கே. ஈஸ்வரசாமி

தமிழக அரசியல்வாதி

கே. ஈஸ்வரசாமி என்பவர் தமிழக தொழிலதிபரும் அரசியல்வாதியும் ஆவார்.[1] திமுகவைச் சேர்ந்தவரான இவர் இந்தியப் பொதுத் தேர்தல் 2024-ல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

கே. ஈஸ்வரசாமி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்கு. சண்முகசுந்தரம்
தொகுதிபொள்ளாச்சி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிமுக
வேலைஅரசியல்வாதி

முந்தைய வாழ்க்கை

தொகு

ஈஸ்வரசாமி தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், மைவாடி ஊராட்சி, கருப்புசாமி புதுரை பூர்வீகமாக கொண்டவர். ஈஸ்வரசாமி பத்தாம் வகுப்புவரை படித்துள்ளார். திருமணமான இவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவியான லதாபிரியா மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக உள்ளார். ஈஸ்வரசாமி இருசக்கர வாகன விற்பனையகம், நூற்பாலை, சல்லிக் கல்,செயற்கை மணல் ஆகிய தொழில்களைச் செய்துவருகிறார்.

அரசியல் வாழ்வு

தொகு

திமுகவில் செயல்பட்டுவரும் ஈஸ்வரசாமி கட்சியில் ஒன்றிய பிரதிநிதி, ஒன்றிய பொருளாளர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்தார். தற்போது மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளராக பதவிவகிக்கிறார். மேலும் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவராகவும் உள்ளார்.[2] இந்தியப் பொதுத் தேர்தல் 2024-ல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

தேர்தல்கள்

தொகு

மக்களவைத் தேர்தல்

தொகு
தேர்தல்கள் தொகுதி கட்சி முடிவு பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு இரண்டாம் இடம்பெற்ற வேட்பாளர் இரண்டாம் இடம்பெற்ற கட்சி இரண்டாம் இடம்பெற்ற வேட்பாளர் பெற்ற வாக்கு விழுக்காடு
2024 இந்தியப் பொதுத் தேர்தல் பொள்ளாச்சி திமுக வெற்றி 5,32,763 47.37% ஏ. கார்த்திகேயன் அதிமுக 24.98%[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Eswarasamy K(DMK):Constituency- POLLACHI(TAMIL NADU) - Affidavit Information of Candidate:". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. "பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி - சிறு குறிப்பு". 2024-03-21. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  3. பொள்ளாச்சி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2024 ஒன்இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஈஸ்வரசாமி&oldid=4007200" இலிருந்து மீள்விக்கப்பட்டது