மருதாணி
பண்டைய இந்தியாவின் உடற்கலையில் ஒரு வடிவமே மருதாணி. அதன் அலங்கார வடிவங்கள் மனித உடலில் வரையப்பட்டன. காய்ந்த மருதாணி இலைகள் மூலம் ஆக்கப்பட்ட பசையினால் மருதாணியின் அலங்கார வடிவங்கள் மனித உடலில் வரையப்பட்டன. பண்டைய காலத்திலிருந்தே இந்தியா துணைக்கண்டம், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பெண்களிடம் பிரசித்தி பெற்ற உடற்கலையே மருதாணி எனப்படுகின்றது.
மெஹெந்திகா என்ற சம்ஸ்கிருத சொல்லில் இருந்து மெஹந்தி என்ற சொல் பெறப்பட்டது. மெஹந்தி மற்றும் மஞ்சள் தூளின் பயன்பாடு பற்றி முன்னைய இந்து மத வேத சடங்கு புத்தகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பெண்களின் உள்ளங்கைகளிலே மருதாணி போடப்பட்டாலும் சில வேளைகளில் ஆண்களும் பயன்படுத்தினர். என்றாலும் காலப்போக்கில் பொதுவாக ஆண்களும் பயன்படுத்தும் பொருளாக மருதாணி மாறியது. ஹல்தி (மஞ்சள் பசை பூசுதல்) போன்று மருதாணியும் வேத சடங்குகளுள் ஒன்றாகும். இது உள் மற்றும் வெளி சூரியனை பிரதிநிதித்துவப்படுத்தும் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. வேத சடங்குகள் "உள் ஒளி விழிப்பு" எனும் கருத்தை மையமாகக் கொண்டுள்ளன. பாரம்பரிய இந்திய அலங்காரங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளங்கையில் சூரியன் என இங்கு குறிப்பிடுவது கை மற்றும் கால்களை நோக்கமாகக் கொண்டாகும். உள்ளங்கையில் சூரியன் வடிவம் இடுவது இந்தியாவின் பாரம்பரிய அலங்காரத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
மருதாணி அலங்காரத்தில் பல வேறுபாடுகள் மற்றும் வகைகள் உள்ளன. இவற்றுள் பிரதானமாக அராபிய மருதாணி வடிவம், இந்திய மருதாணி வடிவம் மற்றும் பாகிஸ்தானிய மருதாணி வடிவம் போன்றவற்றைக் குறிப்பிடாலாம். பெண்கள் தமது கைகள் மற்றும் கால்களுக்கு பல்வேறு விதமான மருதாணி அலங்கார வடிவங்களை இடுவார்கள்.
நிறமூட்டியாகப் பயன்படும் மருதாணியின் தோற்றத்திலும் பயன்பாட்டிலும் முரண்பாடுகள் காணப்பட்டாலும் எகிப்திய மம்மிக்கள் முடி மற்றும் நகங்கள் செங்கபில நிறமாக மருதாணி நிற சாயலில் காணப்பட்டது, ஆரம்ப காலத்தில் உடலில் மருதாணி இடப்பட்டது என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். கி.பி.700 இலிருந்து இன்றுவரை கை, கால்களை அலங்கரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மருதாணித்தாவரம் எகிப்தில் தோன்றி இந்தியாவிற்குத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்லப்பட்டதாகத் தாவரவியலாளர்களால் நம்பப்படுகின்றது. வரலாற்று ரீதியாக மருதாணி மருத்துவ நோக்கங்களுக்காகவும், தலைமுடி, தோல் மற்றும் துணிகளுக்குச் சாயமூட்டுவதற்காகவும் குதிரையின் பிடரிமயிர் மற்றும் விலங்குகளின் மென்மை மயிருக்கு நிறமூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.
