அன்பு சங்கிலி

அன்பு சங்கிலி (Anbu sangili) 1991 ஆம் ஆண்டு ஆனந்த் பாபு மற்றும் பேபி ஷாமிலி நடிப்பில், பி. நித்யராஜ் இயக்கத்தில், கே.எஸ். ஸ்ரீனிவாசன் மற்றும் கே. எஸ். சிவராமன் தயாரிப்பில், இளையகங்கை இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3]

அன்பு சங்கிலி
இயக்கம்பி. நித்யராஜ்
தயாரிப்புகே. எஸ். ஸ்ரீனிவாசன்
கே. எஸ். சிவராமன்
கதைபி. நித்யராஜ்
இசைஇளையகங்கை
நடிப்பு
ஒளிப்பதிவுவி. முரளி
படத்தொகுப்புஜி. ஜெயச்சந்திரன்
கலையகம்சிவஸ்ரீ பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 30, 1991 (1991-08-30)
ஓட்டம்100 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

வினோத் (ஆனந்த் பாபு) தன் மனைவி மற்றும் மகள் கீதாவுடன் (பேபி ஷாமிலி) வசிக்கிறார். கீதாவை ஒரு விபத்திலிருந்து விக்டர் (உதயன்) காப்பாற்றுகிறார். விக்டர் செய்த தவறுக்காக அவர் கைதுசெய்யப்பட்டதை அறியும் வினோத் அவரைப் பார்க்கச் சிறைக்குச் செல்கிறான். விக்டர் தன் கடந்த காலத்தை வினோத்திடம் கூறுகிறார்.

யாருமற்ற அனாதையான விக்டர் பாதிரியார் அடைக்கலம் (சாருஹாசன்) நடத்தும் அனாதை இல்லத்தில் வளர்ந்தவன். அநாதை இல்லத்தின் நிதிப் பிரச்சனையை சமாளிக்க ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து நிதி சேர்க்கிறான். ஒரு நாள் தன் ஆட்டோவில் தேவநேசன் (ஸ்ரீகாந்த்) தவறவிட்ட பணப்பையை பத்திரமாக அவரிடமே ஒப்படைக்கிறான் விக்டர். தேவநேசன் விக்டரின் நேர்மையைப் பாராட்டி அனாதை இல்லத்திற்கு 10 இலட்ச ரூபாய் நன்கொடை தருவதாக உறுதியளிக்கிறார். திடீரென தேவநேசன் இறந்துவிட அவரது உதவியாளரான விஸ்வநாத் (உதய் பிரகாஷ்) அப்பணத்தைத் தர மறுக்கிறான். விஸ்வநாதன் சொத்துக்கு ஆசைப்பட்டு தேவநேசனைக் கொன்றதை அறிகிறான் விக்டர், தங்களுக்கு விஸ்வநாதன் தருவதாக சொன்ன பணத்தைத் திருட முடிவுசெய்யும் விக்டர் பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிக்கும்பொழுது, ஆபத்தில் மாட்டிக்கொண்ட கீதாவைக் காப்பாற்றச் சென்று காவலர்களிடம் சிக்குகிறான்.

வினோத் விக்டருக்கு உதவுவதாக வாக்களிக்கிறான். விஸ்வநாதன் தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் கொல்லத் திட்டமிடுகிறான். பாதிரியார் அடைக்கலம், வினோத்தின் மனைவி மற்றும் தேவநேசனின் விசுவாசமான பணியாள் தாஸ் ஆகியோரைக் கொல்கிறான். அதன்பின் வினோத்தும் விக்டரும் எப்படி விஸ்வநாதனை தண்டித்தார்கள் என்பது மீதிக்கதை.

நடிகர்கள் தொகு

இசை தொகு

படத்தின் இசையமைப்பாளர் இளையகங்கை. பாடாலாசிரியர்கள் வாலி, முத்துலிங்கம், செம்பையா மற்றும் எல். ஜி. ராணியின் மைந்தன்.[4][5][6]

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 தட்டுங்கள் தாளங்களே மனோ 5:11
2 நாள் முழுதும் கே. ஜே. யேசுதாஸ், சுனந்தா 5:09
3 மந்திர புன்னகை உமா ரமணன் 5:06
4 ஆட்டந்தான் ஆடத்தான் ராஜா சக்கரவர்த்தி , பேபி கல்பனா 5:08

மேற்கோள்கள் தொகு

  1. "அன்பு சங்கிலி". http://spicyonion.com/movie/anbu-changili/. 
  2. "அன்புசங்கிலி" இம் மூலத்தில் இருந்து 2004-02-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040229064113/http://www.cinesouth.com/cgi-bin/filmography/filmography.cgi?name=anbu%20changili. 
  3. "அன்புசங்கிலி" இம் மூலத்தில் இருந்து 2010-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100204202150/http://jointscene.com/movies/Kollywood/Anbu_Sangili/9931. 
  4. "பாடல்கள்" இம் மூலத்தில் இருந்து 2019-03-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190324092110/https://mio.to/album/Ilayagangai/Anbu%2BSangili%2B(1991). 
  5. "பாடல்கள்". https://itunes.apple.com/album/anbu-sangili-original-motion/id606312985. 
  6. "பாடல்கள்". http://www.saavn.com/s/album/tamil/Anbu-Sangili-2014/p0KgO6EUhGo_. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பு_சங்கிலி&oldid=3704402" இருந்து மீள்விக்கப்பட்டது