்: 21 May 2018. 
  2. Sujit Nath (20 August 2020). "Tathagata and Saugata Roy: What Roles Will 'Ram and Lakhan' Play in the 2021 Bengal Polls?". சிஎன்என்-ஐபிஎன். https://www.news18.com/news/politics/tathagata-saugata-roy-what-roles-will-ram-and-lakhan-play-in-the-2021-bengal-polls-2804513.html. பார்த்த நாள்: 22 August 2020. 
  3. "Meghalaya State Portal". http://meghalaya.gov.in/megportal/government/keycontact/14794. 
  4. "The Tribune, Chandigarh, India - Nation". http://www.tribuneindia.com/2002/20021019/nation.htm#8. 
  5. 5.0 5.1 "Governor of Meghalaya". 25 August 2018. http://meghalaya.gov.in/megportal/government/keycontact/14794. 
  6. 6.0 6.1 "Governor of Meghalaya". 25 August 2018. http://meghalaya.gov.in/megportal/government/keycontact/14794. "Governor of Meghalaya" பரணிடப்பட்டது 2020-03-05 at the வந்தவழி இயந்திரம். 25 August 2018.
  7. "Tathagata Roy Sworn-In as Tripura Governor". 20 May 2015. https://www.ndtv.com/india-news/tathagata-roy-sworn-in-as-tripura-governor-764735. 
  8. "Tathagata Roy sworn in as Meghalaya governor". 25 August 2018. https://www.hindustantimes.com/india-news/tathagata-roy-sworn-in-as-meghalaya-governor/story-VRDvNral4ByFkrxvOR456L.html. 
  9. "Satya Pal Malik Appointed Meghalaya Governor, to Replace Tathagata Roy". 18 August 2020. https://www.news18.com/news/india/satya-pal-malik-appointed-meghalaya-governor-to-replace-tathagata-roy-2797255.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ததகதா_ராய்&oldid=3557068" இருந்து மீள்விக்கப்பட்டது