துளசி (திரைப்படம்)
துளசி (Thulasi) என்பது 1987 இல் அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும் . இத்திரைப்படத்தில் முரளி மற்றும் சீதா நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1987 நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்டது [1]
துளசி | |
---|---|
இயக்கம் | அமீர்ஜான் |
தயாரிப்பு | பி. எசு. வி. அரிகரன் |
திரைக்கதை | அமீர்ஜான் |
இசை | சம்பத் செல்வம் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சி. எசு. இரவிபாபு |
படத்தொகுப்பு | எசு. எசு. நசீர் |
கலையகம் | வீரலட்சுமி கம்பைன்சு |
வெளியீடு | நவம்பர் 27, 1987 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுதிருநாவுக்கரசு கிராம மக்களால் கடவுளாக கருதப்படுகிறார். இருந்தபோதிலும், அவரது மகன் சம்மதம் ஒரு நாத்திகர், அவருக்கு தந்தையின் சக்தியில் நம்பிக்கை இல்லை. மகன் சம்மதம் என்பவரும், பொன்னி என்ற தாழ்த்தப்பட்ட பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். சம்மதத்தின் உற்ற நண்பனான சிவா, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவனாவான். அவன் முதுகலைப் பட்டப்படிப்பில் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுகிறான். திருநாவுக்கரசுவின் மகள் துளசி அப்போது சிவாவைக் காதலிக்கிறாள்.
திருநாவுக்கரசு தனது மகன் சம்மதம் திருமணத்தை சாதி வேற்றுமையால் பொன்னியுடன் ஏற்க முடியாது என்கிறார். சம்மதம் பின்னர் அவளை திருமணம் செய்து கொள்வேன் என்று சவால் விடுகிறார். திருநாவுக்கரசு பொன்னியைக் கொல்ல உதவியாளர்களை நியமிக்கிறார். பொன்னி மறுநாள் தண்ணீரில் இறந்து கிடந்தாள். இதற்கிடையில், சிவாவும் துளசியை காதலிக்கிறார். சிவாவுக்கும் துளசிக்கும் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்
தொகு- முரளி சிவலிங்கமாக "சிவா"
- துளசியாக சீதா
- சந்திரசேகர் சம்மதம்
- திருநாவுக்கரசுவாக மேஜர் சுந்தர்ராஜன்
- செந்தில்
- கானாக சார்லி
- பொன்னியாக தாரா
- சரசுவாக மோகனப்ரியா
- வாத்தியார் ராமன்
- காளியப்பனாக ஏ.கே.வீராசாமி
பாடல்கள்
தொகுவைரமுத்து எழுதிய பாடல்களுக்கு சம்பத் செல்வம் இசையமைத்திருந்தார்.[2] [3]
பாடல் | பாடகர்(கள்) | கால அளவு |
---|---|---|
"அன்பே இது காதல்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே.எஸ்.சித்ரா | 4:37 |
"கதவு தொறந்து" | கே. எஸ். சித்ரா | 4:08 |
"ஊரையெல்லாம்" | கே. ஜே. யேசுதாஸ் | 4:45 |
"வா வா புது" | எஸ். பி. பாலசுப்ரமணியம் | 5:12 |
வரவேற்பு
தொகுஇந்தியன் எக்ஸ்பிரஸ் எதிர்மறையான விமர்சனத்தை வழங்கி "தடுக்கப்பட்ட காதல்" என்று கூறியது. [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "thulasi ( 1987 )". Archived from the original on 19 May 2006. பார்க்கப்பட்ட நாள் 2013-01-18.
- ↑ "Thulasi (1987)". Archived from the original on 9 April 2023. பார்க்கப்பட்ட நாள் 9 April 2023.
- ↑ "Thulasi Tamil Film LP Vinyl Record by Sampath Selvam". Archived from the original on 28 August 2023. பார்க்கப்பட்ட நாள் 28 August 2023.
- ↑ "Thwarted love". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 3 July 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870703&printsec=frontpage&hl=en.