சுல்தான்பேட்டை

இது தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் சூலூர் வட்டத்தில் அமைந்துள்ள ஓர் வருவாய் கிராமம் ஆகும்.

சுல்தான்பேட்டை (Sultanpet) இந்தியாவின் கோயம்புத்தூர் மாவட்டத்தின், சூலூர் வட்டத்தில் வாரப்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள ஓர் கிராமம் ஆகும். இது முன்பு காமநாயக்கன்பாளையம் காவல் வட்டத்தில் அமைந்திருந்தது. தற்போது கருமத்தம்பட்டி காவல் வட்டத்தில் உள்ளது. இது சூலூர் சட்டமன்ற தொகுதிக்கும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். கோயம்புத்தூரிலிருந்து கிழக்கே 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊரானது திருப்பூர் - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊரானது சுமார் ஐந்து வார்டுகளைக் கொண்டுள்ளது. இவ்வூருக்கு அருகில் புகழ்பெற்ற காமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இது சுல்தான்பேட்டை ஒன்றியத்தின் தலைமையகம் ஆகும். இதன் தலைமையகம் செஞ்சேரிப்பிரிவில் இயங்கி வருகிறது.

எல்லைகள் தொகு

சுல்தான்பேட்டை வட்டத்தின் எல்லைகளாக வடக்கில் சூலூர் மற்றும் பல்லடம்; கிழக்கில் பொங்கலூர் எல்லைகளாகக் கொண்டது.

அருகில் உள்ள நகரங்கள் தொகு

திருப்பூர், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மற்றும் பல்லடம் சுல்தான்பேட்டைக்கு அருகில் உள்ள நகரங்களாகும்.

போக்குவரத்து தொகு

சுல்தான்பேட்டையில் இருந்து நேரடியாக கோயம்புத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், பெருந்துறை, ஊத்துக்குளி, குருவாயூர், திருச்சூர், வால்பாறை, உடுமலைப்பேட்டை, பழநி, சூலூர், செஞ்சேரிமலை, காமநாயக்கன்பாளையம் போன்ற நகரங்களுக்கு செல்லலாம். திருப்பூர் - பொள்ளாச்சி வழிதடத்தில் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை பேருந்து இயக்கப்படுகிறது.

கல்வி நிறுவனங்கள் தொகு

  • அரசு உயர்நிலைப்பள்ளி, சுல்தான்பேட்டை,
  • அங்கன்வாடி மையம் ஒன்று,
  • பொது நூலகம் ஒன்று.

ஒன்றிய அலுவலகங்கள் தொகு

  • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம்,
  • வட்டாரக் கல்வி அலுவலகம்,
  • ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,
  • வட்டார நெடுஞ்சாலை துறை அலுவலகம்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தான்பேட்டை&oldid=3793633" இலிருந்து மீள்விக்கப்பட்டது