ஷாமிலி
பேபி ஷாமிலி என்றும் அறியப்படும் ஷாமிலி (Shamili) மலையாள, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய நடிகை ஆவார். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை அஞ்சலி என்னும் கதாபாத்திரத்தில் 1990 இல் வெளிவந்த திரைப்படமான அஞ்சலியில் நடித்திருந்தார். அவரது சிறப்பான நடிப்புக்காக பாராட்டுப் பெற்றார். மேலும் குழந்தை நட்சத்திரத்திற்கான தேசியத் திரைப்பட விருது கிடைத்தது. மல்லூடி என்னும் மலையாள திரைப்படத்தில் ஆழ்துளை கிணற்றில் மாட்டிக்கொண்ட குழந்தையாக நடித்ததற்கு சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரளா மாநில திரைப்பட விருதைப் பெற்றார் .
ஷாமிலி | |
---|---|
பிறப்பு | ஷாமிலி பாபு திருவல்லா, கேரளா, இந்தியா |
மற்ற பெயர்கள் | பேபி ஷாமிலி |
படித்த கல்வி நிறுவனங்கள் | சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1989-2000 2009-2010 2015-தற்பொழுது வரை |
உறவினர்கள் | ஷாலினி (அக்கா) ரிச்சர்ட் ரிசி (அண்ணா) அஜித் குமார் (அக்காவின் கணவர்) |
ஆரம்ப வாழ்க்கைதொகு
இவர் ஒரு நடிகர்கள் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார். இவர் நடிகர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் நடிகை ஷாலினி ஆகியோரின் தங்கை ஆவார். இவர் பாபு மற்றும் ஆலிஸ் இணையருக்குப் பிறந்தவராவார்.[1] அவரது தந்தை பாபு திரைப்படங்களில் நடிக்கும் நோக்கத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தவராவார். பின்னர் அவர் தனது பிள்ளைகள் மூலம் தனது இலட்சியம் நிறைவேற்றிக்கொண்டார்.[2][3]
தொழில்தொகு
இரண்டு வயதில் ஷாமிலி தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் மணிரத்னத்தின் அஞ்சலி திரைப்படத்தின் வழியாக மிகப்புகழ் பெற்று பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இப்படத்தில் இவர் ஒரு மனவளர்ச்சிக் குறைபாடு கொண்ட குழந்தையாக நடித்தார். இது இவருக்கு சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது.
ஓய்! (2009) என்னும் தெலுங்கு திரைப்படத்தில் சித்தார்த் உடன் இணைந்து கதாநாயகியாக முதல் முறை நடித்தார்.[4] 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஷாமிலி சிங்கப்பூரில் படித்து வேலை செய்தார். தமிழில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து வீர சிவாஜி என்னும் திரைப்படத்தில் நடித்தார்.
குறிப்புகள்தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2019-03-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Archived copy". 7 March 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-09-10 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
- ↑ "Ajith Shalini Marriage Ajith Kumar Wedding Photos Tamil Actor Details". 2008-09-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Baby Shamili debuts opposite Siddharth". IndiaGlitz. 10 September 2018. http://www.indiablitz.com/channels/telugu/article/41391.html. பார்த்த நாள்: 2008-10-11.