மருதாணி என்பது தோலினை அலங்காரப்படுத்துவதற்காக உபயோகிக்கின்ற ஒரு தற்காலிக வடிவமாகும். பிரதானமாக இது இந்தியாவின் துணைக் கண்டத்தில் நடைமுறையில் உள்ளது. இது இந்திய சினிமா மற்றும் பொழுதுபோக்குத் தொழிற்துறை என்பவற்றில் மேற்கில் பிரசித்தி பெற்ற ஒன்றாக இருக்கின்றது. நோபல், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகளில் உள்ள மக்கள் கூட மருதாணியைப் பயன்படுதுகின்றார்கள். 1990களிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் மேற்குலகில் மருதாணி அலங்காரங்கள் நவநாகரீகமான ஒன்றாக மாறியிருந்தது. அவர்கள் இதனை ஹெனா டட்டூஸ் (பச்சை குத்துதல்) என அழைத்தனர்.
இந்தியர்களினுடைய பாரம்பரியமான மருதாணியானது விசேடமாக இந்து திருமண வைபவங்களின் போது இந்துக்களினுடைய திரு விழாக்களின் போதும் வழமையாகவே உபயோகப்படுத்தப்படுகின்றது. ஹிந்து திருமணங்கள், பூரணை தினங்கள், தீபாவளி மற்றும் பாய் துஜ், தீஜ் போன்றவற்றை குறிப்பிடலாம். இந்துக்களினுடைய திருவிழாக்களில், அதிகமான பெண்கள் தங்களுடைய கைகள், பாதங்கள் மற்றும் சில வேளைகளில் தங்களுடைய தோற் பட்டைகளிலும் கூட ஹெனா மருதாணியை உபயோகிக்ன்றர்கள். ஆண்களைப் பொறுத்த வரையில் அவர்கள் இவ் மருதாணியைத் தங்களது புஜங்கள், கால்கள், கழுத்தில் இருந்து தண்டெலும்பின் கீழ் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் உபயோகிக்கின்றனர். பெண்களுக்கு மருதாணி அலங்காரம் வழமையாக கையின் உட்புறம், வெளிப்புறங்களில் இடப்படுகின்றது. வெண்மையான பெண்களுக்கு மருதாணி அலங்காரம் மிகவும் தெளிவாக இருக்கும். இயற்கையிலே, மருதாணியில் மெலனின் அளவு குறைவாக இருக்கின்றது. இந்திய துணைக் கண்டத்தில் இருக்கின்ற சில முஸ்லிம்களும் ஈதுல் பித்ர், ஈதுல் அல்ஹா போன்ற இஸ்லாமியப் பெருநாளில் மருதாணி அலங்காரம் போடுகின்றார்கள்.
நவீன காலத்தில் மருதாணியை வழங்கக்கூடிய வரையறுக்கப்பட்ட பாரம்பரிய மருதாணிக் கலைஞர்கள் இருந்த போதிலும் கூட வழமையாகவே மக்கள் உடனடித் தயாரிப்புக்களான ஹெனா மருதாணியை கொள்ளவனவு செய்கின்றனர். இவை பாவிப்பதற்கு இலகுவனவையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கிராமப் புறங்களில் உள்ள பெண்கள் உடன் பறித்த ஹெனா இலைகளுடன் எண்ணெய் சேர்த்து அம்மியிலரைத்து பயன்படுத்துவர். அனால் இது தொழில் முறைசார்ந்து தயாரிக்கப்படும் ஹெனா மருதானியைப்போல் நவநாகரீகமாய், மிகுதியான தெளிந்த வார்ணத்தினுடைய தன்மையை அடைவதில்லை.
ஹெனா பச்சைகுத்துதல் என்ற பதமானது உருவவியல் சார்ந்தது. ஏனெனில் உண்மையில் முறையான பசைகுத்துதல்கள் தோலினுடைய உட்புறத்தில் அறுவை சிகிச்சை மூலம் உட்செலுதப்பட்டு போடப்படுவதால் அவை நிரந்தரமானவை.
