அந்தியூர்
அந்தியூர் (ஆங்கிலம்:Anthiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர் வட்டம் மற்றும் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமைடமும், பேரூராட்சியும் ஆகும். அந்தியூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அந்தியூர் | |
— வட்டம் — | |
ஆள்கூறு | 11°34′38″N 77°35′16″E / 11.577100°N 77.587700°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | அந்தியூர் வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | அந்தியூர் |
சட்டமன்ற உறுப்பினர் |
ஏ. ஜி. வெங்கடாசலம் (திமுக) |
மக்கள் தொகை | 21,086 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | www.townpanchayat.in/anthiyur |
அந்தியூரின் மையப் பகுதியில் காமராசர் பேருந்து நிலையமும்“ வார சந்தையும், பத்ரகாளியம்மன் கோவிலும் அமைந்துள்ளது. அந்தியூர் வெற்றிலை மிகவும் பெயர் பெற்றதாகும். வேளாண்மையே இவ்வூரின் முதன்மையான தொழிலாகும். இவ்வூர் குருநாதசுவாமி பண்டிகைக்கு பிரபலமானது.
அமைவிடம்
தொகுஅந்தியூர் பேரூராட்சிக்கு கிழக்கே ஈரோடு 33 கிமீ; மேற்கே கோபிச்செட்டிப்பாளையம் 25 கிமீ; வடக்கே மேட்டூர் 39 கிமீ; தெற்கே திருப்பூர் 70 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு3.24 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 85 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,044 வீடுகளும், 21,086 மக்கள்தொகையும் கொண்டது.[5]
ஆன்மீகத் தலங்கள்
தொகுஇங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலும் குருநாதசாமி கோவிலும் இவ்வூரில் புகழ்பெற்றவை. மேலும் குருநாதசாமி தேர்த்திருவிழாவின் போது நடைபெறும் குதிரை, மாட்டுச் சந்தையும் புகழ்பெற்றதாகும். அந்தியூருக்கு சுமார் 8 கி.மீ தொலைவில் மலைக்கருப்புசாமி கோவில் உள்ளது. சித்திரை மாதம் திருவிழா நடக்கும்.அப்போது மடப்பள்ளி அமைந்திருக்கும் கரட்டுப்பாளையத்திலிருந்து கருப்புசாமி , தவசியப்பன் மற்றும் முனியப்பன் ஆகிய சாமிகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு இரண்டு நாட்கள் மலையடிவாரத்தில் இருக்கும் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.அதுசமயம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் திருவிழாவிற்கு வந்து பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செய்து வழிபடுவார்கள்.
நீர்வளம்
தொகுஇவ்வூரில் வரட்டுப்பள்ளம் என்ற அணை உள்ளது. மேலும் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி , எண்ணமங்கலம் ஏரி ஆகிய ஏரிகளும் உள்ளன.
படத்தொகுப்பு
தொகு-
அருள்மிகு குருநாதசுவாமி திருஉருவம்
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அந்தியூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Anthiyur Population Census 2011