என்றாவது ஒரு நாள்

2021இல் வெளியான தமிழ் திரைப்படம்

என்றாவது ஒரு நாள் (Endraavathu Oru Naal) என்பது 2021ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த் , ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தி தியேட்டர் பீப்பிள் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் 8 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது.

என்றாவது ஒரு நாள்
இயக்கம்வெற்றி துரைசாமி
இசைஎன். ஆர். ரகுநந்தன்
நடிப்புவிதார்த்
ரம்யா நம்பீசன்
ஒளிப்பதிவுசண்முக சுந்தரம்
படத்தொகுப்புமு. காசிவிசுவநாதன்
கலையகம்தி தியேட்டர் பீப்பிள்
விநியோகம்ஜீ5
வெளியீடுஅக்டோபர் 8, 2021 (2021-10-08)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • தங்கமுத்துவாக விதார்த்
  • ராசாத்தியாக ரம்யா நம்பீசன்
  • முருகனாக மாஸ்டர் ராகவன்
  • இளவரசு
  • டயானா விசாலினி
  • ராஜேஷ் பாலச்சந்திரன்
  • ஆர். பாஸ்கர்
  • மகேஷ் சண்முகசுந்தரம்

தயாரிப்பு தொகு

சென்னையின் முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இயக்குனராக அறிமுகமான இப்படத்தின் தயாரிப்பு, 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. [1] இப்படத்தின் படப்பிடிப்பு மூலனூரில் நடைபெற்றது. திரையரங்கில் வெளியாவதற்கு முன், திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டு 43 விருதுகளை வென்றது. [2] [3]

ஒலிப்பதிவு தொகு

படத்துக்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

வெளியீடு தொகு

இந்தப் படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 3 அக்டோபர் 2021 அன்று நேரடியாக ஒளிபரப்பாக இருந்தது.[4] மாறாக அக்டோபர் 8 அன்று ஜீ5 தளத்தில் வெளியிடப்பட்டது. [5] தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு விமர்சகர் படத்திற்கு கலவையான விமர்சனம் அளித்து, "இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான நேரமே இருந்தபோதிலும், 45 நிமிட குறும்படம் அம்ச நீளத்திற்கு நீட்டிக்கப்பட்டதைப் போல படம் மிக நீண்டதாக உணரப்படுகிறது" என்று குறிப்பிட்டார். [6] சினிமா எக்ஸ்பிரஸின் ஒரு விமர்சகர், "நல்ல நோக்கத்துடன் மட்டும் படம் எடுக்க வேண்டாம்" என்று எழுதினார். "ரம்யாவும் ராகவனும் தங்களின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் எழுத்து ஆழமாக இருக்கும்போது நடிகர்களால் செய்யக்கூடியது அதிகம்" என்று கூறினார். விமர்சகர் படத்தின் கதையை சமுத்திரக்கனியின் வெள்ளை யானை (2021) மற்றும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (2021) ஆகியவற்றுடன் ஒப்பிட்டார். [7]

சான்றுகள் தொகு

  1. "Vidharth, Ramya Nambeesan team up for 'Endravadhu Oru Naal'". The New Indian Express. Archived from the original on 30 November 2020. பார்க்கப்பட்ட நாள் 6 November 2021.
  2. "'City dwellers are oblivious to issues faced in villages'". The New Indian Express. Archived from the original on 22 October 2021. பார்க்கப்பட்ட நாள் 6 November 2021.
  3. "Vidharth, Ramya Nambeesan team up for Endravadhu Oru Naal". The New Indian Express. Archived from the original on 1 December 2020. பார்க்கப்பட்ட நாள் 6 November 2021.
  4. https://www.youtube.com/watch?v=DUR5vcuH6Y0
  5. https://www.techradar.com/in/news/7-new-movies-and-tv-shows-on-netflix-amazon-prime-hbo-max-and-more-this-weekend-october-8-2021
  6. "Endraavathu Oru Naal is an earnest melodrama". timesofindia.com. Archived from the original on 6 November 2021. பார்க்கப்பட்ட நாள் 6 November 2021.
  7. "Endravathu Oru Naal Movie Review: Good intentions alone don't make a film". The New Indian Express. Archived from the original on 19 October 2021. பார்க்கப்பட்ட நாள் 6 November 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றாவது_ஒரு_நாள்&oldid=3735719" இலிருந்து மீள்விக்கப்பட்டது