அல்ட்டா (Alta), அலட்டா (Alata) அல்லது மஹூர் (Mahur) போன்ற சிவப்பு நிற சாயமானது பொதுவாக ஹெனாவிற்கு பயன்படுத்தப்பட்டு குறிப்பாக இந்தியாவின் சில பிராந்தியங்களில் இவை மணப்பெண்ணின் பாதங்களை அலங்காரப்படுத்த பயன்படுத்தப்பட்டது. உதாரணமாக வங்காளத்தை குறிப்பிடலாம்.
கறுப்பு வர்ணத்தில் பச்சை குத்துவதால் ஏற்பட்ட ஆசை காரணமாக செயற்கையான வர்ணத்தினை (PPD) ஹெனா மருதாணியில் கலந்து பயன்படுத்தியதால் ஒவ்வாமை ஏற்படுவதுடன் 2006இல் பதிவுகள் அவ்வாண்டிற்கான ஒவ்வாமை அமெரிக்க ஒவ்வாமை ஸ்தாபனத்தால் வாக்களிக்கப்பட்டு தெரிவாகியுள்ளது.
பாரம்பரியம்
தொகுமெஹந்தி என்பது பண்டைய இந்திய துணை கண்டத்தில் உருவான சடங்கு கலை வடிவமாகும். இது பொதுவாக திருமணங்களின் போது மணப்பெண்ணிற்காக பயன்படுத்தப்படுகிறது. ராஜஸ்தானில் மாப்பிள்ளையால் மணப்பெண்ணிற்கு நுட்பமாக செய்யப்பட்ட அலங்கார வடிவமைப்புக்கள் இதற்காக வழங்கப்படுகின்றன. அஸாமில் இது திருமணம் தவிர பரந்த அளவில் திருமணமாகாத பெண்கள் மூலம் "ரொங்காலி பிகு" என்னும் வைபவத்தின் போதும் பயன்படுத்தப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் முஸ்லிம்கள் கூட வயது வந்ததற்கான அறிகுறியாகவும் இதை பயன்படுத்தத் தொடங்கினார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் பெண்கள் தங்கள் நகங்கள் மற்றும் கால்விரல் நகங்கள் மற்றும் அவர்களில் கைகளிலும் மருதாணி இடும் பழக்கம் பொதுவாக காணப்படுகிறது.
செயன்முறை
தொகுமருதாணி பேஸ்டை வழக்கமாக தோலில் இடும் போது ஒரு பிளாஸ்டிக் கூம்பு, ஒரு பெயின்ட் தூரிகை அல்லது ஒரு குச்சி பயன்படுத்துகிறது. 15-20 நிமிடங்கள் கழித்து அது காய தொடங்கும் நேரத்தில் எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை சர்க்கரை கலவையை மருதாணி வடிவமைப்ப மீது பயன்படுத்தும் போது மருதாணியை மேலும் இருண்டதாக பெற முடியும். வர்ணப் பகுதியை திசு(Tissue) பிளாஸ்டிக் அல்லது மருத்துவ டேப்பை பயன்படுத்தி உறையிட்டால் உடல் வெப்பம் பூட்டப்பட்டு தோலில் இன்னும் தீவிர நிறம் உருவாகி இருக்கம். இது ஒரு பாரம்பரிய முறையாகும். சில நேரங்களில் இதனை ஒரே இரவில் அல்லது இரண்டு முதல் ஆறு மணி நேரம் அணிந்திருந்து பின்னர் நீக்கிக் கொள்ளலாம். முதலில் நீக்கப்பட் போது இதன் நிறம் வெளிறிய ஆரஞ்சு நிறத்தில் காணப்பட்ட பின்னர் படிப்படியாக 24 முதல் 72 மணி நேர காலத்தில் இரசாயனத் தாக்கம் காரணமாக கறுக்கும். இறுதி நிறமானது செம்மண்ணிறமாகக் காணப்படும். இவ்வாறான மருதாணி இட்டுக் கொள்ள அந்த கலவையின் தரம் மற்றும் வகையைப் பொறுத்து இதனை ஒரு மூன்று வாரம் வரை நீடித்துக் கொள்ள முடியும். அத்துடன் இதனை உடலில் இடும் போது தடிப்பான தோல்; மெல்லிய தோலை விட கருமையான நிறத்தை நீண்ட காலத்திற்கு கொண்டிருக்கும். மேலும் ஆலிவ், எள் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்கள் மூலமாக ஈரப்பதன் அளிக்கும் போது கறைக்கான வாழ்நாளை நீடிக்க முடியாது. அத்துடன் தோல் உரிதல் மருதாணியை மங்கவும் வைக்கின்றது.
