பெமா காண்டு

இந்திய அரசியல்வாதி

பெமா காண்டு என்பவர் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு உயிரிழந்த, முன்னாள் முதல்வர் டோர்ஜீ காண்டுவின் முதல் மகன் ஆவார். இவர்தான் இந்தியாவின் மிகவும் இளம் வயது முதல்வராவார். தந்தையின் மறைவைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் சட்டமன்றத்துக்குப் போட்டியிட்டு, 2011 இல் முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். பின் 2014ல் நடந்த தேர்தலில், முக்தோ தொகுதியில் இருந்து போட்டியின்றி வென்றார். இவர் தில்லி பல்கலைக் கழகத்தின் இந்துக் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றவர். இதற்கு முன் நபம் துக்கி அமைச்சரவையில் மாநில நீர்வளம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[2] நுபம் துகி அரசுக்கு எதிராக கலிகோ புல் தலைமையில் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சியைக் கவிழ்த்தபோது, தனது அமைச்சர் பதவியைவிட்டு விலகினார். இதற்கிடையில் நுபம் துகி தொடர்ந்த வழக்கில் ஆளுநர் ஆட்சியைக் கலைத்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து. நபம் துக்கி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். சட்டமன்றம் கூடியபோது நபம் துக்கியும், சட்ட மன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக, பெமா காண்டுவை புதிய முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர்.[3]

பெமா காண்டு
Pema Khandu
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 சூலை 2016
முன்னையவர்நபம் துக்கி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1979-08-21)21 ஆகத்து 1979
கயாங்கர் கிராமம், தவாங் மாவட்டம்
தேசியம்இந்தியர்
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்3 (2 மகன்கள் 1 மகள்)
வாழிடம்தவாங் மற்றும் இட்டாநகர்
முன்னாள் கல்லூரிஇந்து கல்லூரி, (தில்லி பல்கலைக்கழகம்)
வேலைஅரசியல்வாதி
மூலம்: [[1]]

மேற்கோள்கள்

தொகு
  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; c என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "அருணாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக பெமா காண்டு பதவி ஏற்றார்!". தமிழ் மித்ரன். பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2016.
  3. "அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு அமைச்சரவை குறித்து விரைவில் முடிவு". தினமலர். 17 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெமா_காண்டு&oldid=3597901" இலிருந்து மீள்விக்கப்பட்டது