மு. காசிவிசுவநாதன்
காசிவிசுவநாதன் (Kasi Viswanathan, பிறப்பு: சனவரி 28, 1968) என்பவர் ஒரு இந்திய திரைப்பட படத் தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ், கன்னடம், மலையாள மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். [1]
மு. காசிவிசுவநாதன் | |
---|---|
பிறப்பு | 28 சனவரி 1968 |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட படத் தொகுப்பாளர் |
தொழில்
தொகுகாசிவிசுவநாதன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் திரைப்படத் துறையில் நுழைந்தார். ஆனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை, மலையாள திரைப்பட தொகுப்பாளரான கே. நாராயணனின் உதவியாளராக பணியாற்றுமாறு கூறி சேர்த்துக்கொண்டார். அதன் பின்னர் இவர் தேவர் மகன் (1992), குருதிபுனல் (1996) போன்ற படங்களில் இணை படத் தொக்குப்பாளராக பணியாற்றினார். பின்னர் ஏ. ஸ்ரீகர் பிரசாத்தின் கீழ் ஒரியா, சிங்களம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளின் படங்களில் பயிற்சி பெற்றார்.[சான்று தேவை]
கமலகாசனின் ஆளவந்தான் (2001) மூலம் படத் தொகுப்பாளராக அறிமுகமானார். அதில் அனிமேஷன் மற்றும் மோஷன் கேப்சர் ஒளிப்படமிகள் சம்பந்தப்பட்ட நுட்பங்களை பரிசோதித்துப்பார்த்தார். இவரது இந்த முதல் படத்திற்கே இவருக்கு சிறந்த படத் தொகுப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதை பெற்றார் . பின்னர் காதல் நகைச்சுவை படமான பம்மல் கே. சம்மந்தம் (2002) இல் பணியாற்றினார். காசி விஸ்வந்தன் பின்னர் டூயட் மூவிசு பதாகையில் பிரகாஷ் ராஜ் தயாரித்த பல தயாரிப்புகளில் படத் தொகுப்பாளராக பணியாற்றினார். [2] பின்னர் இவர் ராதா மோகன், சுசீந்திரன், சீனு இராமசாமி, சுந்தர் சி. உள்ளிட்ட இயக்குனர்களுடன் தொடர்ந்து பணியாற்றினார்.
2016 ஆம் ஆண்டில், சுசீந்திரனின் மாவீரன் கிட்டு (2016) படத்தில் நடிகராக அறிமுகமானார். [3] [4]
திரைப்படவியல்
தொகுபடத் தொகுப்பாளராக
தொகு- ஆளவந்தான் (திரைப்படம்) (2001)
- அப்பாய் (2001)
- பம்மல் கே. சம்பந்தம் (திரைப்படம்) (2002)
- புன்னகை பூவே (2003)
- நாம் (2003)
- வானம் வசப்படும் (2004)
- பொன்னியின் செல்வன் (2005)
- அழகிய தீயே (2005)
- சின்னா (2005)
- சித்திரம் பேசுதடி (2006)
- தலைநகரம் (திரைப்படம்) (2006)
- மொழி (2007)
- வீராப்பு (2007)
- வெள்ளித்திரை (திரைப்படம்) (2008)
- ஆயுதம் செய்வோம் (2008)
- அபியும் நானும் (திரைப்படம்) (2008)
- வெண்ணிலா கபடிகுழு (2009)
- ஐந்தாம் படை (2009)
- நான் மகான் அல்ல (2010)
- தா (2010)
- தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்) (2010)
- கற்றது களவு (2010)
- குள்ளநரி கூட்டம் (2011)
- அழகர்சாமியின் குதிரை (2011)
- ராஜபாட்டை (2011)
- நீர்ப்பறவை (திரைப்படம்) (2012)
- காடு (2014)
- வீரம் (2014)
- இடம் பொருள் ஏவல் (2014)
- சிவப்பு (2015)
- தர்மதுரை (2016)
- மாவீரன் கிட்டு (திரைப்படம்) (2016)
- நெஞ்சில் துணிவிருந்தால் (2017 திரைப்படம்) (2017)
- ஆண் தேவதை (2018)
- மேற்குத் தொடர்ச்சி மலை (திரைப்படம்) (2018)
- கண்ணே கலைமானே (2019)
- நெடுநல்வாடை (திரைப்படம்) (2019)
- 100% காதல் (2019)
- கசடதபற (2019)
நடிகராக
தொகு- மாவீரன் கிட்டு (2016)
குறிப்புகள்
தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-13. பார்க்கப்பட்ட நாள் 2021-05-01.
- ↑ http://www.behindwoods.com/new-videos/tamil-actors/kasi-viswanathan/kasi-viswanathan-interview.html
- ↑ http://www.indiaglitz.com/editor-mukasi-viswanathan-acting-debut-in-maveeran-kittu-vishnu-vishal-sridivya-tamil-news-164852.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-03. பார்க்கப்பட்ட நாள் 2021-05-01.