மருதோன்றி
லோசோனியா இனேர்மிஸ்
தமிழக மருதோன்றிச் செடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லோசோனியா
இனம்:
லோசோனியா இனேர்மிஸ்

மருதோன்றிப் பொடி
சூடானியப் பெண் ஒருவரின் கையில் மருதோன்றி

மருதோன்றி (மருதாணி, Lawsonia inermis) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய சிறு மரம் அல்லது புதர் ஆகும்.

பெயர்கள் தொகு

இதற்கு அழவணம், மருதாணி, மருதோன்றி ஆகிய பெயர்கள் உண்டு. அழகை வழங்குவதால், ‘ஐ’வணம் (ஐ-அழகு) என்ற பெயரும் இதற்கு உண்டு. குளிர்ச்சியைக் கொடுப்பதாலும் இது, ஐவணம் (ஐ-கபம்) என்று அழைக்கப்பட்டிருக்கலாம். பாதங்களுக்குப் பயன்படுவதால், சரணம் (சரணம்-பாதம்) என்ற பெயரும் உள்ளது.[1]

விளக்கம் தொகு

இத்தாவரம் ஒரு சிறு மர வகையினைச் சார்ந்தது. இருப்பினும், 5,6 அடி உயரம் வரை வளரும் இயல்புடையது. இச்செடியின் இலைகள் புதர்போல அடர்ந்து காணப்படும்.

இதன் இலைகள், நீளத்தில் ஏறத்தாழ ஒரு அங்குல அளவுக்குள் இருக்கும். அகலத்தில் அரை அங்குல அளவு இருக்கும். இலை அம்பு வடிவமானது. எனவே, இலை நுனிகூராக இருக்கும். இளஇலையின் நிறம், வெளிர்பச்சையாகவும், முதிர் இலை சற்று அடர்பச்சையாகவும் இருக்கும். இதன் மணமுடைய மலர்கள், வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும்.

பயன்கள் தொகு

  • இதன் இலைக் கூழ்மம் கடைகளில் கிடைக்கிறது. அதன் மூலம் வேண்டியவாறு வண்ணமிடலாம். பாரம்பரிய முறையில் இதன் இலைகளைக் கெட்டியாக அரைத்து, கைகளில் இடுவர்.
  • சித்தமருத்துவப்படி, பித்த உடம்பாக இருப்பவருக்கு கருஞ்சிவப்பு தோன்றும். மற்றவருக்கு செஞ்சிவப்பாகத் தோன்றும். சிவப்பு நிறம் தோன்ற காரணமான வேதிய நிறமிக்கு ஆன்தோசயானின் (Anthocyanin) என்று பெயர்.
  • நகசுத்தி எனப்படும் நோய், விரல்களில் வராது தடுக்கும் தன்மையுடையது.
  • இளநரை மாற, கண்கள் குளிர்ச்சி பெற, நல்ல தூக்கம் வர இவ்விலைகளை அரைத்து தலையில் தேய்ப்பர். தவிர பொதுவாகப் பெண்கள் தங்கள் கைகளில் கால்களிலும் மருதோன்றிக் கூழ்மத்தைக் கொண்டு அழகு செய்கின்றனர்.

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. டாக்டர் வி.விக்ரம் குமார் (22 செப்டம்பர் 2018). "மருதாணி… மருதாணி…". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதோன்றி&oldid=3577999" இலிருந்து மீள்விக்கப்பட்டது