மூலனூர்

இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும்.

மூலனூர் (ஆங்கிலம்:Mulanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்திலுள்ள, தாராபுரம் வட்டத்தில் உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலமையிடமும், தேர்வு நிலை பேரூராட்சி ஆகும்.

மூலனூர்
மூலனூர்
இருப்பிடம்: மூலனூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°46′N 77°43′E / 10.77°N 77.72°E / 10.77; 77.72ஆள்கூறுகள்: 10°46′N 77°43′E / 10.77°N 77.72°E / 10.77; 77.72
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் தாராபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

15,223 (2011)

314/km2 (813/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

48.5 சதுர கிலோமீட்டர்கள் (18.7 sq mi)

238 மீட்டர்கள் (781 ft)

இணையதளம் www.townpanchayat.in/mulanur

இப்பேரூராட்சி பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாகும். மழைப் பொழிவை ஆதாராமாகக் கொண்டு இப்பகுதியில் விவசாய பணிகளும், கால்நடைகள் வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. முருங்கைக்காய், மிளகாய் மற்றும் கண்வலி கிழங்கு என்ற மருத்துவ தன்மையுள்ள கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பேரூராட்சி பகுதி முழுமைக்கும் காவிரி ஆற்றின் நீரை கொடுமுடி என்ற இடத்திலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

அமைவிடம்தொகு

இப்பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 67 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே மேற்கில் தாராபுரம் 20 கிமீ; வடக்கில் வெள்ளக்கோயில் 18 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்புதொகு

இது 48.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 105 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,617 வீடுகளும், 15,223 மக்கள்தொகையும் கொண்டது.[4]

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 10°46′N 77°43′E / 10.77°N 77.72°E / 10.77; 77.72 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 238 மீட்டர் (780 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. மூலனூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Mulanur Population Census 2011
  5. "Mulanur". Falling Rain Genomics, Inc. ஜனவரி 30 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |accessyear= ignored (உதவி); Check date values in: |accessdate= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலனூர்&oldid=3296329" இருந்து மீள்விக்கப்பட்டது