தங்க மனசுக்காரன்

தங்க மனசுக்காரன் (Thanga manasukkaaran) 1992 ஆம் ஆண்டு முரளி மற்றும் சிவரஞ்சனி நடிப்பில், இளையராஜா இசையில், ராஜவர்மன் இயக்கத்தில், ஆர். தனபாலன் தயாரிப்பில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1][2][3]

தங்க மனசுக்காரன்
இயக்கம்ராஜவர்மன்
தயாரிப்புஆர். தனபாலன்
கதைராஜவர்மன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஜி. ராஜேந்திரன்
படத்தொகுப்புஎம். கணேசன்
கலையகம்யாகவா புரொடக்சன்ஸ்
வெளியீடுமார்ச்சு 20, 1992 (1992-03-20)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம் தொகு

பாடாகரான முருகேஷ் என்கிற முருகன் (முரளி) தன் இசைக்குழுவுடன் ஒரு கிராமத்திற்கு வருகிறான். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கிளி (சிவரஞ்சனி) பல வருடங்களுக்கு முன் சிறுவயதில் காணாமல்போன தன் காதலன் முருகனுக்காகக் காத்திருக்கிறாள். அவளது உறவினரான துரைப்பாண்டி (ஜி. எம். சுந்தர்) அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறான். செல்லக்கிளி யாருக்காக காத்திருக்கிறாளோ தொலைந்துபோன அவளின் காதலன் தான்தான் என்று அவளுக்குப் புரியவைக்கிறான் முருகேஷ். மேலும் தான் ஊரைவிட்டுச் சென்றதற்கானக் காரணத்தையும் அவளிடம் கூறுகிறான்.

கடந்தகால கதை: செல்லக்கிளியின் தந்தை (விஜயகுமார்) அவளை ஆதரவற்ற அனாதையாக இருந்தாலும் நல்லவனான முருகனுக்குத் திருமணம் செய்ய விரும்புகிறார். செல்லக்கிளியின் அத்தை யசோதை (சி. ஆர். சரஸ்வதி) தன் மகன் துரைப்பாண்டிக்கு செல்லக்கிளியைத் திருமணம் செய்ய விரும்புகிறாள். எனவே சிறுவயதிலேயே முருகனை மிரட்டி ஊரைவிட்டுத் துரத்துகிறாள். ஊரை விட்டு போன முருகன் பாடகனாகிறான். தன் காதலி செல்லக்கிளியை மறக்க முடியாததால் அவளைத் தேடிவருகிறான்.

முருகன் திரும்பிவந்ததை அறியும் துரைப்பாண்டி மற்றும் யசோதை இருவரும் செல்லக்கிளியின் தந்தையிடம் முருகன் யார் என்பதை மறைத்து, எங்கிருந்தோ வந்த அவனை செல்லக்கிளி காதலிக்கிறாள் என்று பொய்யுரைக்கின்றனர். இதையறிந்த அவள் தந்தை முருகனைப் பற்றிய உண்மையறியாமல் அவர்கள் காதலை எதிர்க்கிறார். இறுதியில் முருகேஷ் - செல்லக்கிளி திருமணம் நடந்ததா? என்பதே முடிவு.

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் கங்கைஅமரன், காமகோடியன் மற்றும் பிறைசூடன்.[4][5]

வ. எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 மணிக்குயில் இசைக்குதடி மனோ 5:04
2 மணிக்குயில் சசிரேகா, மின்மினி 3:15
3 மானே மயங்குவதேனோ மனோ 5:03
4 பாட்டுக்குள்ளே பாட்டிருக்கு மனோ, எஸ். ஜானகி 4:55
5 பூத்தது பூந்தோப்பு மனோ, எஸ். ஜானகி 4:49
6 உடுக்கை சத்தம் மனோ 5:51

மேற்கோள்கள் தொகு

  1. "தங்கமனசுக்காரன்". http://spicyonion.com/movie/thanga-manasukaran/. 
  2. "நடிகர் முரளி". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/actor-murali-dead/article622257.ece. 
  3. "நடிகர் முரளி" இம் மூலத்தில் இருந்து 2010-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100910221459/http://www.indiaglitz.com/channels/tamil/article/59932.html. 
  4. "பாடல்கள்". http://mio.to/album/29-Tamil_Movie_Songs/257132-Thanga_Manasukaran/. 
  5. "பாடல்கள்". http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0002960. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்க_மனசுக்காரன்&oldid=3687843" இருந்து மீள்விக்கப்பட்டது