திருமணங்களின் போது மருதாணி
தொகுஇந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய இந்து மற்றும் சீக்கிய திருமணங்கள் அநேகமாக மத சடங்குகளாலும் முன் திருமண பின் திருமண நிகழ்கவுளாலும் நீண்ட நாட்களுக்கு நடைபெறும். வெவ்வேறு நாட்களும் நாட்டிலுள்ள பிராந்தியங்களும் அவற்றின் திருமண நிகழ்வுகளை வெவ்வெறு மத சம்பிரதாய கலாசார பழக்கவழக்கங்களின் பின்னனியில் வெவ்வேறு முறையில் கொண்டாடுகின்றன.
இந்த மத வழக்கின் படி இந்த மருதாணி விருந்து நிகழ்வு மணப்பெண் வீட்டிலோ அல்லது திருமண மண்டபங்களிலோ நடைபெறும். இது திருமணத்திற்கு முந்திய இரவோ அல்லது சில தினங்களுக்கு முன்னரோ நடைபெறலாம். பொதுவாக மணமக்கள் இருவரும் இந்த நிகழ்வுக்கு ஒன்றாக பங்கேற்பதுடன் கைதேர்ந்த கலைஞராலோ அல்லது உறவினர்களாலோ மணமகளின் கைகள் மற்றும் கால்களில் மருதானி பூசப்படுகிறது. மருதாணி அலங்காரம் அனேகமாக சிக்கலானதாக மணமகனின் பெயரோ முன்னெழுத்துக்களோ அதற்குள் மறைந்திருக்கும் படி வரையப்படும். இந்நிகழ்வு ஒரு கலகலப்பான கொண்டாட்டமாக நடைபெறுவதில் பெண்களின் நடனமும் பாரம்பரிய பாடல்களும் இளம்பெண்கள் அணிந்திருக்கும் இளஞ்சிவப்பு மஞ்சள் போன்ற கண்கவர் நிற ஆடைகளும் முக்கிய பங்களிக்கிறது. மணப்பெண் விரும்பினால் மணமகனை கிண்டலுக்காக ஊதா நிற ஆடைகளை அணிய செய்யலாம். இதன்போது மணமகன் மேலைத்தேய பாதணிகளை விடுத்து “ஜூட்டி” எனப்படும் பாதணியை அணிவார்.
பாகிஸ்தான் மருதாணி விருந்து என்பது மணமகளில் குடும்பத்தால் கொண்டாடப்படும் முன் திருமண நிகழ்வூகளில் மிக முக்கியமானது. பங்களாதேசில் சம்பிரதாய பூர்வமாக மருதாணி இரு நிகழ்வூகளாக நடைபெறும். ஒரு நிகழ்வு மணமகள் வீட்டாலும் மற்றையது மணமகனின் வீட்டாலும் நடைபெறும். தெற்காசியாவில் இந்தியாவை தவிர பாகிஸ்தான்இ பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் இந்த மருதாணி நிகழ்வுகள் நடைபெறுகிறது. ஐக்கிய இராச்சியத்தில் “பர்மின்ங்ஹம்” எனும் இடம் மருதாணி நிகழ்வூகள் ஏராளமாக நடக்கும் இடமாக கருதப்படுகிறது. மருதாணி முதன்முதலில் எகிப்தியர்களால் சேறுகளை அலங்காரமாக பூசிக் கொள்வதில் இருந்து தொடங்கப்பட்டது.
மேலும் பார்க்க
தொகு- மருதோன்றி
- Alta
- Body painting
- Temporary tattoo