சின்ன கவுண்டர்
ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சின்ன கவுண்டர் (Chinna Gounder) 1992 ஆம் ஆண்டு ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதில் விஜயகாந்த், சுகன்யா, கவுண்டமணி முதலியோர் நடித்து உள்ளனர். இத்திரைப்படத்தைச் சின்னராயுடு என்ற பெயரில் தெலுங்கிலும் சிக்கெசமான்ரு என்ற பெயரில் கன்னடத்திலும் வேறு நடிகர்களைக் கொண்டு மீளுருவாக்கினார்கள். இத்திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.[1]
சின்ன கவுண்டர் | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஆர் . வி. உதயகுமார் |
கதை | ஆர். செல்வராஜ் |
திரைக்கதை | ஆர் . வி. உதயகுமார் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி |
வெளியீடு | 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- விஜயகாந்த்- சின்ன கவுண்டர் / தவசி
- சுகன்யா- தெய்வானை
- தேவகி- வள்ளி
- மனோரமா- சின்ன கவுண்டரின் தாய்
- சலிம் கெளஸ்- சக்கரை கவுண்டர்
- சத்தியப்பிரியா- சுந்தரி
- கவுண்டமணி- வெள்ளையன்
- செந்தில்
- வடிவேல்- மாகாளி
- கமலா காமேஷ்- பொன்னாத்தா
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் இப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயற்றினார்.[2][3]
வ. எண். | பாடல் | வரிகள் | வரிகள் |
---|---|---|---|
1 | "அந்த வானத்தப் போல" | இளையராஜா | ஆர். வி. உதயகுமார் |
2 | "சின்னக்கிளி வண்ணக்கிளி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | |
3 | "சுத்தி சுத்தி" | மலேசியா வாசுதேவன் | |
4 | "கண்ணுப்பட போகுத்தய்யா" | இளையராஜா | |
5 | "கூண்டுக்குள்ள உன்னவச்சு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | |
6 | "முத்துமணி மால" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | |
7 | "சொல்லால் அடிச்ச" | இளையராஜா | |
8 | "அந்த வானத்த" | எஸ். ஜானகி |
விருதுகள்
தொகு1992 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது மூன்றாம் பரிசு
சான்றுகள்
தொகு- ↑ Malini Mannath (1993-01-01). Run-of-the-mill fare. p. 7. http://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930101&printsec=frontpage. பார்த்த நாள்: 2013-12-23.
- ↑ "Chinna Gounder (Original Motion Picture Soundtrack) by Ilaiyaraaja". Apple Music. 1992. Archived from the original on 2 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
- ↑ "Chinna Gounder Tamil Film Audio Cassette by Ilayaraaja". Mossymart. Archived from the original on 24 November 2021. பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.